மலர் - 1 இதழ்கள் - 1
தினம் ஒரு திருக்குறல்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
ஓசூர் மாநகராட்சி 1-வது வார்டில்
சொந்த செலவில் சாலை அமைத்த
கவுன்சிலருக்கு பொதுமக்கள் பாராட்டு
ஜுஜுவாடி 1-வது வார்டில் சொந்த செலவில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை பார்வையிடும் மாமன்ற உறுப்பினர் அசோகாரெட்டி.
ஓசூர். நவ. 17. –
By Jothi Ravisugumar
ஓசூர் ஜுஜுவாடி 1-வது வார்டில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் சொந்த செலவில் புதிய சிமெண்ட சாலை அமைத்த மாமன்ற உறுப்பினர் உறுப்பினர் அசோகாரெட்டியை பொதுமக்கள் பாராட்டினர்.
ஜுஜுவாடி 1-வது வார்டு
ஓசூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் மக்கள் தொகை அதிகமுள்ள பெரிய வார்டாக ஜுஜுவாடியில் உள்ள 1-வது வார்டு அமைந்துள்ளது. ஜுஜுவாடியை ஒட்டி சிப்காட் - 1 தொழிற்பேட்டை அமைந்துள்ளதால் இங்கு குடியிருப்பு பகுதிகளும், மக்கள் தொகையும் வேகமாக அதிகரித்து வருகிறது.
ஜுஜுவாடியை சுற்றிலும் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் 1-வது வார்டில் அதிக எண்ணிக்கையில் குடியேறி வருகின்றனர்.
இதனால் இந்த வார்டில் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக 1-வது வார்டில் உள்ள திருவள்ளுவர் நகர், நஞ்சப்பா சர்க்கிள், துர்காநகர் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலையை செப்பனிட்டு புதிய சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மாமன்ற உறுப்பினர் அசோகாரெட்டியிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
சொந்த செலவில் புதிய சாலை
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மாமன்ற உறுப்பினர் அசோகாரெட்டி தன்னுடைய சொந்த செலவில் 1-வது வார்டில் புதிய சிமெண்ட சாலையை அமைக்க நடவடிக்கை எடுத்தார். அதன்படி திருவள்ளுவர்நகர், நஞ்சப்பா சர்க்கிள், துர்கா நகர், ஆகிய பகுதிகளில் ஜேசிபி மூலமாக புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் மாமன்ற உறுப்பினர் அசோகாரெட்டி மேற்பார்வையில் வேகமாக நடந்து வருகிறது.
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம்
இவர் ஏற்கனவே 1-வது வார்டில் சொந்த செலவில் சுமார் ரூ.3 லட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் பாராட்டு
1-வது வார்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு சொந்த செலவில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை மேற்கொண்ட மாமன்ற உறுப்பினர் அசோகாரெட்டியை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.