கழிவு செய்யப்பட்ட
அரசு வாகனங்கள் பொது ஏலம்
கிருஷ்ணகிரி மாவட்ட
வருவாய் அலகில் கழிவு செய்யப்பட்ட
அரசு ஈப்பு வாகனங்கள் 1212.2025 அன்று
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்
அலுவலக வளாகத்தில்
பொது ஏலம் விடப்பட உள்ளது என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச. தினேஷ் குமார் இஆப,
அவர்கள் தகவல்.
ஓசூர். டிச. 8. -
கழிவு செய்யப்பட்ட
அரசு வாகனங்கள் பொது ஏலம்
கிருஷ்ணகிரி மாவட்ட
வருவாய் அலகில் கழிவு செய்யப்பட்ட
அரசு ஈப்பு வாகனங்கள்
டிசம்பர் 12-ம் தேதி அன்று
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்
அலுவலக வளாகத்தில்
பொது ஏலம் விடப்பட உள்ளது என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச. தினேஷ் குமார் இஆப,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது…
கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலகில்
பயன்படுத்தப்பட்டு வந்த
முதிர்ந்த நிலையில்
கழிவு செய்யப்பட்ட
அரசு ஈப்பு வாகனங்கள் (Bolero)
வாகன எண்
1. TN 24 G 0333,
2. TN 24 G 0444,
3. TN 24 G 06660,
4. TN 24 G 07774,
வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ
அதே நிலையில் வாகனங்கள் மட்டும்
(வாகன எண் கிடையாது)
வருகின்ற
டிச.12-ஆம் தேதி
காலை 10.00 மணிக்கு
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்
அலுவலக வளாகத்தில் வைத்து
பொது ஏலத்தில் விடப்படும்
என்று அறிவிக்கப்படுகிறது.
மேலும் வாகனங்களை ஏலம் எடுக்க விரும்பும் நபர்கள் வருகின்ற
12-12-2025 அன்று
காலை 9 மணி முதல்
9.30 மணிக்குள்
நான்கு சக்கர வாகனத்திற்கான
முன் வைப்புத் தொகையாக
ரூ.2000/- (ரூபாய் இரண்டாயிரம் மட்டும்)
செலுத்தி ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.
அரசு நிர்ணயித்த தொகையை விட
கூடுதலாக எலம் கேட்ட ஏலதாரர்
ஏலத்தொகையில் 100% (விழுக்காடு)
மற்றும் அதற்கான
GST 18% தொகையினை
ஏலம் நடைபெற்ற அன்றே
செலுத்த வேண்டும்.
அதன்பின்னர் ஏலதாரருக்கு வாகன விடுவிப்பு ஆணை மற்றும் வாகனத்தை விடுவிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கூடுதலாக ஏலம் கேட்டு வாகனத்தை பெற்றுக்கொண்ட ஏலதாரரை தவிர
மற்ற ஏலதாரர்களுக்கு அவர்கள்
முன்பணமாக கட்டிய ரூ.2000/ திரும்ப வழங்கப்படும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ்குமார் இ.ஆ.ப.
அவர்கள் தெரிவித்துள்ளார்.
------------------------------------------------.