கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
ஓசூர் ஸ்ரீ அழகன் முருகன் மலைக்கோவில்
அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக திரு விழா
ஆயிரக்கணக்கான பக்தர்கள்
அரோகரா கோஷத்துடன் வழிபாடு
ஒசூர். நவ. 3. -
ஸ்ரீஅழகன் முருகன் மலை திருக்கோயில்
விமான கலச மகா கும்பாபிஷேக திருவிழா
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருப்பதி மெஜஸ்டிக் குடியிருப்பு பகுதியில் குன்றின் மீது எழுந்தருளியுள்ள ஸ்ரீ அழகன் முருகன் மலை திருக்கோயில் விமான கலச மகா கும்பாபிஷேக திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
விஷ்ணு - சிவன் - பிரம்மா,
ஓசூர் மாநகரை பொறுத்தவரையில் வேறு எங்குமே இல்லாத வகையில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ள 3 மலைகளின் மீது எழுந்தருளி காட்சி அளிப்பது மிகவும் சிறப்பானதாகும்.
வள்ளி தேவசேனா உடனுறை
ஸ்ரீ அழகன் முருகன்
மலைக்கோயில்
அதற்கு இணையாக தற்போது ஓசூர் – பாகலூர் சாலையில் திருப்பதி மெஜஸ்டிக் குடியிருப்பு பகுதியில் உள்ள மலை மீது எம்பெருமான் முருகன் வள்ளி தேவசேனா உடனுறை ஸ்ரீ அழகன் முருகனாக எழுந்தருளி காட்சி தந்து அருள் பாலிக்கிறார்.
இந்தத் திருக்கோயிலுக்கான புதிய விமானம் மற்றும் கோபுரங்கள் கட்டும் திருப்பணியானது கடந்த ஓராண்டாக மேற்கொள்ளப்பட்டு,தற்போது நிறைவு பெற்றுள்ளது.
அதைத்தொடர்ந்து
ஸ்ரீஅழகன் முருகன் மலைக்கோயிலில் மகா கும்பாபிஷேக திருவிழா கடந்த அக்டோபர் மாதம் 8-ம் தேதி அன்று முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
மகா கும்பாபிஷேக திருவிழா
அதைத்தொடர்ந்து
ஸ்ரீஅழகன் முருகன் மலைக்கோயிலில் மகா கும்பாபிஷேக திருவிழா கடந்த அக்டோபர் மாதம் 8-ம் தேதி அன்று முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
மகா யாகசாலைகள்
திருவிழாவை முன்னிட்டு பிரம்மாண்ட மகா யாகசாலைகள் அமைக்கப்பட்டு நாள்தோறும் பல்வேறு ஹோமங்கள் நடத்தப்பட்டன.
புனித நீர்
அடங்கிய கலசங்களை வைத்து சிறப்பு அர்ச்சனைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வந்தது.
ஆறுகால பூஜைகள்
நவ. 2-ம் தேதியன்று அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவில் முக்கிய நிகழ்வுகளான முதல் கால பூஜை காலையில் துவங்கி இரவு வரை ஆறு கால பூஜைகள் நடைபெற்றன.
அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்
தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நாளான நவ. 3-ம் தேதியன்று புதிதாக அமைந்துள்ள கோபுர விமான கலசத்திற்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது
வேத மந்திரங்கள்
முன்னதாக அதிகாலை சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றதை தொடர்ந்து வேத விற்பன்னர்களின் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் அடங்கிய கலசங்கள் கோபுர விமானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன
புனித நீர் அபிஷேகம்
பின்னர் கலசத்தில் இருந்த புனித நீரை புதிதாக அமைந்துள்ள கோபுர விமான கலசத்தின் மீது ஊற்றி சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன.
மகாதீப ஆராதனைகள்
மூலவர் எம்பெருமான் அழகன் ஸ்ரீ முருகனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு மகாதீப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டன.
சிறப்பு அலங்காரம்
வண்ணமலர்கள் பட்டாடை, ஆபரணங்கள் உள்ளிட்ட சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீஅழகன் முருகன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
முருகனுக்கு அரோகரா...
கந்தனுக்கு அரோகரா...
அப்போது இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியை
காண வந்த ஆயிரக்கணக்கான
பக்தர்கள் பரவசத்துடன்
முருகனுக்கு அரோகரா.... கந்தனுக்கு அரோகரா...
என்ற கோஷம் விண்ணை பிளந்தது
அன்னதானம்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற இந்த மகா கும்பாபிஷேக திருவிழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்ட நிலையில் பொதுமக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக சிறப்பு கண்காணிப்புகளும் மேற்கொள்ளப்பட்டது.
பக்தர்களுக்கு அன்னதானம், தீர்த்த பிரசாதம்
வழங்கப்பட்டது.
திருவிழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
----------------------------------.