கிருஷ்ணகிரி மாவட்ட
பார்வையற்றோர் தடுப்புச் சங்கம்
ஓசூரில் முதல் முறையாக
சிப்காட் ரோட்டரி கிளப்
எலைட் ரோட்டரி கிளப்
இணைந்து நடத்திய
இலவச கண் சிகிச்சை முகாம்
செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லூரி
மருத்துவமனை டாக்டர் குழு
பங்கேற்பு
ஓசூர். டிச. 08. –
கிருஷ்ணகிரி மாவட்ட
பார்வையற்றோர் தடுப்புச் சங்கம்
ஓசூர் சின்னஎலசகிரி பாலாஜிநகரில் உள்ள பாரதியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் ஓசூர் சிப்காட ரோட்டரி கிளப் மற்றும் ஓசூர் எலைட் ரோட்டரி கிளப் ஆகியவற்றுடன், செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கிருஷ்ணகிரி மாவட்ட பார்வையற்றோர் தடுப்புச் சங்கத்துடன் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம்
நடைபெற்றது.
ரோட்டரி கவர்னர் விசிட்
இந்த கண் சிகிச்சை முகாமுக்கு
சேலம் வடக்கு மாவட்ட
கவர்னர் வி.சிவகுமார்
வருகை தந்து பார்வையிட்டார்.
உதவி கவர்னர்கள் பன்னீர் செல்வம் மற்றும் சுபாங்கி, ரோட்டரி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
ஓசூர் சிப்காட் ரோட்டரி கிளப்
ஓசூர் எலைட் ரோட்டரி கிளப்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில்
ஓசூர் சிப்காட் ரோட்டரி கிளப் மற்றும் ஓசூர் எலைட் ரோட்டரி கிளப் இயங்கி வருகின்றன.
இந்த இரண்டு ரோட்டரி கிளப்கள் சார்பில்
ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரம் உயர்வதற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல
அரசுப்பள்ளிகளுக்கு கல்வி சார்ந்த உபகரணங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவ கருவிகளை நன்கொடையாக வழங்குவது, இலவச மருத்துவ முகாம்கள் நடத்துவது என பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ச்சியாக செய்து வருகின்றனர்
இலவச கண் சிகிச்சை முகாம்
அதன் தொடர்ச்சியாக ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட
சின்னஎலசகிரி பாலாஜிநகரில் உள்ள பாரதியார்
மெட்ரிக்குலேசன் பள்ளியில் இலவச கண்
சிகிச்சை முகாம் டிசம்பர் 8-ம் தேதி நடைபெற்றது.
ஓசூர் சிப்காட் ரோட்டரி கிளப் தலைவர் சாய் பாலாஜி
ஓசூர் எலைட் ரோட்டரி கிளப் தலைவர் சங்கர்
இந்த முகாமில் ஓசூர் சிப்காட் ரோட்டரி கிளப் தலைவர் சாய் பாலாஜி மற்றும் ஓசூர் எலைட் ரோட்டரி கிளப் தலைவர் சங்கர் ஆகியோர் தலைமை வகித்து தொடங்கி வைத்தனர்.
கண் மருத்துவர் ரிது
இந்த முகாமில் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின்
கண் மருத்துவர் ரிது
தலைமையில் 3 செவிலியர்கள் மற்றும் 4 பயிற்சி செவிலியர்களை
கொண்ட குழுவினர், கண் நோயாளிகளுக்கு பரிசோதனை செய்து சிகிச்சையளித்தனர்.
இதில் பங்கேற்ற கண் நோயாளிகளிடம் ஆதார் அட்டை அல்லது ரேசன் அட்டையின் நகல் பெறப்பட்டது. தொடர்ந்து ரத்த அழுத்தம் மற்றும் உடலின் சர்க்கரை அளவு பரிசோதனை செய்யப்பட்டு, கண் பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இலவச அறுவை சிகிச்சை
இந்த பரிசோதனையில் கண்புரை இருப்பது தெரியவரும் நோயாளிகளுக்கு
செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்
இலவச கண் அறுவை சிகிச்சை செய்து
கொள்ள அனுமதிக்கப்படுகிறார்.
தங்குமிடம், உணவு இலவசம்
இந்த இலவச முகாம் மூலமாக
செயின்ட் பீட்டர் மருத்துவமனையில் கண் அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளும் நோயாளிக்கு, இலவச உள்விழி லென்ஸ்
அறுவை சிகிச்சை, மருந்து
மாத்திரைகள், தங்குமிடம், உணவு மற்றும் போக்குவரத்து, ஒரு மாதத்துக்கு பிறகு மறு பரிசோதனை ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது.
10 பேருக்கு இலவச கண்புரை
அறுவை சிகிச்சை
டிசம்பர் 8-ம் தேதி காலை 9 மணி முதல்
மதியம் 2மணி வரை நடந்த
இந்த முகாமில் சின்னஎலசகிரி, ஆனந்த்நகர், பாலாஜிநகர், கே.சி.சி.நகர், மீனாட்சிநகர் மற்றும் சிப்காட் தொழில்பேட்டை பகுதியில் உள்ள வயதானவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் 76 பேர் கலந்து கொண்டு கண் சிகிச்சை பெற்றனர். இதில் 10 பேருக்கு இலவச கண்புரை அறுவை சிகிச்சை பெற்றனர்.
இலவச கண்சிகிச்சை முகாம் ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பா ராவ்,
ஏ.கே.ராஜு சிறப்பாக செய்திருந்தனர்.
இந்த கண் சிகிச்சை முகாமில்
ஓசூர் சிப்காட் ரோட்டரி கிளப்
செயலாளர் எஸ்.கிருஷ்ணன்,
பொருளாளர் பி.வி. ராதாகிருஷ்ணன்,
ஓசூர் எலைட் ரோட்டரி கிளப்
முன்னாள் தலைவர் ஏ.கே.ராஜு,
செயலாளர் சண்முகநாதன்,
பொருளாளர் என்.எம்.சாம்ராஜ்,
ஓசூர் ராயல்ஸ் ரோட்டரி கிளப் நாகேஷ்பாபு,
மற்றும் பலர் கலந்து கொண்டனர்.