ஓசூர் முல்லைநகர்
அரசு மேல்நிலைப்பள்ளியில்
நாட்டு நலப்பணித்திட்ட
சிறப்பு முகாம்
பள்ளி வளாகம் தூய்மை,
போதை ஒழிப்பு,
தோட்டம் அமைத்தல்,
பணிகளில் பங்கேற்ற மாணவர்கள்
ஓசூர். டிச. 30. –
நாட்டு நலப்பணித்திட்டம்
ஓசூர் முல்லைநகர் அரசு மேல்நிலைப்பள்ளியில்
நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்
டிச.24-ம் தேதி முதல் டிச.30-ம் தேதி வரை
நடைபெற்றது. இதில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற
மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.
பள்ளி வளாகம் தூய்மை
போதை ஒழிப்பு
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின்
நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் அரசுப்பள்ளிகளில் நாட்டு நலப்பணித்திட்ட
குழுக்கள் அமைக்கப்பட்டு,
சிறப்பு முகாம்கள் நடத்தி, பள்ளி வளாகம்
தூய்மை, போதைப்பொருட்கள் விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு நலப்பணிகளில் மாணவர்கள்
ஈடுபட்டு வருகின்றனர்.
ஓசூர் முல்லைநகர்
அரசு மேல்நிலைப்பள்ளி
அதன் தொடர்ச்சியாக ஓசூர் முல்லைநகர்
அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
கடந்த டிசம்பர் 24-ம் தேதி
தொடங்கி டிசம்பர் 30-ம் தேதி வரை நடைபெற்றது.
முல்லைநகர் அரசு
மேல்நிலைப்பள்ளியில்
6-வது வகுப்பு முதல் 12-வது வகுப்பு வரை
1980 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த அரசுப்பள்ளியில்
ஒரு தலைமையாசிரியர் உட்பட 65 ஆசிரியர்கள்
மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் பணியில்
ஈடுபட்டுள்ளனர்.
இங்கு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உட்பட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பள்ளியில்
2019-ம் ஆண்டில் நாட்டு நலப்பணித்திட்டம் தொடங்கப்பட்டு, கடந்த 5 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
நாட்டு நலப்பணி திட்டத்தில்
ஒரு ஆண்டுக்கு 50 மாணவர்கள் என இதுவரை மொத்தம் 250 மாணவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.
நாட்டு நலப்பணித்திட்ட முகாம்களில் பங்கேற்றுள்ள 25 மாணவர்களும், ஒரு குழுவுக்கு 5 மாணவர்கள் என 5 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். இந்த 5 குழுக்களுக்கும்
மூதறிஞர் ராஜாஜி.
பெருந்தலைவர் காமராஜ்.
பேரறிஞர் அண்ணா.
ஏபிஜெ அப்துல்கலாம்,
வ.உ.சிதம்பரனார்,
என ஐந்து தேசிய தலைவர்களின் பெயர்களில் குழு அமைக்கப்பட்டு,
நாட்டு நலப்பணித்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஓசூர் அரிமா சங்க
மூத்த நிர்வாகி அரிமா
டாக்டர் ஒய்விஎஸ்.ரெட்டி,
முல்லைநகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் என்எஸ்எஸ் தொடங்கிய நாள் முதல்,
இன்று வரை
கடந்த 5 ஆண்டுகளாக ஓசூர் அரிமா
சங்க மூத்த நிர்வாகி அரிமா டாக்டர் ஒய்விஎஸ்.ரெட்டி, நன்கொடை அளித்து, என்எஸ்எஸ் மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
முதல் நாள் டிசம்பர் 24-ம் தேதி
நாட்டு நலப்பணித் திட்ட முகாம்
தொடக்க நிகழ்வு நடைபெற்றது.
தலைமையாசிரியர்
முனைவர் க.காந்தி தலைமை வகித்தார்.
இதில் சிறப்பு விருந்தினராக
ஓசூர் மாவட்ட
கல்வி அலுவலர் ஆர்.வி.ரமாவதி
பங்கேற்று நாட்டு நலப்பணித்
திட்ட முகாமை
தொடங்கி வைத்தார்.
இதில் ஓசூர் அரிமா சங்க
மூத்த நிர்வாகி, நன்கொடையாளர்
அரிமா டாக்டர். ஒய்.வி.எஸ்.ரெட்டி
பங்கேற்று சிறப்புரையாற்றினார். இதில்
என்எஸ்எஸ் திட்ட அலுவலர் மாரியப்பா, உதவி திட்ட அலுவலர் சி.சங்கர், மற்றும்
பிடிஏ தலைவர் மகேஷ்பாபு, ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இரண்டாவது நாள் 25.12.24
காலை 6 மணிமுதல் 7.30 மணிவரை
யோகா, மனவளக்கலை மையத்தில் மாணவர்கள் பயிற்சி பெற்றனர்.
காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை
முல்லைநகர் அரசுப்பள்ளி வளாகத் தூய்மை பணியில் மாணவர்கள் பங்கேற்றனர்.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை
டிராபிக் வார்டன் கஜேந்திரன் தலைமையில்
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி பெற்றனர்.
முதல் உதவி பயிற்சி
மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை
திரு.ஏ.ஜெகநாதன் தலைமையில் மாணவர்களுக்கு முதல் உதவி பயிற்சி அளிக்கப்பட்டது.
