விஞ்ஞானி ஆல்பிரட் நோபல்
தன்னுடைய கடைசி உயிலின் மூலம்,
தன் பெரும் சொத்தைக் கொண்டு
நோபெல் பரிசை நிறுவினார்.
இவரின் நினைவாக
நோபெலியம் (Nobelium)
என்னும் synthetic தனிமம்
பெயரிடப்பட்டது.
அக்டோபர் – 21- 1833 –
உலகளவில் புகழ்பெற்ற
நோபல் பரிசை உருவாக்கியவர்,
கண்டுபிடிப்பாளர்,
தொழில்முனைவோர்,
விஞ்ஞானி,
தொழிலதிபர்,
கவிஞர்
நாடக எழுத்தாளர்
என பன்முகத்தை கொண்ட
”ஆல்பிரட் நோபல்”
192-வது பிறந்ததினம்.
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். அக். 21. -
விஞ்ஞானி ஆல்பிரட் நோபல்
நோபெல் பரிசினை உருவாக்கிய சுவீடன் நாட்டு அறிவியலாளர்.
டைனமைட்
வெடிமருந்தைக் கண்டுபிடித்தவர்.
ஆல்ஃபிரட் நோபெல் ஒரு
வேதியாளர்,
பொறியாளர்,
புத்தாக்குனர்,
ஆயுதத் தயாரிப்பாளராகவும்,
திகழ்ந்தார்.
போப்பர்சு என்னும் பெரிய ஆயுத உற்பத்தி நிறுவனத்துக்கு உரிமையாளராக இருந்தார். தன்னுடைய கடைசி உயிலின் மூலம், தன் பெரும் சொத்தைக் கொண்டு நோபெல் பரிசை நிறுவினார். இவரின் நினைவாக நோபெலியம் (Nobelium)என்னும் synthetic தனிமம் பெயரிடப்பட்டது.
கண்டுபிடிப்பாளர் மற்றும் பொறியாளராகிய
இம்மானுவேல் நோபலுக்கும் (1801-1872),
கரோலினா அன்றியெட்டெ
நோபலுக்கும் (1805-1889),
நான்காவது மகனாக ஆல்பிரட் நோபல் ஸ்டாக்ஹோமில் பிறந்தார்.
அந்த ஜோடி 1827 ல் திருமணம் செய்துகொண்டது.
மொத்தமாக அவர்கள் எட்டு குழந்தைகள் பெற்றுக்கொண்டனர். குடும்ப வறுமையின் காரணமாக, ஆல்ஃபிரட் மற்றும் அவரது மூன்று சகோதரர்கள் மட்டுமே குழந்தைப் பருவத்தை உயிருடன் கடந்தனர்.
நோபல் 1857 இல், ஒரு எரிவாயு மீட்டரைப் பற்றிய , தனது முதல் காப்புரிமையை தாக்கல் செய்தார்.
நோபல் வெடிபொருட்களின் ஆய்வில் தன்னை அர்ப்பணித்தார்.
குறிப்பாக நைட்ரோக்லிசெரினின்
(டுரின் பல்கலைக்கழகத்தில் தியோபில் ஜூல்ஸ் பிலோசின் மாணவரான அச்கானியோவால், சொப்ரீரோவால் 1847 இல் கண்டுபிடிக்கப்பட்டது)
· டைனமைட்
வெடி கண்டுபிடிப்பு
பாதுகாப்பான உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் அதிக ஆர்வம் காட்டினார்.
நோபல் 1863 ஆம் ஆண்டு ஒரு வெடி கண்டுபிடித்தார்;
மேலும் 1865 ஆம் ஆண்டு, அவர் வெடிக்கும் தொப்பியை வடிவமைத்தார்.
டைனமைட்டை1867 இல் கண்டுபிடித்தார். டைனமைட்டிற்கு, அமெரிக்க மற்றும் பிரிட்டனில் காப்புரிமை பெறப்பட்டது. மேலும் இது சுரங்கம் மற்றும் சர்வதேச அளவில் போக்குவரத்து நெட்வொர்க்குகளுக்கு பயன்படுத்தப்பட்டது. 1875 ஆம் ஆண்டு நோபல் மேலும் நிலையான மற்றும் டைனமைட்டை விட சக்தி வாய்ந்த, கெலிக்னிட்டை கண்டுபிடித்தார்.
கவுரவ டாக்டர் பட்டம்
நோபல், பிற்காலத்தில் இரண்டு நோபல் பரிசுகளுக்கு ஆட்களை தேர்வுசெய்யும் நிறுவனமான அறிவியல் ராயல் ஸ்வீடிஷ் அகாடமியில் 1884 ம் ஆண்டில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும் 1893 ஆம் ஆண்டு உப்சாலா பல்கலைக்கழகத்தில் கெளரவ டாக்டர் பட்டம் பெற்றார்.
350 காப்புரிமை களை சர்வதேச அளவில் வெளியிட்டார். நோபல் சமாதானத்தை விரும்புகிறவராக இருந்தாலும், அவரின் மரணத்திற்கு முன்னால்
90 ஆயுத தொழிற்சாலைகள் நிறுவினார்.
1891 ஆம் ஆண்டில், அவரது தாயார் மற்றும் அவரது சகோதரர் லுட்விக்கின் மரணத்திற்குப் பிறகு நோபல் பாரிஸில் இருந்து இத்தாலியின் சான் ரெமோக்கு, சென்றார்.
மார்பு அவதியுற்று, நோபல் 1896 ல் பெருமூளை இரத்த கசிவின் காரணமாக, வீட்டில் இறந்தார்.
அவரது குடும்பம், நண்பர்கள் அல்லது
சக மாணவர்களுக்கு தெரியாமலேயே,
அவர் நோபல் பரிசுகள் வழங்குவதற்கு
தனது செல்வத்தை விட்டு சென்றார்.
அவர் ஸ்டாக்ஹோமில் நோராவில் புதைக்கப்பட்டார்.
தொழிற்சாலை விபத்தில் இவரது சகோதரர் எமில் மரணமடைந்தார். ஆனால், ஆல்பிரட் இறந்ததாக நினைத்து,
‘மரண வியாபாரி இறந்துவிட்டார்’
என்று செய்தி வெளியானது.
அதனால் மனம் உடைந்த
ஆல்பிரட் நோபல்
தன்னுடைய கடைசி உயிலின் மூலம்,
தன் பெரும் சொத்தை வைத்து
நோபல் பரிசை
நிறுவினார்.
-------------------------------------------.