கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
இந்து சமய அறநிலையத்துறை சார்பில்
அருள்மிகு மரகதாம்பிகை உடனுறை
சந்திர சூடேஸ்வரர் கோயிலில்
2 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
ரூ. 60 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் வழங்கி வாழ்த்திய
அறநிலையத் துறையினர்
ஒசூர். பிப்.15. –
தமிழக முதலமைச்சரின் அறிவிப்பின்படி
இலவச திருமணம்
ஓசூர் மரகதாம்பிகை உடனுறை
சந்திர சூடேஸ்வரர் கோயிலில்
தமிழக முதலமைச்சரின் அறிவிப்பின்படி
அறநிலையத்துறை சார்பில்
2 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
நடத்தி வைக்கப்பட்டு,
ரூ. 60 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் வழங்கி வாழ்த்தினர்.
அருள்மிகு மரகதாம்பிகை உடனுறை
சந்திர சூடேஸ்வரர் கோயில்
ஓசூரில் மலை மீது அமைந்துள்ள 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த,
பிரசித்தி பெற்ற அருள்மிகு மரகதாம்பிகை உடனுறை
சந்திர சூடேஸ்வரர் கோயிலில்
இந்து சமய அறநிலையத்துறை
சார்பில பிப்ரவரி 14-ம் தேதி காலை
இரண்டு ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது.
இரண்டு ஜோடி
திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பட்டி, அம்பேத்கர் நகரைச் சேர்ந்த
மணமகன் கலைச்செல்வன்,
திருப்பத்தூர் நத்தம் பகுதியைச் சேர்ந்த
மணமகள் கவுசல்யா
மற்றும்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அனுமந்தபுரம் பகுதியைச் சேர்ந்த
மணமகன் சூர்யா,
சூளகிரி காமராஜ் நகரைச் சேர்ந்த
மணமகள் சினேகா
ஆகியஇரண்டு ஜோடிகளுக்கும்
மரகதாம்பிகை உடனுறை சந்திர சூடேஸ்வரர் கோயிலில் திருமணம் நடைபெற்றது.
சீர்வரிசை
அதனை தொடர்ந்து தலா ரூ. 60 ஆயிரம் மதிப்பில் 4 கிராம் தங்கம், கட்டில், மெத்தை, பீரோ, மிக்சி, பாய், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களும் புதுமணத் தம்பதிகளுக்கு வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில்
அறங்காவலர் குழு தலைவர்
ரஜினி செல்வம்,
உறுப்பினர்கள்
விஜயகுமார்,
லோகநாதன்,
செயல் அலுவலர்
சாமிதுரை,
கோயில் அர்ச்சகர்
வாச்சீஸ்வரன்
மற்றும் ஏராளமான பக்தர்கள், புதுமண ஜோடிகளின் குடும்பத்தார்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
----------------------------------------------.