ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில்
தேசிய சாலை பாதுகாப்பு மாதம்
இருசக்கர வாகன
தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணி
ஒசூர். ஜனவரி. 23. –
ஓசூரில் தேசிய சாலை பாதுகாப்பு மாதம் முன்னிட்டு இருசக்கர வாகனங்களை தலைக்கவசம் அணிந்து ஓட்டுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
சாலை பாதுகாப்பு மாதம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி,
வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில்
தேசிய சாலை பாதுகாப்பு மாதம் முன்னிட்டு
2025-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை
வாகன ஓட்டுநர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
பள்ளி, கல்லூரி வாகன ஓட்டுநர்களுக்கு இலவச கண்சிகிச்சை முகாம்
கடந்த ஜனவரி 13-ம் தேதி சாலை பாதுகாப்பு மாதம் முன்னிட்டு ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பள்ளி, கல்லூரி வாகன ஓட்டுநர்களுக்கு இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக
தேசிய சாலை பாதுகாப்பு மாதம் முன்னிட்டு
ஜனவரி 22-ம் தேதி தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.
ஓசூர் காமராஜர் காலனி
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடலில் இருந்து புறப்பட்ட இந்த இருசக்கர வாகன பேரணியை
ஓசூர் வட்டார
போக்குவரத்து அலுவலர்
பிரபாகரன்
கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
ஓசூர் வட்டார மோட்டார் வாகன
ஆய்வாளர் மணிமாறன்,
ஓசூர் டவுன்
எஸ்.ஐ. பயாஜ்,
ஓசூர் டிராபிக்
எஸ்.ஐ. சத்யா,
ஓசூர் மேக்னம் அரிமா சங்க செயலாளர்(சேவைத்திட்டம்)
அரிமா. ரவிசங்கர்
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த பேரணியில் தொழிலாளர்கள், பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் பங்கேற்று,
தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தி
“தலைக்கவசம் உயிர்க்கவசம்”
“தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவீர்”
“வாகனத்திற்கு வாகனம் பாதுகாப்பான உரிய இடைவெளி பின்பற்றுவீர்”
“ஓட்டுநர் உரிமம் பெற்று பாதுகாப்பாக வாகனம் இயக்குவீர்”
என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு இருசக்கர வாகனங்களில் பேரணியாக சென்றனர்.
மேலும் இந்த பேரணியில் பொது மக்களுக்கு
விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
இந்த இருசக்கர வாகன பேரணி
காமராஜர் காலனியில் புறப்பட்டு, ராயக்கோட்டை சாலை, சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, பாகலூர் சாலை உள்ளிட்ட மாநகரின் முக்கிய சாலைகள் வழியாக பயணித்து இறுதியாக ஓசூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது.
இதில் ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலக பணியாளர்கள், காவல்துறையினர்,
ஓசூர் ஜெசிஐ நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
--------------------------------------