கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட
காங்கிரஸ் சார்பில்
நாடாளுமன்ற குழு
தலைவர் சோனியாகாந்தி
78-வது பிறந்த நாள் விழா
கொண்டாட்டம்
ஓசூர். டிச. 09. –
நாளுமன்றக் குழு தலைவர்
சோனியாகாந்தி
ஓசூரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில்
நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியாகாந்தியின் 78-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
ஓசூர் மாநகராட்சி, ராமர்தெருவில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சோனியா காந்தியின் 78-வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை வகித்தார்.
மாவட்ட தலைவர்
முரளிதரன்
சோனியா காந்தியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அவரைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மாவட்ட
வட்ட நிர்வாகிகள் சோனியா காந்தியின் உருவப்படத்துக்கு
மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
அதைத் தொடர்ந்து ஓசூர் அரசு தலைமை பொது
மருத்துவமனையில் சோனியா காந்தி பிறந்தநாளை
முன்னிட்டு பால்,ரொட்டி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர்
முரளிதரன் பங்கேற்று மகப்பேறு பிரிவில் உள்ள தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கும்,
இதர நோயாளிகளுக்கும் பால் மற்றும் ரொட்டி வழங்கினார். இந்த நிகழ்வில் காங்கிரஸ் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
அதேபோல கிருஷ்ணகிரி, சூளகிரி, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, தளி, அஞ்செட்டி,
ஆகிய இடங்களிலும்
காங்கிரஸ் கட்சி சார்பில், நாடாளுமன்ற
குழு தலைவர் சோனியா காந்தியின்
78-வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வுகளில் மாவட்ட வட்ட அளவில் 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.