மாபெரும்
தனியார் துறை
வேலைவாய்ப்பு முகாம்
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம்,
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும்
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்
இணைந்து நடத்தும்
மாபெரும் தனியார்துறை
வேலைவாய்ப்பு முகாம்
13-12-2025 சனிக்கிழமை அன்று
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில்
நடைபெற உள்ளது
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச. தினேஷ்குமார் இ.ஆ.ப,
அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி. டிச. 10. –
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம்,
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும்
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்
இணைந்து நடத்தும்
மாபெரும் தனியார்துறை
வேலைவாய்ப்பு முகாம்
13-12-2025 சனிக்கிழமை அன்று
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில்
நடைபெற உள்ளது என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச. தினேஷ்குமார் இ.ஆ.ப,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம்,
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும்
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்
இணைந்து நடத்தும்
மாபெரும் தனியார்துறை
வேலைவாய்ப்பு முகாம்
டிசம்பர் 13-ம் தேதி சனிக்கிழமை அன்று
காலை 8.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற உள்ளது.
இவ்வேலைவாய்ப்பு முகாமில்
கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரை சேர்ந்த
முன்னணி தனியார்துறை
நிறுவனங்களான
Ashok Leyland,
Tata Electronics,
Titan Company,
TVS Motor Company
போன்ற 100க்கும் மேற்பட்ட
தனியார்துறை வேலை வாய்ப்பு அளிப்பவர்கள்
கலந்துகொண்டு 5000-க்கும் மேற்பட்ட
காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர்.
8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் +2 தேர்ச்சி,
பட்டப்படிப்பு படித்தவர்கள்,
ஐடிஐ, டிப்ளமோ
என அனைத்துவித கல்வித் தகுதியினரும்
கலந்து கொள்ளலாம்.
இம்முகாமில் கலந்து கொள்ள
அனுமதி இலவசம்.
இம்முகாமில்
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின்
இலவச திறன் மேம்பாட்டு
பயிற்சிகளுக்கான பதிவு
மாவட்ட தொழில் மையத்தின் தொழில்
முனைவோர்களுக்கான ஆலோசனைகள்,
மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக
வங்கி கடன் குறித்த வழிகாட்டுதல்கள்
ஆகியன மேற்கொள்ளப்பட உள்ளது.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின்
மூலம் நடத்தப்படும்.
இவ்வேலைவாய்ப்பு முகாம்,
வேலைநாடுநர்கள் மற்றும் வேலை அளிப்பவர்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது.
எனவே. தனியார்துறையில் பணிபுரிய
ஆர்வமாக உள்ள அனைவரும்
இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு
பயனடையலாம்.
இம்முகாமின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு
தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யப்படும்
வேலைநாடுநர்களின் வேலைவாய்ப்பு
அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்பட மாட்டாது.
மேலும் விவரங்களுக்கு
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை
நேரிலோ அல்லது
தொலைபேசி
எண் - 04343-291983
வாயிலாக தொடர்பு கொள்ளலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச. தினேஷ் குமார் இ.ஆ.ப
அவர்கள் தெரிவித்துள்ளார்.
----------------------------------.