திருக்குறள்
கல்வி
----------------
தொட்டனைத்து ஊறும் மணல்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு
------------------------.
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் வட்டம்
“கிருஷ்ணகிரி வாசிக்கிறது”
பேடரப்பள்ளி அரசுப்பள்ளியில்
தங்களுக்கு பிடித்தமான
புத்தகங்களை ஆர்வத்துடன்
வாசித்த மாணவர்கள்.
ஓசூர். ஜுலை. 10. –
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட பேடரப்பள்ளியில் இயங்கி வரும் அரசு நடுநிலைப்பள்ளியில்
“கிருஷ்ணகிரி வாசிக்கிறது”
என்ற தலைப்பில் 830 மாணவ, மாணவிகள். தங்களுக்கு பிடித்தமான புத்தகங்களை
காலை 10 மணி முதல் 10.15 வரை
வாசித்து மகிழ்ந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆணைப்படி
“கிருஷ்ணகிரி வாசிக்கிறது”
என்ற தலைப்பின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை – மேல்நிலைப்பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு வாசிக்கும் திறமையை ஊக்குவிக்கும் பொருட்டு ஜுலை 10-ம் தேதியன்று காலை 10 மணி முதல் 10.15 மணி வரை அனைத்து பள்ளிகளிலும் ஒரே நேரத்தில் அனைத்து மாணவர்களையும் பள்ளியில் அவரவர் வகுப்பறையிலோ அல்லது நூலகத்திலோ அவர்களுக்கு பிடித்த புத்தகங்களை வாசிக்க வைக்குமாறு தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.
பேடரப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளி
அதன்படி ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட பேடரப்பள்ளியில் இயங்கி வரும் அரசு நடுநிலைப்பள்ளியில்
ஜுலை 10-ம் தேதியன்று
“கிருஷ்ணகிரி வாசிக்கிறது”
என்ற தலைப்பில் மாணவர்களுக்கு
வாசிக்கும் திறமையை ஊக்குவிக்கும்
நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஜுலை 10-ம் தேதி
பள்ளிக்கு வருகை தந்த ஒன்று முதல் 8-வது வகுப்பு வரை பயிலும் 830 மாணவர்களும்
உற்சாகத்துடன் பங்கேற்று
காலை 10 மணி முதல் 10.15 மணி வரை
“கிருஷ்ணகிரி வாசிக்கிறது”
என்ற தலைப்பில் புத்தகங்களை வாசித்தனர்.
மாணவ, மாணவிகள் தங்களுக்கு பிடித்தமான
புத்தகங்களை நூலகத்திலிருந்து எடுத்து வந்து
வகுப்பறைகளில் அமர்ந்து ஆர்வத்துடன் வாசித்தனர்.
இந்த வாசிப்பு நிகழ்வின் போது
மாணவர்கள் தங்களுக்கு பிடித்தமான புத்தகங்களை நூலகத்தில் இருந்து
எடுத்து வாசிக்க உதவியாக இருந்து
தலைமையாசிரியர்
பொன்நாகேஷ்
மற்றும் ஆசிரியர்களும் மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.
பேடரப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில்
“கிருஷ்ணகிரி வாசிக்கிறது”
என்ற தலைப்பில் தங்களுக்கு பிடித்தமான
புத்தக வாசிப்பில் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ள
மாணவர்கள்.
இந்த புதுமையான முயற்சிக்கு
மாணவர்களிடையே மிகுந்த வரவேற்பு காணப்பட்டது.
------------------------------------------.