“உலகம் உங்கள் கையில்”
கல்வித்துறை சார்பாக,
கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும்
டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக,
“உலகம் உங்கள் கையில்”
என்னும் மாபெரும் திட்டத்தின் கீழ்
10லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் பணிகளை
தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்கள் துவக்கி வைத்தார்.
ஓசூர். ஜன. 5. –
தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்கள்,
ஜனவரி 5-ம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில்
கல்வித்துறை சார்பாக,
கல்லூரி மாணவர்களின்
திறன் வளர்ச்சி மற்றும்
டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக,
“உலகம் உங்கள் கையில்” என்னும்
மாபெரும் திட்டத்தின் கீழ்
10லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் பணிகளை துவக்கி வைத்தார்.
அதைதொடர்ந்து
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கத்தில்,
“உலகம் உங்கள் கையில்”
என்னும் மாபெரும் திட்டத்தின் கீழ்,
மருத்துவம்,
கலை மற்றும் அறிவியல்,
தொழில் பயிற்சியில்
இறுதியாண்டு பயிலும்
681 மாணவ, மாணவிகளுக்கு
மடிக்கணினிகளை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச. தினேஷ்குமார் இ.ஆ.ப.
அவர்கள்,
சட்டமன்ற உறுப்பினர்கள்
திரு.ஒய்.பிரகாஷ்(ஓசூர்),
திரு. தே. மதியழகன்(பர்கூர்)
ஆகியோர் ஜனவரி 5-ம் தேதியன்று வழங்கினார்கள்.
உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை
திட்ட இயக்குநர்
திருமதி. கவிதா,
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர்
மரு.சத்யபாமா,
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்
முனைவர். சௌ.கீதா,
முன்னாள் எம்எல்ஏ
திரு. முருகன்
உள்ளிட்ட பலர் உள்ளனர்.
--------------------------------.