கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஓசூர் மாநகராட்சி
மத்திகிரி தூய ஆரோக்கிய அன்னை
ஆலயத்தில் மறைக்கல்வி போட்டி
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு
பாராட்டு விழா
ஓசூர் மறைவட்ட முதன்மை குரு பங்கேற்பு
ஓசூர். மார்ச். 3. –
ஓசூர் மாநகராட்சி மத்திகிரி
நேதாஜி நகரில்
உள்ள தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் மறைக்கல்வி வகுப்பு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது.
பாரம்பரிய ஆலயம் (1924 – 2024)
மத்திகிரி குதிரைப்பாளையத்தில்
தூய ஆரோக்கிய அன்னை ஆலயம்,
1924-ம் ஆண்டு கட்டப்பட்டு,
2024-ம் ஆண்டில் நூற்றாண்டு விழா, ஆயர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
யூபிலி திருச்சிலுவை
இந்த பாரம்பரிய ஆலயத்தில் ஆயர் அவர்களால் மந்திரிக்கப்பட்ட
யூபிலி திருச்சிலுவை வைக்கப்பட்டு
தினமும் சிறப்பு திருப்பலி நடைபெற்று வருகிறது.
யூபிலி பெரிய திருச்சிலுவை
பிப்ரவரி 23-ம் தேதி
தருமபுரி மறை மாவட்ட ஆயர்
முனைவர் லாரன்ஸ் பயஸ்
அவர்களால் வழங்கப்பட்ட
யூபிலி பெரிய சிலுவை பவனி
பங்கு தந்தை கிறிஸ்டோபர்
தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
மறைக்கல்வி வகுப்பு
தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்தில்
ஞாயிறுதோறும் மறைக் கல்வி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த மறைக்கல்வி வகுப்பில் பயிலும் மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படுகிறது.
நடப்பாண்டில் இந்த மறைக்கல்வி வகுப்பில்
யூகேஜி வகுப்பு முதல் 50 மாணவ, மாணவிகள்
பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்த மறைக்கல்வி மாணவ,
மாணவிகளுக்கிடையே
பேச்சுப்போட்டி,
ஓவியப்போட்டி,
மாறுவேடப்போட்டி,
பாட்டுப்போட்டி,
மனப்பாட போட்டி,
வினாடிவினா போட்டி,
மறைக்கல்வி வகுப்பில் தவறாமல் பங்கேற்கும்
சிறந்த மாணவர்களுக்கான போட்டி
என பல போட்டிகள் நடத்தப்பட்டது.
இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளித்து பாராட்டும் விழா
மார்ச் 2-ம் தேதி நடைபெற்றது.
இந்த பாராட்டு விழாவில்
ஓசூர் மறைவட்ட முதன்மை குரு
அருட்பணி பெரியநாயகம்,
பங்கு தந்தை கிறிஸ்டோபர்,
ஆகியோர் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம், பதக்கங்கள் வழங்கி பாராட்டினர்.
இதில் முதல் பரிசு 50 பேருக்கும், இரண்டாவது பரிசு – 35 பேருக்கும், மூன்றாவது பரிசு – 23 பேருக்கும், ஆறுதல் பரிசு – 20 பேருக்கும், என பரிசுகள் வழங்கப்பட்டது.
மறைக்கல்வி ஆசிரியர்
அருட்சகோதரி பிரவீணா
ஆசிரியை அமலி,
ஆசிரியை ஷர்மிளா,
ஆசிரியை எலிசபெத்,
ஆசிரியர் லோகேஷ்
ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
இந்த விழாவில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
முன்னதாக ஆலயத்தில் நடந்த ஞாயிறு
திருப்பலியில்
ஓசூர் மறைவட்ட முதன்மை குரு
அருட்பணி பெரியநாயகம்
தலைமையில் திருப்பாடல்களுடன், மறையுரை, நற்கருணை ஆராதனையுடன் திருப்பலி நடைபெற்றது.
இந்த நிகழ்வில்
பங்கு தந்தை கிறிஸ்டோபர்,
அருட்பணியாளர் ராயப்பர்,
ஆலய பங்கு குழுவினர்,
அருட் சகோதரிகள்,
பாடல் குழுவினர்,
பக்த சபையினர்,
மற்றும் இறை மக்கள் கலந்து கொண்டனர்.