உலகில் சுமார் 781 மில்லியன் வயது வந்தோர் அடிப்படை எழுத்தறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பெண்கள் ஆவர். அத்துடன், சுமார் 103 மில்லியன் சிறார்கள் பாடசாலை வசதிகள் அற்ற நிலையில் உள்ளார்கள்.
இதனால் இவர்கள் அடிப்படைக் கல்வியான எழுத,, வாசிக்க, எண்ணத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.
இந்தியாவில் எழுத்தறிவு 2011ஆம் ஆண்டில் 74.04 சதவீதமாக இருக்கிறது.
2001-11 ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் 9.2 சதவீதம் எழுத்தறிவு அதிகரித்துள்ளது.
இந்தியா முழு கல்வியறிவு பெறுவதற்கு இன்னும்
40 ஆண்டுகள் அதாவது 2060ல்தான் அடையும் என்று யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.
செப்டம்பர் – 8 –
சர்வதேச எழுத்தறிவு நாள் –
International Literacy Day
“Promoting Literacy in the Digital Era”
“டிஜிட்டல் சகாப்தத்தில்
எழுத்தறிவை ஊக்குவித்தல்”
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். செப்டம்பர். 8. -
சர்வதேச எழுத்தறிவு நாள்.
கல்வியறிவு என்பது மனித சமுதாயத்துக்கு கிடைக்கும் கவுரவம்.
சமுதாயத்துக்கு மட்டுமின்றி தனி மனிதன் ஒவ்வொருவருக்கும் கவுரவமிக்கது.
இதை உணர வைக்க வேண்டும் என்பதற்காக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டதுதான்
சர்வதேச எழுத்தறிவு நாள்.
யுனெஸ்கோ
முதன் முதலாக ஒவ்வொரு மனிதருக்கும் எழுத்தறிவு முக்கியம் என்று யுனெஸ்கோ 1966ல் உணர்ந்து இருந்தது.
உலகில் இன்னும் மில்லியன் கணக்கில் கல்வியறிவற்றவர்கள் உள்ளனர்.
இதனால் தேசிய கல்வி கொள்கையை மாற்ற வேண்டியது அவசியம்.
மக்களுக்கு எழுத்தறிவு மூலம் உண்மையான விடுதலை கிடைக்க வேண்டும்.
உலகெங்கிலும் இருக்கும் கல்வி முறைகள் மூலம் குழந்தைகள் மற்றும் உழைக்கும் பெரியவர்களுக்கு தேவையான பயிற்சியை அளிக்க வேண்டும், இதன் மூலம் அவர்கள் படிக்கவும் எழுதவும் கற்றுக்கொள்ள முடியும்.
தேசிய கல்வித் திட்டங்களில் குழந்தைகளுக்கான பள்ளிப்படிப்பு மற்றும் பெரியவர்களுக்கு கல்வியறிவு பயிற்சி ஆகியவை இணையான கூறுகளாக இருக்க வேண்டும் என்று அப்போது யுனெஸ்கோ வலியுறுத்தி இருந்தது.
இதையடுத்து 1967ல் செப்டம்பர் 8ஆம் தேதி முதன் முறையாக சர்வதேச எழுத்தறிவு நாள் கடைபிடிக்கப்பட்டது.
இது தொடர்ந்து கடந்த 50 ஆண்டுகளாக தவறாமல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
எவ்வளவுதான் முயற்சிகள் மேற்கொண்டாலும் இன்னும்
உலகம் முழுவதும் 773 மில்லியன் மக்கள் எழுத்தறிவு இன்றி இருப்பதாக யுனெஸ்கோ வருத்தம் தெரிவித்துள்ளது.
உலகில் சுமார் 781 மில்லியன் வயது வந்தோர் அடிப்படை எழுத்தறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர்
பெண்கள் ஆவர்.
அத்துடன், சுமார் 103 மில்லியன் சிறார்கள் பாடசாலை வசதிகள் அற்ற நிலையில் உள்ளார்கள்.
இதனால் இவர்கள் அடிப்படைக் கல்வியான
எழுத,, வாசிக்க, எண்ணத்
தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.
யுனெஸ்கோவின்
"அனைவருக்கும் கல்வி பற்றிய உலக அறிக்கை (2006)" அறிக்கையின்படி ,
தெற்கு மற்றும் மேற்கு ஆசியாப் பகுதிகளிலேயே மிகக் குறைந்த வீதமானோர் (வயது வந்தோரில்) (58.6%) படிப்பறிவில்லாமல் உள்ளனர்.
அதற்கு அடுத்த படியாக உள்ள பகுதிகள்
ஆபிரிக்கா (59.7%),
அரபு நாடுகள் (62.7%).
தனிப்பட்ட நாடுகளை எடுத்துக் கொண்டால் மிகக் குறைந்த எழுத்தறிவில்லாதோர்
புர்கினா பாசோ (12.8%),
நைஜர் (14.4%),
மாலி (19%).
அறிக்கையின் படி எழுத்தறிவின்மைக்கும் நாடுகளின் வறுமைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
எந்த மொழியிலும் இலகுவான வசனங்களை எழுதவும் படிக்கவும் தெரியாமையே எழுத்தறிவின்மையாகும் என ஐநாவின் சாசனம் எழுத்தறிவின்மையை வரையறுக்கிறது
''2030ஆம் ஆண்டில் அனைவருக்கும் தரம் வாய்ந்த கல்வி அளிப்பதுதான் யுனெஸ்கோ நோக்கம்.
கடந்த 50 ஆண்டு காலத்தில்
நேபாளம்,
வங்கதேசம்,
இந்தியா,
ஈரான்,
பாகிஸ்தான்
ஆகிய நாடுகளில் முதியவர்களிடமும் எழுத்தறிவு அதிகரித்துள்ளது'' .
இந்தியாவில் எழுத்தறிவு 2011ஆம் ஆண்டில் 74.04 சதவீதமாக இருக்கிறது.
2001-11 ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் 9.2 சதவீதம் எழுத்தறிவு அதிகரித்துள்ளது.
இந்தியா முழு கல்வியறிவு பெறுவதற்கு இன்னும் 40 ஆண்டுகள் அதாவது 2060ல்தான் அடையும் என்று தெரிவித்துள்ளது.
----------------------------------------------------.