புகழ் பெற்ற டீசல் உந்து பொறியைக்
கண்டுபிடித்த ஜெர்மனி
சாதனையாளர்
ருடோல்ப் டீசல்
மார்ச் – 18 - 1858 –
டீசல் பொறியைக் கண்டுபிடித்த
செருமானியப் பொறியியலாளர்
ருடோல்ப் டீசல்,
- 167 – வது பிறந்ததினம்
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
- ஓசூர். மார்ச். 18. –
ருடோல்ப் கிறிஸ்டியன் கார்ல் டீசல்
(மார்ச் 18, 1858 - செப்டம்பர் 29, 1913)
ஜெர்மனியைச் சேர்ந்த
பொறியியலாளரும் புகழ் பெற்ற டீசல் உந்து பொறியைக் கண்டுபிடித்த கண்டுபிடிப்பாளரும் ஆவார்.
ருடோல்ப் டீசல் உந்து பொறி கண்டுபிடித்தது குறித்த ஆய்வுக் கட்டுரையை 1886 ஆம் ஆண்டு வெளியிட்டார்.
டீசல் பொறி எனப்படுவது ஒரு வகையான உள் எரி பொறி ஆகும்.
இது அமுக்குவதால் உண்டாகும் வெப்பத்தை வைத்து எரிப்பு அறையிலுள்ள எரிபொருளை எரிய வைக்கிறது.
எரிம-வளிமக் கலவையை எரிய வைக்கத் தீப்பொறி பயனாகும்
எரியூட்டு-பொறியிலிருந்து
(spark-ignition engine)
இது மாறுபட்டது.
இப்பொறி டீசல் என்பவரால்
1893 ஆம் ஆண்டில்
உருவாக்கப்பட்டது.
மேலும் இதன் பற்றிக்கொள்ளும் வெப்பநிலை பெட்ரோலை ஒப்பிடும்போது குறைவு.
அதனால் இதில் எரியூட்டு (Sprak) என்ற சாதனம் தேவையில்லை.
டீசல் பொறி அதன் உயர் அமுக்கு விகிதம் காரணமாக உள் அல்லது வெளி எரி பொறியினை விட உயர் வெப்பப் பயனுறுதியைக் கொண்டுள்ளது, குறைந்த வேகமுடைய டீசல் பொறிகள் 50% சதவீதத்திற்கும் அதிக பயனுறுதியைக் கொண்டுள்ளது.
டீசல் பொறிகள் இரண்டு மற்றும் நான்கு ஸ்ட்ரோக் வகைகளில்
உற்பத்தி செய்யப்படுகின்றன.
இவை ஆரம்பத்தில்
நிலையான நீராவி
இயந்திரங்களுக்கான திறமிக்க மாற்றுதலாக பயன்படுத்தப்பட்டன.
1910 முதல்
நீர்மூழ்கிகள்,
கப்பல்,
ஆகியவற்றில்
பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
பின்னர்
நகரூர்திகள்,
டிரக்குகள்,
கனரக கருவிகள்,
மாற்றும்
மின் பிறப்பாக்கும் நிலையங்களில் பயனுக்கு வந்தன.
1930களில் மெதுவாக ஒரு சில தானுந்துகளில் பாவனைக்கு வந்தன.
1970லிருந்து ஐக்கிய அமெரிக்காவில் சாலையில் செல்கின்ற மற்றும் சாலையில் செல்லாத டீசல் பொறி வண்டிகளின் பயன்பாடு அதிகரித்தன.
2007 இன் படி ஐரோப்பாவில் விற்பனையாகும் புதிய கார்களில் 50% டீசல் ஆகும்.
-------------------------------------------.