கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில்
பத்திரிகையாளர் மற்றும் காவல்துறை இடையே நடந்த 12 ஓவர்
கிரிக்கெட் போட்டி
ஓசூர் ஏஎஸ்பி தலைமையிலான
காவல்துறை அணியினர்
வெற்றி பெற்றனர்.
ஓசூர். பிப்ரவரி. 9. –
12 ஓவர் கிரிக்கெட் போட்டி
ஓசூரில், பத்திரிகையாளர் மற்றும் காவல்துறையினர் இடையே நடந்த
12 ஓவர் கிரிக்கெட் போட்டியில் காவல் துறை அணியினர் வெற்றி பெற்று கோப்பையை தட்டிச்சென்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி,
மத்திகிரி கூட்ரோடு அருகே உள்ள விளையாட்டு திடலில் நடைபெற்ற
கிரிக்கெட் போட்டியில் பத்திரிகையாளர் அணி மற்றும் காவல்துறையினர் அணி ஆகிய இரு அணிகள் பங்கேற்று விளையாடினர்.
இதில் காவல்துறை அணிக்கு
கேப்டன் – ஆக
ஓசூர் ஏஎஸ்பி
அக்ஷய் அணில் வாக்ரே IPS,
தலைமை வகித்தார்.
பத்திரிகையாளர் அணிக்கு
கேப்டன் – ஆக,
சன்டிவி செய்தியாளர்
கார் முகில்
தலைமை வகித்தார்.
166 ரன் குவிப்பு
இந்த 12 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் விளையாட்டு போட்டியை
ஓசூர் ஏஎஸ்பி தொடங்கி வைத்தார்.
முதலில் விளையாடிய
காவல்துறை அணியினர், 12 ஓவர்களில்
166 ரன்களை குவித்தனர்.
அதனை தொடர்ந்து கடினமான
இலக்கை பின்தொடர்ந்த
பத்திரிகையாளர் அணியினர்
ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடினர்.
பின்பு விக்கெட்டுகளை இழக்க தொடங்கினர். 11 ஓவர்களில் 100 ரன்களை தொட்டனர். இதனால்
இறுதியில் 6 பாலுக்கு 66 ரன் தேவை
என்று போட்டி பரபரப்பான
கட்டத்தை எட்டியது.
இறுதியில் பத்திரிகையாளர் அணியினர், 12 ஓவர்களில்
108 ரன்களை மட்டுமே சேர்த்து
வெற்றி வாய்ப்பை இழந்தனர்.
சிறப்பாக விளையாடிய காவல்துறை அணியினர் 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற காவல் துறை அணிக்கு முதல் பரிசுக் கோப்பையும்,
பத்திரிகையாளர் அணிக்கு
இரண்டாவது பரிசுக்கோப்பையும் ஏஎஸ்பி வழங்கினார்.
மேன் ஆப் த மேட்ச்
சிறப்பாக விளையாடிய
ஓசூர் நகர காவல் நிலைய
ஆய்வாளர் நாகராஜ்,
மேன் ஆப் த மேட்ச்
விருது பெற்றார்.
இந்த போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.