கிருஷ்ணகிரி மாவட்டம்
கெலமங்கலம் ஒன்றியம்
கருக்கனஹள்ளி,
மேட அக்ரஹாரம்
ஊராட்சிகளில்
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
அதிகாரிகள் ஆய்வு
ஓசூர். செப். 26. -
கெலமங்கலம் ஒன்றியம்
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியத்தில் உள்ள கருக்கனஹள்ளி, மேடஅக்ரஹாரம் ஆகிய ஊராட்சிகளில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
கருக்கனஅள்ளி,
மேட அக்ரஹாரம்
ஊராட்சிகளின்
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
பால்னாம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி
வளாகத்தில் நடந்தது.
இதில் துறை வாரியாக அரங்குகள் அமைத்து கிராம மக்களிடம் மனுக்களை பெற்று கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெற்றது.
இந்த முகாமில்
மருத்துவ முகாம்,
கலைஞர் மகளிர் உரிமைத்
தொகை அரங்கு,
இ - சேவை மையம்,
ஆதார் மையம்,
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை பெறுவதற்கான அரங்கு
உட்பட அனைத்து துறை சார்ந்த அரங்குகள் அமைக்கப்பட்டு மனுக்கள் பெறப்பட்டது.
முகாமில் கருக்கனஹள்ளி, மேட அக்ரஹாரம் ஆகிய கிராம மக்கள் பங்கேற்று மனுக்களை அளித்தனர்.
இந்த முகாமை
கெலமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
திரு. மகேஸ்குமரன்,
திரு. முருகன்
ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
முகாமில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் இணைய தளத்தில் பதிவு செய்யப்படும், பதிவு செய்த மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு காணப்படும்
என தெரிவிக்கப்பட்டது.
இந்த முகாமில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
திரு. கிருஷ்ணன்,
திரு. முபஷிரா,
திரு. சின்னமாது,
திரு. சாய் சுந்தரம்,
திரு. சீனிவாசன்,
ஊராட்சி செயலாளர்கள்
திரு. ராதாகிருஷ்ணன்,
திரு. முருகன்,
திரு. முத்து,
திரு. முனியப்பன்,
திரு. கோவிந்தராஜ்,
திரு. முனிராஜ்,
மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், கிராமமக்கள் திரளாக கலந்துக் கொண்டனர்.
---------------------------------------------.