இந்திய மருந்தியலின் தந்தை
ராம்நாத் சோப்ரா.
நாகவல்லி அல்லது சர்ப்பகந்தி எனப்படும் இந்திய மூலிகையின் பயனை முதன் முதலில் அறிவித்தார்.
இந்திய அரசின் விசாரணைக் குழுவின் தலைவராக இந்திய அரசியல் சாசனத்தில் மருந்துச் சட்டம், மருந்தியல் சட்டம் ஆகியன இடம் பெற வலியுறுத்தினார்.
சோப்ரா குழுவின் அறிக்கையில் தான் மருந்தியல் என்ற சொல் முதன்முதலாக இந்திய சாசனத்தில் (1931) அறிமுகமானது.
ஆகஸ்ட் - 17, 1882 –
இந்திய மருந்தியலின் தந்தை பேராசிரியர் .
சர் ராம்நாத் சோப்ரா
143 -வது பிறந்த தினம்.
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். ஆகஸ்ட். 17. -
இந்திய மருத்துவ களஞ்சியம்
அமைக்க முனைப்பாக பாடுபட்டவர்
பேராசிரியர் ராம்நாத் சோப்ரா.
இளமைப் பருவம்
வட இந்தியாவில் ராவல்பிண்டியிலிருந்து குடிபெயர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வாழ்ந்து வந்தவா்கள் தோக்கரா குடும்பத்தினா்.
இக்குடும்பத்தில் 1882 ஆம் ஆண்டு தலைமகனாகப் பிறந்தார் ராம்நாத் சோப்ரா.
ஜம்முவிலும் ஸ்ரீநகரிலும் இவரது பள்ளி வாழ்க்கை தொடங்கியது.
ராம்நாத் சோப்ரா பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் கீழ் லாகூரில் உயர்நிலைக் கல்வி கல்லூரிப் பட்டங்கள் பெற்றார்.
1903 ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்று கேம்பிரிட்ஜ் நகரில் டௌனிங் கல்லூரியில் சேர்ந்து படித்தார்.
ஏறத்தாழ பத்தாண்டுக் கல்விப் பயணத்தில்
அறிவியல் பட்டம் (1905),
எல்.ஆர்.சி.பி (LRCP),
எம்.ஆா்.சி.எஸ்.(MRCS),
எம்.பி(MB),
வேதியல் இளங்கலை (BCH)
எனப் பட்டங்கள் பெற்றார்.
1912 ஆம் ஆண்டு மருந்தியல் உயர்பட்டம் (MD) பெற்றார்.
இலண்டனில் தூய பர்த்தலோமியெவ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த காலகட்டத்தில் இந்திய மருத்துவப் பணித் தேர்விலும் மூன்றாம் மாணவனாக தேர்ச்சி பெற்றார்.
மருத்துவப் பணி
கிழக்கு ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் பணிபுரிந்தார்.
பின்னர் வெப்பப் பிராந்திய மருந்துக் கூடம், கல்கத்தா மருத்துவக் கல்லூரி ஆகிய நிறுவனங்களில் 1921 ஆம் ஆண்டு முதல் மருந்தியல் பேராசிரியராக பணியாற்றினார்.
பின்னாளில் கல்கத்தாவில் வெப்பப் பிராந்திய மருந்துக் கூடத்தின் இயக்குநராகவும் உயர்ந்தார்.
கீழ்கண்ட துறைகளில் சோப்ரா
ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
வெப்ப பிராந்தியத்திற்கு ஏற்ற மருந்துகள்,
பரிசோதனை மருந்தியல் மற்றும் சிகிச்சையியல்,
மருந்துக்கு அடிமையாதல்,
உள்நாட்டு மருந்துகள்,
நச்சு இயல்,
புதிய பரிசோதனை கூடத் தொழில் நுட்பங்கள்,
நோய் கண்டறியும் வழிமுறைகள்.
எழுதிய நூல்கள்
வெப்பப் பிராந்திய மருந்துக் கூடத்தின் வேதியியல் பேராசிரியரான
சுதமாய் கோஷ்
என்பவரின் நட்புறவில்,
இந்திய உள்நாட்டு மருந்துகள்,
இந்திய மருந்து மற்றும் நச்சு தாவரங்கள்,
இந்திய மூலிகைகளின் சொல்லடைவு.
பங்களிப்புகள்
நாகவல்லி அல்லது சர்ப்பகந்தி எனப்படும் இந்திய மூலிகையின் பயனை முதன் முதலில் அறிவித்தார் ராம்நாத் சோப்ரா.
இந்திய அரசின் விசாரணைக் குழுவின் தலைவராக இந்திய அரசியல் சாசனத்தில் மருந்துச் சட்டம், மருந்தியல் சட்டம் ஆகியன இடம் பெற வலியுறுத்தினார்.
இவரது முனைப்பினால் அறிவியல் தொழிற்துறை ஆய்வுக்குழுமத்தின் கீழ் ஜம்முவில் பிராந்திய ஆய்வுக்கூடம் உருவானது.
சோப்ரா குழுவின் அறிக்கையில் தான் மருந்தியல் என்ற சொல் முதன்முதலாக இந்திய சாசனத்தில் (1931) அறிமுகமானது.
ஜெனிவாவில் நடைபெற்ற உலக சுகாதார நிறுவனம் போதை மருந்து ஒழிப்பு நிபுணர் குழுவில் பங்கு வகித்தார்
1941 ஆம் ஆண்டு நவம்பர் முதல் கல்கத்தா வெப்பப் பிராந்திய மருந்துக் கூடத்தின் இயக்குநராக செயல்பட்டார்.
ஜம்மு காஷ்மீரில் மருத்துவ பணி மற்றும் மருந்து ஆராய்ச்சி நிறுவன இயக்குநராக செயல்பட்டார்.
வாரனாசியிலிருந்து வெளியான இந்திய மருந்து ஆராய்ச்சி சஞ்சை எனும் இதழாசிரியர் குழுவின் தலைவராக இருந்தார்.
பெற்ற விருதுகள்
மின்டோ பதக்கம்,
மௌவாத் பதக்கம்,
கோட்டோஸ் பதக்கம்.
---------------------------------------------.