காடுகளை அழித்து
வீடுகளை உருவாக்கி
நாகரிகம் வளர்த்த நாம்,
இன்று மீண்டும் மரங்களை
வளர்த்தால்தான்
மகிழ்ச்சி நீடிக்கும்
என உணரத் தொடங்கி
இருக்கிறோம்.
மரங்களை வளர்ப்போம்
வளம் தரும் பூமியை காப்போம்.
ஏப்ரல் 22 - ‘ உலக புவி தினம்’ Earth Day
2025 உலக புவி நாள் கருப்பொருள்:
நமது சக்தி நமது கோள் –
" our power our planet "
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். ஏப்ரல். 22. -
நமது சக்தி நமது கோள்,
இந்த ஆண்டின்
உலகளாவிய கருப்பொருள் -
#நமது சக்தி நமது கோள்,
புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப்
பயன்படுத்தி சமூகங்களுக்கு ஆரோக்கியமான மற்றும் மீள்தன்மை கொண்ட எதிர்காலத்தை
உருவாக்குவதை
வலியுறுத்துகிறது.
ஒவ்வொரு சிறப்பு நாளுக்குப் பின்னும் ஏதோ ஒரு வரலாறு உண்டு. அதுபோலத்தான் உலக பூமி நாளுக்கும் ஒரு சோக வரலாறு உண்டு.
1969-ம் ஆண்டு, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில்,
மிகப்பெரிய எண்ணெய்க் கசிவு
விபத்து நடந்தது.
தொழிற்சாலைகள் பலவற்றால்
பூமி மாசுபடுவது
அப்போது அதிகரித்தது. இதையெல்லாம் கண்டு
மனம் வெந்த
சில போராட்டக்காரர்கள்,
1970-ம் ஆண்டு ஏப்ரல் 20-ம் தேதி,
2 கோடி பேர் கலந்துகொண்ட மா
பெரும் பேரணியை
நடத்தினார்கள்.
மனிதர்கள்,
பூமியை எவ்வளவு சேதப்படுத்திவருகிறார்கள்
என்பதை அந்த மக்கள் கூட்டம் எடுத்துச்சொல்லியது.
`கேலார்டு நெல்சன்’ என்பவர்தான் அந்தப் புரட்சிப் பேரணிக்குப் பின்னால் இருந்தவர்களில் முக்கியமானவர்.
அதைத் தொடர்ந்து, ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 22-ம் தேதியைப் புவி தினமாக அமெரிக்கர்கள் கொண்டாடி வந்தார்கள்.
உலக புவி தினம்
1990 -ம் ஆண்டில் ,ஐ.நா சபையால் ‘புவி தினம்’ அங்கீகரிக்கப்பட்டு, உலகம் முழுவதும் அன்று முதல் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.
காடுகளை அழித்து
வீடுகளை உருவாக்கி
நாகரிகம் வளர்த்த நாம்,
இன்று மீண்டும் மரங்களை
வளர்த்தால்தான்
மகிழ்ச்சி நீடிக்கும்
என உணரத் தொடங்கி
இருக்கிறோம்.
காடுகள்,
மலைகள்,
பாலைவனங்கள்,
ஆறுகள்,
சமவெளிகள்,
மிகப்பெரிய நிலப்பரப்பு
என அனைத்தும் தன்னுள்
அடக்கி உயிரின வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியமான பொருள்களைத் தருவது நம் பூமி.
மனித தேவையின்
அத்தியாவசியம் மற்றும்
அதிகப்படியான பொருள்களையும், வளங்களையும் வழங்கி இன்றைய நிலைமையில் எதுவும் இல்லாமல் இருக்கிறது.
கடந்த பத்தாண்டுகளில்
எங்கு பார்த்தாலும்
இயற்கை பேரிடர்கள்.
இதற்குக் காரணம்
புவி வெப்பமயமாதல்,
சுற்றுச்சூழல் மாசுபாடு,
மக்கள் தொகை பெருக்கம்,
தொழில்மயமாதல்
எனக் காரணங்களை
அடுக்கிக்கொண்டே செல்லலாம்.
---------------------------------------.