தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டம்
NADCP-FMD
(Foot and Mouth Disease Vaccine)
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
கால் மற்றும் வாய் நோய்
தடுப்பூசி முகாம் 29.12.2025 முதல்
நடைபெற உள்ளது என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி. டிச. 26. –
கால் மற்றும் வாய் நோய்
தடுப்பூசி முகாம்
2025 டிசம்பர் - 29 முதல் -
2026 ஜனவரி - 28 வரை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி
முகாம் 29.12.2025 முதல் நடைபெற உள்ளது என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள
3,26,480 மாட்டின கால்நடைகளுக்கு
தேசிய கால்நடை நோய்
தடுப்புத் திட்டத்தின் கீழ்
NADCP-FMD 8-வது சுற்று
(Foot and Mouth Disease Vaccine)
கால் மற்றும் வாய் நோய்
தடுப்பூசி முகாம்
2025 டிசம்பர் 29 அன்று
காவேரிப்பட்டிணம் ஒன்றியம்
எருமாம்பட்டி கிராம ஊராட்சிக்குட்பட்ட
கூரம்பட்டி கிராமத்தில் தொடங்கப்பட்டு
2026 ஜனவரி-28 அன்று வரை
நடைபெற உள்ளது.
மேலும், இம்மாவட்டத்தில் உள்ள
அனைத்து கிராமங்களில் அறிவிக்கப்படும்
தேதிகளில் கால் மற்றும் வாய் நோய்
தடுப்பூசி முகாம் டிசம்பர் 29-ம் தேதி முதல் நடைபெற உள்ளது.
இம்முகாம்களுக்கு வரும் கால்நடை
உரிமையாளர்கள் தங்களின்
ஆதார் எண் மற்றும்
கைபேசி எண்
ஆகியவற்றை கண்டிப்பாக
தடுப்பூசி குழுவினரிடம் வழங்க வேண்டும்.
பின்னர் கால்நடைகளுக்கு
காதுவில்லைகள்
அணிவிக்கப்பட்ட உடன்
தடுப்பூசி போடப்படும்.
கால்நடை வளர்ப்போர் மேற்படி தடுப்பூசியை
தங்கள் கால்நடைகளுக்கு போட்டுக்கொண்டு
பயன்பெறலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
----------------------------------.