பேடரப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளி
தமிழ் ஆத்திச்சூடி போட்டியில்
மாவட்டத்தில் முதலிடம்
மாநில போட்டிக்கு தகுதி பெற்ற
2-ம் வகுப்பு மாணவிக்கு
பாராட்டு
ஓசூர். நவ. 21. –
by Jothi Ravisugumar
கலைத் திருவிழா
மாநில போட்டிக்கு தகுதி
ஓசூர் பேடரப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில்
2-ம் வகுப்பு பயிலும் மாணவி தமிழ் ஆத்திச்சூடி போட்டியில் மாவட்டத்தில் முதலிடம் பிடித்து,
மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிக்கு
தகுதி பெற்றார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட
பேடரப்பள்ளி 3-வது
வார்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
இயங்கி வருகிறது.
917 மாணவ, மாணவிகள்
இந்த பள்ளியில்
நல்லொழுக்கத்துடன், தரமான கல்வி, தமிழ் மற்றும் ஆங்கில வழியில் கற்பிக்கப்படுகிறது. இங்கு 1-வது வகுப்பு முதல் 8-வது வகுப்பு வரை 917 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இடப்பற்றாகுறை காரணமாக மூன்று இடங்களில் இந்தப்பள்ளி செயல்படுகிறது.
கலைத்திருவிழா போட்டிகள்
தமிழக அரசு மாணவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்த கலைத்திருவிழா போட்டிகளை நடத்தி வருகிறது.
மாவட்ட தலைநகர் கிருஷ்ணகிரியில் உள்ள புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த நவம்பர் 13 மற்றும் 15-ம் தேதிகளில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் ஒன்றிய அளவில் முதலிடம் பெற்ற ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பங்கேற்றனர்.
மாணவி ஸ்ரீஹரிணி சாதனை
இதில் பேடரப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில் பயிலும் 2-ம் வகுப்பு மாணவி ஸ்ரீஹரிணி
தமிழ் ஆத்திச்சூடி போட்டியில் பங்கேற்று 60 பாடல் வரிகளை கூறி மாவட்டத்திலேயே முதலிடம்
பிடித்து சாதனை படைத்தார்.
சாதனை மாணவிக்கு பாராட்டு
கலைத்திருவிழாவில் மாவட்டத்தில் முதலிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவிக்கு தலைமையாசிரியர் பொன் நாகேஷா தலைமையில்
பாராட்டு விழா நடைபெற்றது. இதில் தலைமையாசிரியர், மாணவிக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பல்வேறு பரிசுகள் வழங்கி
ஊக்கப்படுத்தினார்.
இந்த விழாவில் மாணவி ஸ்ரீஹரிணியின் பெற்றோர் ஹரிஷ், அர்ச்சனா கலந்து கொண்டனர்.
மாணவிக்கு பயிற்சி அளித்த இரண்டாம் வகுப்பு ஆசிரியர்கள் அ.எப்சி ஜாய்ஸ் மேரி, மா.சாந்தி,
மற்றும் செ.அபிராமி ஆகியோருக்கு தலைமையாசிரியர் மற்றும் பெற்றோர் பாராட்டுகளை தெரிவித்தனர்.
மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவி ஸ்ரீஹரிணி, வரும் டிசம்பர் 3-ம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டியில் பங்கேற்க உள்ளார். அந்த போட்டியிலும் முதலிடம் பெற தலைமையாசிரியர் உட்பட அனைத்து ஆசிரியர்களும் வாழ்த்தினர்.