பேரறிஞர் அண்ணா -
56-வது நினைவு நாள்
ஓசூர் சந்திரசூடேஸ்வரர்
மலைக்கோயிலில்
சமபந்தி விருந்து
சப்கலெக்டர் பங்கேற்பு
ஓசூர். பிப். 3. –
பேரறிஞர் அண்ணா
ஓசூர் மலைக்கோயிலில் மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 56-வது நினைவு நாள் முன்னிட்டு சமபந்தி விருந்து நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில்
தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் - 56 - வது நினைவு நாள் பிப்ரவரி 3-ம் தேதி அனுசரிக்கப்பட்டது.
சமபந்தி விருந்து
நினைவு நாளை முன்னிட்டு, ஓசூர் மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் மலைக்கோயிலில் மதியம் சமபந்தி விருந்து நடந்தது.
இந்த சமபந்தி விருந்தில்
ஓசூர் சப்-கலெக்டர்
பிரியங்கா,
தாசில்தார்
சின்னசாமி,
மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர்
என்.எஸ். மாதேஸ்வரன்,
மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்
விஜயகுமார்,
பகுதி செயலாளர்
ராமு,
கோயில் செயல் அலுவலர்
சாமிதுரை
உட்பட பலர் கலந்து கொண்டு பொதுமக்களுடன் அமர்ந்து சமபந்தி விருந்து சாப்பிட்டனர்.