தொழிலாளர் நலன் மற்றும்
திறன் மேம்பாட்டுத்துறை சார்பில்
தேன்கனிக்கோட்டையில்
ரூ.895.87லட்சம் மதிப்பில்
புதியதாக கட்டப்பட்ட
தொழிற் பயிற்சி நிலையம்
திறப்பு விழா
முதலமைச்சர்
காணொலியில் திறப்பு
தளி எம்எல்ஏ பங்கேற்பு
ஓசூர். ஜனவரி. 13. –
கிருஷ்ணகிரி மாவட்டம்,
தேன்கனிக்கோட்டையில் தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டுத்துறை சார்பில் ரூ.895.87 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட தொழிற் பயிற்சி நிலையக் கட்டிடத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச்
செயலகத்திலிருந்து ஜனவரி 13-ம் தேதி காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து தேன்கனிக்கோட்டை
புதிய தொழிற் பயிற்சி நிலைய கட்டிடத்தில் நடந்த விழாவில்
தளி எம்எல்ஏ
டி.ராமச்சந்திரன்
ஓசூர் சார் ஆட்சியர்
பிரியங்கா
தேன்கனிக்கோட்டை
பேரூராட்சி தலைவர்
சீனிவாசன்
ஆகியோர் குத்து விளக்கேற்றினர்.
இந்த நிகழ்வில்
தேன்கனிக்கோட்டை பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.