ஓசூர் ஒன்றியம்
தொரப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளி
மாணவர்களுக்கு கணிதம், அறிவியல்
எளிதாக கற்பிக்கும்
“வித்யாவின்(vidya Win)
கல்வி செயலி(APP)”
விளையாட்டு சீருடைகள்
நன்கொடையாக வழங்கிய
பெங்களுரு தனியார் நிறுவனம்
ஓசூர். ஜனவரி. 10. –
திருக்குறள்
“கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை”
பெங்களுரு
“வித்யாவின் கல்வி செயலி ”
நன்கொடை
ஓசூர் ஒன்றியம் தொரப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு எளிதாக கணிதம், அறிவியல் கற்கும் வகையில்
54 கல்வி செயலி(APP) மற்றும் 111 விளையாட்டு சீருடைகளை பெங்களுரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் வித்யாவின் சார்பில் நன்கொடையாக
வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொரப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஒன்றியத்தைச் சேர்ந்த தொரப்பள்ளியில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப்பள்ளியில் 1-வது வகுப்பு முதல் 8-வது வகுப்பு வரை 193 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு தலைமையாசிரியர் உட்பட 10 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்.
தலைமையாசிரியர்
என்.எஸ். பிரசாத்
இந்த அரசுப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில், இங்கு பணிபுரியும் தலைமையாசிரியர்
என்.எஸ்.பிரசாத்
உட்பட ஆசிரியர்கள், தனியார் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.
வித்யா வின்( vidya win)
கல்வி செயலி(APP)
அதன் தொடர்ச்சியாக
கணித ஆசிரியர்
பி.எம்.பிரசாத்
மேற்கொண்ட தீவிர
முயற்சியை தொடர்ந்து,
பெங்களுரைச் சேர்ந்த வித்யாவின் என்ற தனியார் நிறுவனத்தினர், மாணவர்களுக்கு வித்யாவின் கல்வி செயலி(APP) மற்றும் விளையாட்டு சீருடைகளை இலவசமாக வழங்கி உள்ளனர்.
மாணவ, மாணவிகள் மிகவும் எளிய முறையில் கணிதம் மற்றும் அறிவியல் கற்றுக் கொள்ள உதவும் செயலி
இந்த வித்யாவின் கல்வி செயலி மூலமாக 7-வது மற்றும் 8-வது படிக்கும் மாணவ, மாணவிகள் மிகவும் எளிய முறையில் கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தை கற்றுக் கொள்ளும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
கல்வி செயலி மற்றும் சீருடை வழங்கும் நிகழ்ச்சி தொரப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளி அரங்கில் ஜனவரி 10-ம் தேதி நடைபெற்றது.
வி.டி. குடும்ப உறுப்பினர்கள்
இந்த நிகழ்வுக்கு தலைமையாசிரியர்
என்.எஸ்.பிரசாத் தலைமை வகித்தார்.
இதில் பெங்களுரு வித்யாவின் நிறுவன
வி.டி. குடும்ப உறுப்பினர்கள்
திருமதி. அஸ்வினி,
திருமதி. லதா
மற்றும் விஜய், சந்தோஷ் ஆகியோர் பங்கேற்று நன்கொடை வழங்கினர்.
இந்த நிகழ்வில் ஒரு கல்வி செயலிக்கு ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள மொத்தம் 54 கல்வி செயலிகள், 7-வது மற்றும் 8-வது படிக்கும் மாணவ, மாணவிகளுக்கும்,
ரூ.50 ஆயிரம் மதிப்பில் தொரப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளி பெயர் அச்சடிக்கப்பட்ட விளையாட்டு சீருடைகள்
1-வது முதல் 5-வது வரை படிக்கும்
111 மாணவ, மாணவிகளுக்கும் நன்கொடையாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பெங்களுரு வித்யாவின் நிறுவன நிர்வாகிகளுக்கு
தலைமையாசிரியர் என்.எஸ். பிரசாத்
பொன்னாடை அணிவித்து நன்றி உரையாற்றினார். இதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.