கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஓசூர் மாநகராட்சி
சமத்துவபுரம்
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்
79-வது சுதந்திர தினவிழா
ஓசூர் மேக்னம் அரிமா சங்கம் பங்கேற்பு
ஓசூர். ஆகஸ்ட். 16. –
ஓசூர் மாநகராட்சி சமத்துவபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்
79-வது சுதந்திர தினவிழா
சிறப்பாக கொண்டாடப்பட்டது.
புத்தகம் நன்கொடை
இந்த விழாவில்
ஓசூர் மேக்னம் அரிமா சங்கம் சார்பில் பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்
நன்கொடையாக வழங்கப்பட்டது.
சமத்துவபுரம்
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட சமத்துவபுரத்தில்
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது.
இந்தப்பள்ளியில் எல்கேஜி வகுப்பு முதல்
5 - வது வகுப்பு வரை300 மாணவ, மாணவிகள், தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் கல்வி பயின்று வருகின்றனர்.
தரமான கல்வி
ஒரு தலைமையாசிரியர் உட்பட 9 ஆசிரியர்கள் மூலமாக. மாணவர்களுக்கு நல்லொழுக்கத்துடன், தரமான கல்வி கற்பிக்கப்படுகிறது.
ஓசூர் மேக்னம் அரிமா சங்கம்
இந்த அரசுப்பள்ளியை கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஓசூர் மேக்னம் அரிமா சங்கத்தினர் தத்து எடுத்துக் கொண்டு பல்வேறு வளர்ச்சிப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் காரணமாக இந்த அரசுப்பள்ளி தனியார் பள்ளிக்கு நிகராக வளர்ச்சி பெற்றுள்ளது.
79-வது சுதந்திர தினவிழா
இப்படி பல்வேறு சிறப்புகள் பெற்றுள்ள இந்த அரசுப்பள்ளியில்
2025-ம் ஆண்டு 79-வது சுதந்திர தினவிழா ஆகஸ்ட் 15-ம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சமத்துவபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அரங்கில் நடைபெற்ற இந்த 79-வது சுதந்திர தினவிழாவுக்கு
தலைமையாசிரியர்
ஆர். நாமகிரி
தலைமை வகித்தார்.
கவுன்சிலர்
கவிதா சீனிவாசன்
முன்னிலை வகித்தார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற
ஓசூர் மேக்னம்
அரிமா சங்க தலைவர்
அரிமா. K. ஆறுமுகசாமி
தேசிய கொடியேற்றி வைத்து உரையாற்றினார்.
அனைவருக்கும் இனிப்பு
வழங்கப்பட்டது.
கலை நிகழ்ச்சிகள்
அதைத் தொடர்ந்து வண்ணமயமான,
நாட்டியம், நடனம், உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பரிசு பொருட்கள்
இதில் எல்கேஜி வகுப்பு முதல் 5-வது வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள்
சிறப்பாக பங்கேற்று, அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றனர்.
கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகளில் சிறப்பாக பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்த 79-வது சுதந்திர தின விழாவில்
ஓசூர் மேக்னம் அரிமா சங்க
திட்ட ஒருங்கிணைப்பாளர்
அரிமா. R. ரவிசங்கர்,
செயலாளர்(நிர்வாகம்)
அரிமா. K. பூபாலன்,
செயலாளர்(செயல் திட்டம்)
அரிமா S. விவேகானந்தன்,
பொருளாளர்
அரிமா Pa. அருண் லோகேஷ்,
மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள்
மற்றும் பெற்றோர்,பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
--------------------------------.