கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
ஒசூரில் விரைவில் சர்வதேச
விமான நிலையம் அமைவது உறுதி
கிருஷ்ணகிரி தொகுதி
மக்களவை உறுப்பினர்.
கே.கோபிநாத்
திட்டவட்டம்
ஒசூர். அக். 2. -
ஒசூரில் விரைவில்
சர்வதேச விமான நிலையம்
அமைவது உறுதி அதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் பங்கேற்பார் என
கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ்
எம்பி கோபிநாத்
தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில், அவரது இல்லத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினர் கே. கோபிநாத் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது.
ஆழ்ந்த அனுதாபங்கள்
அண்மையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் பொழுது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்மையில் ஒசூருக்கு வருகை தந்து பல்வேறு மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான அறிவிப்புகளை அறிவித்தும், ரூ. 26 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் இந்த மாவட்டத்திற்கு புதிய தொழில் முதலீடுகளை கொண்டு வந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி நடவடிக்கை மேற்கொண்டதற்கும்,
முதலமைச்சருக்கு தொகுதி மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏற்கனவே சட்டமன்றத்தில் முதலமைச்சர் அறிவித்த, ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைப்பது குறித்து இங்கு வருகை தந்த பொழுது அது தொடர்பான அறிவிப்புகள் இடம் பெறவில்லை என்பதால், இங்குள்ள மக்களுக்கு சில சந்தேகங்கள் எழுந்துள்ளன.
எனவே இது பற்றிய சந்தேகங்கள் தேவையில்லை. நிச்சயமாக முதலமைச்சர் அறிவித்தது போல சர்வதேச விமான நிலையம் அமையும்.
அதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசீலணையில் உள்ளது.
முதலமைச்சர் அடிக்கல் நாட்டுவார்
எனவே விரைவிலேயே சர்வதேச விமான நிலையம் அமைய உள்ள இடம் இறுதி செய்யப்பட்டு முதலமைச்சர் அதற்கான அடிக்கல் நாட்டுவார் என உறுதிப்பட தெரிவித்துக் கொள்கின்றேன்.
தீபாவளி - பாதுகாப்பு
தற்சமயம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஒசூர் மாநகரில் ஏராளமான பட்டாசு கடைகள் செயல்பட துவங்கியுள்ளன.
இங்கு நிலவும் கடுமையான நெரிசல் காரணமாக எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை நினைவில் கொண்டு,
கர்நாடக மாநிலத்தில் உள்ளது போல
ஒசூர் மாநகருக்கு வெளியே சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால், பாதுகாப்பான இடத்தில் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஏனெனில் தீபாவளி பண்டிகைக்கு குறைந்த நாட்களே உள்ள நிலையில், விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் எவ்வித அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ள வேண்டும்.
ஒசூர் டைடல் பார்க்
அமைந்துள்ள விஸ்வநாதபுரம் கிராமத்தில்
ஜூரோ பைமாஸ் நிலத்தில் (சர்வே எண் இல்லாத நிலம்) சிலர் ஆக்கிமிரத்து போக்லைன் இயந்திரம் வைத்து நிலத்தை சமன்செய்து தொழில்சாலைகளை கட்டி வாடகைக்கு விடும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
அவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்த ஜூரோ பைமாஸ் நிலங்களில் அரசு சார்பில் புதியதாக
கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
பொறியியல் கல்லூரி,
டைடல் பார்க், அறிவுசார் வழித்தடம்
அமைக்க வேண்டும்.
தனியார் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
அப்பொழுது கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர்
நீலகண்டன்,
நிர்வாகிகள்
ரகு,
சின்னகுட்டப்பா,
மாமன்ற உறுப்பினர்
இந்திராணி,
சாதிக்கான்,
சூரியகணேஷ்,
பிரவீன்
உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
--------------------------------.