கிருஷ்ணகிரி மாவட்டம்
அஞ்செட்டி வட்டம்
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை
மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநர்
திரு.எம்.சுந்தரேஷ் பாபு இ.ஆ.ப.,
அவர்கள்,
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
ஆகியோர்
நேரில் பார்வையிட்டு ஆய்வு.
ஓசூர். நவ. 15. –
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டத்தில்
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை
மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநர்
திரு.எம்.சுந்தரேஷ் பாபு இ.ஆ.ப.,
அவர்கள்,
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
ஆகியோர் நவ. 15-ம் தேதியன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநர்
திரு.எம்.சுந்தரேஷ் பாபு இ.ஆ.ப.,
அவர்கள்,
தெரிவித்ததாவது:
இந்திய அரசு 2027 -ம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஜூன் 2025 -ல் அறிவித்தது.
அதன்படி, 2026-2027 -ல் முதல் கட்டம் மற்றும் இரண்டாம் கட்டமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ளது.
அதற்கான முன் சோதனை தமிழ்நாட்டில்
கிருஷ்ணகிரி மாவட்டம்
அஞ்செட்டி வட்டம்,
திருவள்ளூர் மாவட்டம்
ஆர்.கே.பேட் வட்டம்,
காஞ்சிபுரம் மாவட்டம்
மாங்காடு நகராட்சி
ஆகிய 3 இடங்களில் நடைபெறுகிறது.
மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான முன்-சோதனை தொடர்பான பணிகள் 15 நாட்களுக்கு முன்பாகவே ஆரம்பிக்கப்பட்டது.
இப்பணிக்காக அஞ்செட்டி பகுதியில்
110 அலுவலர்கள் நியமிக்கப்பட்டு,
அவர்களுக்கு அஞ்செட்டியிலேயே
மூன்று நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
கணக்கெடுப்பு அலுவலர்கள்
01.11.2025 முதல் 07.11.2025 வரை
சுய கணக்கீடு பணிகளும்,
10.11.2025 முதல் 14.11.2025 வரை
டிஜிட்டல் லே-அவுட் பணிகளும்,
15.11.2025 முதல் 30.11.2025 வரை
நேரடியாக வீடு வீடாக சென்று மக்கள் கணக்கெடுப்பு பணிகள்
மேற்கொண்டு வருகின்றனர்.
அஞ்செட்டி வட்டத்திற்குட்பட்ட
மாடக்கல்,
தக்கட்டி,
உரிகம்,
கோட்டையூர்,
மஞ்சுகொண்டப்பள்ளி,
அஞ்செட்டி,
நாட்டரம்பாளையம்,
தொட்டமஞ்சி
ஆகிய 8 ஊராட்சிகளில் உள்ள
105 குக்கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இக்கணக்கெடுப்பு பணிகளில்
வீடுகளின் வகைகள்,
வீடுகள் மற்றும் அறைகளின் எண்ணிக்கை,
குடும்ப உறுப்பினர்கள் விபரம்,
குடிநீர் பெறப்படும் விபரங்கள்,
கேஸ் இணைப்பு,
நெட் இணைப்பு,
லேப்டப்,
கைபேசி
விபரங்கள் உள்ளிட்ட 34 கேள்விகளுக்கான பதில்கள் சேகரிக்கப்படும்.
8-வது கணக்கெடுப்பு
இம்மக்கள் தொகை கணக்கெடுப்பு
இந்திய சுதந்திரத்திற்கு பிறகு
8 -வது கணக்கெடுப்பாகும்.
2027 - ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பானது
இந்தியாவின் முதல் முழுமையான டிஜிட்டல் கணக்கெடுப்பாகும்.
அதில் எதிர்நோக்கவிருக்கும் செயல்பாட்டு சவால்களைக் கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய உதவும்.
முன்-சோதனையின் போது,
மொபைல் செயலிகளைப் பயன்படுத்தி தரவுகள் சேகரிக்கப்படுவதுடன்,
டிஜிட்டல் லே-அவுட் வரைபடங்களும் வரையப்படும்.
அதற்கு முன்னோட்டமாக செயலிகள் சரியான முறையில் செயல்படுகிறதா,
அஞ்செட்டி போன்ற மலை கிராமங்களில் நெட்ஒர்க் செயல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை கண்டுபிடித்து சரிசெய்வதற்காக
முதற்கட்டமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு முன்-சோதனை அஞ்செட்டி வட்டத்தில்
நடத்தப்படுகிறது என
மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநர்
திரு.எம்.சுந்தரேஷ் பாபு இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து,
மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநர்
அவர்கள்,
மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர்,
திரு.கே.ராஜா,
திருமதி.ஸ்ரீதேவி,
திரு.காதர் பாஷா
ஆகிய 3 நபர்களின் இல்லங்களில் நேரடியாக சென்று கணக்கெடுக்கும் பணிகளை பார்வையிட்டனர்.
இந்த ஆய்வின்போது,
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள்
இணை இயக்குநர்
திரு.சின்னதுரை,
துணை இயக்குநர்
திரு.வாசுதேவன்,
உதவி இயக்குநர்
திரு.இளையராஜா,
வட்டாட்சியர்
திரு.செந்தில்குமார்
உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
-----------------------------------.