தமிழ்நாடு வனத்துறை சார்பில்
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் வனக்கோட்டத்தில்
யானை - மனித மோதல் குறித்த
சிறப்பு விழிப்புணர்வு
கலந்துரையாடல் நிகழ்ச்சி
நடைபெற்றது.
ஓசூர். ஜுலை. 12. -
தமிழ்நாடு வனத்துறை சார்பில்
யானை - மனித மோதல் குறித்த
சிறப்பு விழிப்புணர்வு
கலந்துரையாடல் நிகழ்ச்சி
காவேரி வடக்கு வன உயிரின
சரணாலயத்திற்கு உட்பட்ட
தேன்கனிக்கோட்டை வனச்சரகம்
மரக்கட்ட கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில்
காலை 11:00 மணி அளவில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில்
சிறப்பு விருந்தினராக மூத்த யானை ஆராய்ச்சியாளர்
முனைவர் ந. சிவகணேசன்
அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அவர் பேசும் போது,
தற்பொழுது தேன்கனிக்கோட்டையில் செயல்படுத்தி வரும்
யானை மனித மோதல்
தடுப்பு நடவடிக்கைகள்
பற்றி விவசாய மக்களுக்கு எடுத்துக் கூறினார்.
மேலும் யானைகளால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சமாளிப்பது மற்றும் எவ்வாறு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், யானைகளிடமிருந்து காப்பாற்றி கொள்ள வேண்டிய வழிமுறைகளையும்
எடுத்துக் கூறினார்.
மேலும்
சோலார் வேலி,
யானை அகழிகள்,
போன்றவை இல்லாமல் உயிர்வேலி மற்றும் இதர களப்பணிகள் மூலம் எவ்வாறு யானைகளை விவசாய பூமியில் இருந்து தவிர்ப்பதற்கான ஆலோசனைகளை வழங்கினார்.
யானை - மனித மோதல்களை தடுக்க எடுக்கப்பட்டு வருகிற செயல்திட்டங்களைப் பற்றி வனத்துறை அதிகாரிகள் எடுத்துக் கூறினார்கள்.
இந்த நிகழ்ச்சியில்
வனத்துறை,
காவல்துறை,
வேளாண்துறை,
மின்சாரத்துறை,
வருவாய்த்துறை,
கால்நடைத்துறை,
மருத்துவத்துறை,
ஆகிய துறைகளைச் சார்ந்த அலுவலர்கள்
மற்றும்
மேற்கு மாவட்ட
விவசாய சங்க செயலாளர்
கணேஷ் ரெட்டி,
மற்றும்
முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர்கள்,
தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர்கள்,
ஆகியோர் கலந்து கொண்டு
விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்கள்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி யானைகளுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள முரண்பாட்டை சிறப்பான முறையில் தவிர்ப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.
இதில் ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி,
உரிகம், ஜவளகிரி, ராயக்கோட்டை ஆகிய வனச்சரகங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் மலை கிராமமக்கள் கலந்து கொண்டனர்.