கிருஷ்ணகிரி மாவட்டம்
ஒசூர் மாநகராட்சி
சந்திரசூடேஸ்வரர் கோயில் தேர்திருவிழா
தேர் பேட்டையில்
நிலத்தடியில் மின் வயர்கள் மூலம்
வீடுகளுக்கு மின் இணைப்பு
மேயர்
எஸ்.ஏ. சத்யா
நேரில் ஆய்வு
ஒசூர், ஜன. 6. -
ஒசூர் மாநகராட்சி மலை மீது
அமைந்துள்ள பிரசித்தி பெற்ற
மரகதாம்பிகை உடனுறை
சந்திரசூடேஸ்வரர் கோயில்
தேர்திருவிழாவை முன்னிட்டு
தேர்ப்பேட்டையில் மின்சார வயர்களை நிலத்தடியில் கொண்டு செல்வது குறித்து
மேயர் எஸ்.ஏ. சத்யா
ஆய்வு மேற்கொண்டார்.
மரகதாம்பிகை உடனுறை
சந்திர சூடேஸ்வரர் கோயில்
தேர்த்திருவிழா
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி,
மலை மீது அமைந்துள்ள
பிரசித்தி பெற்ற மரகதாம்பிகை
உடனுறை சந்திர சூடேஸ்வரர்
மலைக்கோயிலில் ஆண்டுதோறும்
மார்ச் மாதம்
சுமார் 80 அடி உயரமுள்ள தேரோட்டத்துடன்
தேர்திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கமாகும்.
இத்தேர் திருவிழாவில் தமிழகத்தின்
பல்வேறு பகுதிகளில் இருந்தும்,
ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய வெளிமாநிலங்களில் இருந்தும்
சுமார் ஒரு லட்சம் பக்தர்கள்
கலந்து கொண்டு சாமி தரிசனம்
செய்கின்றனர்.
இந்தாண்டு மார்ச் மாதம் தேர்திருவிழா
நடைப்பெற உள்ளதை முன்னிட்டு
தேரோட்டம் நடக்கும் தேர்ப்பேட்டை பகுதியில்
அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் அங்குள்ள சாலைகள், கழிவு நீர் கால்வாய்கள் ஆகியவற்றை
மேயர் எஸ்.ஏ. சத்யா
அவர்கள் நேரில் பார்வையிட்டு
ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது ஆண்டுதோறும்
திருவிழா காலங்களில்
தேர்ப்பேட்டையில்
மின்சாரம் நிறுத்தப்பட்டு,
ஒசூரின் மற்ற பகுதி மக்களுக்கும்
இடையூறு ஏற்படுவதை தடுக்கும் விதமாகவும்
தேர்ப்பேட்டையில் தேர் ஓட்டத்தின் போது
மின் கம்பங்களால் இடையூறு ஏற்படுவதை தவிர்க்கும் வகையிலும்,
நிலத்தடியில் மின் வயர்கள் மூலம்
வீடுகளுக்கு மின்சாரம் கொண்டு
செல்வது குறித்தும்
மேயர் எஸ்.ஏ. சத்யா
நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் இதுகுறித்து
ஓசூர் மின்சார வாரிய
செயற்பொறியாளர்
செந்தில் ராஜுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்தப் பணிகளுக்கான உத்தேச மதிப்பு தயாரிக்கும் படியும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்த ஆய்வு பணியின் போது
மாநகர ஆணையாளர் சபீர் ஆலம்
மாநகர சுகாதார குழு தலைவர்
என்.எஸ். மாதேஸ்வரன்,
திமுக பகுதி செயலாளர் ராமு,
அதிமுக பகுதி செயலாளர் ராஜீ,
இலக்கிய அணி சக்திவேல்,
நாகராஜ், முருகன்,
சூடப்பா உள்ளிட்ட
பலர் உடனிருந்தனர்.
------------------------------------------.