தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை
எழுதி அழியாப்புகழ்பெற்ற
சாதனையாளர்
தமிழ் அறிஞர்
மனோன்மணியம்
பெ.சுந்தரம் பிள்ளை
ஏப்ரல் 4 – 1855 –
மனோன்மணியம்’ என்னும்
கவிதை நாடக நூலை எழுதியவரும்,
சிறந்த தமிழ் அறிஞருமான
பெ.சுந்தரம் 170-வது பிறந்த தினம்.
மனோன்மணீயத்தில் இடம்பெற்ற
தமிழ்த் தாய் வணக்கப்பாடலான நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்ற பாடல்
தமிழ்நாடு அரசினரால்
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக
சூன் 1970 இல் அறிவிக்கப்பட்டது.
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். ஏப்ரல். 4. -
# கேரள மாநிலம் ஆலப்புழையில்
(1855) பிறந்தவர்.
தந்தை தமிழ் இலக்கியங்களை நன்கு கற்றவர். அவரிடமே தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட சமய நூல்களைக் கற்றார்.
1876-ல் பி.ஏ. பட்டம் பெற்றார்.
# நாகப்பட்டினம்
நாராயணசாமி பிள்ளை
இவரது தமிழ் ஆசிரியர்.
கோடகநல்லூர் சுந்தர சுவாமிகளின்
சீடர் இவர்.
சட்டாம்பி சுவாமிகள்,
தைக் காட்டு அய்யாவு சுவாமி,
நாராயண குரு,
ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.
திருநெல்வேலி
ஆங்கிலத் தமிழ்க்
கல்விச் சாலையின் தலைவராக
2 ஆண்டுகள் பணியாற்றினார்.
அது பின்னர்
இந்துக் கல்லூரியாக உயர உறுதுணையாக இருந்தார்.
# திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் தத்துவத் துறை ஆசிரியராகச் சேர்ந்தார்.
எம்.ஏ. தத்துவத்தில் பட்டம் பெற்றார். மகாராஜா அரண்மனையின் வருவாய்த் துறை தனி அலுவலராக நியமிக்கப்பட்டார்.
மகாராஜா கல்லூரி பேராசிரியர் ஹார்வியின் அன்புக்குரிய மாணவராகத் திகழ்ந்தார்.
1885-ல் அதன் தலைமைப் பேராசிரியரானார். இறுதிவரை அங்கு பணியாற்றினார்.
# சிறந்த படைப்பாளி.
இந்திய, மேற்கத்திய தத்துவம் தவிர,
வரலாறு,
தொல்பொருளியல்,
இலக்கியம்,
நவீன அறிவியல்
ஆகிய துறைகளிலும் ஆர்வம் கொண்டிருந்தார்.
‘நூற்றொகை விளக்கம்’,
’திருவிதாங்கூர் பண்டைய
மன்னர்கால ஆராய்ச்சி’
உட்பட 20-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
# ‘மனோன்மணியம்’ என்ற நூலை 1891-ல் எழுதினார். கவிதை நாடக வடிவில் அமைந்த மனோன்மணியம், 4,500 வரிகள் கொண்டது.
அதில் ‘நீராருங் கடலுடுத்த’ எனத் தொடங்கும் பாடலை
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக
தமிழக அரசு 1970-ல் அறிவித்தது.
# ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார்.
‘தமிழ் இலக்கிய வரலாற்றில்
சில மைல்கற்கள்
(திருஞான சம்பந்தரின் காலம்)’
என்ற ஆங்கில நூலை எழுதினார். பத்துப்பாட்டு பற்றிய
திறனாய்வு நூலை
ஆங்கிலத்தில் எழுதினார்.
# பத்துப்பாட்டின் 3 அங்கங்களான
திருமுருகாற்றுப்படை,
நெடுநல் வாடை,
மதுரைக் காஞ்சி
ஆகியவற்றை
‘தி டென் தமிழ் ஐடியல்ஸ்’
என்ற நூலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
‘ஜீவராசிகளின்
இலக்கணமும் பிரிவும்’,
‘மரங்களின் வளர்ச்சி’,
‘புஷ்பங்களும் அவற்றின்
தொழில்களும்’
ஆகிய அறிவியல் நூல்களை எழுதினார்.
# கல்வெட்டு ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டார்.
திருவிதாங்கூர் அரசர்களின் மரபு பற்றி ஆராய்ந்து எழுதிய நூலை 1894-ல் வெளியிட்டார்.
சென்னை கிறிஸ்தவக் கல்லூரி இதழில் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டார்.
# மற்ற மொழிகளையும் இவர் ஒதுக்கியதில்லை. திருவனந்தபுரத்தில் சைவப்பிரகாச சபையைத் தோற்றுவித்து சமயத் தொண்டும் ஆற்றிவந்தார்.
‘ராவ் பகதூர்’ உள்ளிட்ட பல பட்டங்கள் பெற்றுள்ள போதிலும், தான் எழுதிய நூலின் பெயரால்
‘மனோன்மணியம்’
சுந்தரம் பிள்ளை
என்று போற்றப்பட்டார்.
# 19-ம் நூற்றாண்டின் தலைசிறந்த
தமிழ் நாடக நூலை எழுதியவரும்,
கல்வெட்டு ஆராய்ச்சி,
தத்துவம்,
அறிவியல்முறை ஆய்வுகள்,
நூற்பகுப்பு முறைகள்,
இலக்கிய ஆய்வு,
எனப் பல களங்களில்
மகத்தான பங்களிப்பை
வழங்கியவருமான
பெ.சுந்தரம் பிள்ளை
1897 ஏப்ரல் 26-ம் தேதி 42-வது வயதில் மறைந்தார்.
----------------------------------------.