மூன்றாம் நாளான டிசம்பர் 26-ம் தேதி
காலை - யோகா பயிற்சி,
ஓசூர் மீரா மருத்துவமனை நிறுவனர்
டாக்டர். டி.டி.சண்முகவேல் தலைமையில்
மாணவர்களுக்கு போதை ஒழிப்பு
விழிப்புணர்வு பயிற்சி,
முல்லைநகர் அரசுப்பள்ளி
முதுகலை ஆசிரியர் சங்கர்
தலைமையில் விளையாட்டு போட்டிகள்,
உங்கட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் எம்.சீனிவாசன் தலைமையில்
திறன்பேசி சாதகமா, பாதகமா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
நான்காம் நாள் 27-ம் தேதி
காலை - யோகா பயிற்சியும்,
சுகாதார அலுவலர்
டாக்டர்.எம்.ரேணுகா தலைமையில் மாணவர்களுக்கு
தன்சுத்தம் மற்றும் உடல் பாதுகாப்பு விழிப்புணர்வு
மதியம் - ஓசூர் ஏ.பெரியதம்பி
செட்டியார் பவுண்டேஷன்
சார்பில் அரிமா ஏ.தாமஸ்ஜான் தலைமையில்
மகிழ்ச்சி, ஆரோக்கியம், மனிதநேயம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
சிங்கப்பூர் பல்கலைக்கழக பேராசிரியர்
டாக்டர் ஜெயந்த்குமார் தலைமையில்
டிஜிட்டல் கல்வி முறை குறித்து
விழிப்புணர்வு நடைபெற்றது.
ஐந்தாம் நாள் 28-ம் தேதி
காலை - யோகா பயிற்சியும்
முல்லைநகர் பள்ளி வளாகத்தூய்மை
மற்றும் தோட்டம் அமைத்தல் பணியில் மாணவர்கள்
ஈடுபட்டனர்.
இந்திய சுடர்கல்வி அறக்கட்டளை
கி.பாலமணிகண்டன் தலைமையில்
சமூக முன்னேற்றத்தில் மாணவர்களின் பங்கு
விழிப்புணர்வு சொற்பொழிவும் நடைபெற்றது.
ராயக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி
இரா.சீனிவாசன் தலைமையில்
மாணவர்கள் பங்கேற்ற ஆடல், பாடல், பாட்டுக்கு பாட்டு ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
ஆறாம்நாள் 29-ம் தேதி காலை –
யோகா பயிற்சியும்
ஓசூர் அரசு மேல்நிலைப்பள்ளி(உருது)
ஓவிய ஆசிரியர் பாலாஜி தலைமையில்
மாணவர்களுக்கு
ஓசூர் பிரம்ம மலையேற்றம் பயிற்சி. மற்றும்
பள்ளி வளாகம் தூய்மைப்படுத்தும் பணியில் மாணவர்கள் பங்கேற்றனர்.
முல்லைநகர் அரசுப்பள்ளி
முதுகலை ஆசிரியர்
பால் ஆரோக்கியராஜ் தலைமையில்
மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
உத்தனப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி
முதுகலை ஆசிரியர் வி.தியாகராசு தலைமையில்
மாணவர்களிடையே குழு
கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்த முகாமில் பள்ளி வளாக தூய்மைப்பணிகளில் ஈடுபட்ட மாணவர்களை, நன்கொடையாளர்
அரிமா ஒய்விஎஸ்.ரெட்டி,
அரிமா திருப்பதிசாமி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஊக்கப்படுத்தினர்.
ஏழாம்நாள் டிசம்பர் 30-ம் தேதி
காலை – யோகா பயிற்சி
மற்றும் ராம்நாயக்கன் ஏரி பூங்கா தூய்மைப்படுத்தும் பணி மற்றும்
மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியில் மாணவர்கள் ஈடுபட்டனர்
பரிசளிப்பு நிகழ்ச்சி
நாட்டு நலப்பணித்திட்ட முகாமின்
கடைசி நாளான டிசம்பர் 30-ம் தேதி
பரிசளிப்பு நிகழ்ச்சி ராம்நாயக்கன் ஏரி பூங்காவில்
நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர்களாக ஓசூர் அரிமா
சங்க மூத்த நிர்வாகி நன்கொடையாளர் அரிமா டாக்டர்.ஒய்விஎஸ்.ரெட்டி,
ஓசூர் அரிமா சங்க தலைவர்
அரிமா சந்திராரெட்டி
ஓசூர் அரிமா சங்க செயலாளர்
அரிமா நாராயணசாமி
ஆகியோர் பங்கேற்று
பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற
மாணவர்களுக்கு பரிசுகள்
வழங்கி பாராட்டினர்.
இந்த நிகழ்வில்
என்எஸ்எஸ் திட்ட அலுவலர்
மாரியப்பா,
கலந்து கொண்டார்.
யோகா பயிற்சி சான்றிதழ்
நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடந்த 7 நாட்களும்
மாணவர்கள், யோகா மற்றும் மனவளக்கலை
மையத்தில் யோகா பயிற்சி பெற்றனர்.
பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு ஓசூர் அரிமா சங்க
மூத்த நிர்வாகி அரிமா டாக்டர் ஒய்விஎஸ்.ரெட்டி
தலைமையில் யோகா பயிற்சிக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.