முதலமைச்சரின்
இளைஞர் விளையாட்டு விழா
கிருஷ்ணகிரி மாவட்ட அளவிலான
விளையாட்டுப்போட்டிகள்
"இது நம்ம ஆட்டம் 2026' –
முதலமைச்சரின் இளைஞர் விளையாட்டு விழா
மாவட்ட விளையாட்டு வளாகத்தில்
31.01.2026 மற்றும் 01.02.2026 ஆகிய இரண்டு நாட்களில்
நடைபெறவுள்ளது
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி. ஜன. 29. –
"இது நம்ம ஆட்டம் 2026'
கிருஷ்ணகிரி மாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டிகள்
"இது நம்ம ஆட்டம் 2026' -
முதலமைச்சரின் இளைஞர்
விளையாட்டு விழா
மாவட்ட விளையாட்டு வளாகத்தில்
31.01.2026 மற்றும் 01.02.2026
ஆகிய இரண்டு நாட்களில்
கீழ்க்காணும்படி நடைபெறவுள்ளது என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
தமிழ்நாடு முழுவதும்
வட்டார அளவில்,
மாவட்ட அளவில்
மற்றும்
மாநில அளவில்
முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு
திருவிழா
'இது நம்ம ஆட்டம் 2026 போட்டிகள்
நடத்த உத்தரவிட்டுள்ளதன்
அடிப்படையில்
கிருஷ்ணகிரி மாவட்டத்தினைச் சார்ந்த
அனைத்து (10) வட்டாரங்களிலும்
நடத்தப்பட்ட தனிநபர் மற்றும்
குழுப்போட்டிகளில்
முதல் இடம் பெற்றவருக்கு
தலா ரூ.3,000/-பரிசுத்தொகையும்.
இரண்டாம் இடம் பெற்றவருக்கு
தலா ரூ.2,000/- மற்றும்
மூன்றாம் இடம் பெற்றவருக்கு
தலா ரூ.1,000/- பரிசுத்தொகை
வழங்கப்பட்டது.
மேலும் இப்போட்டிகளில்
ஆண்கள் 4251 நபர்கள்
மற்றும்
பெண்கள் 2931 நபர்கள்
கலந்து கொண்டனர்.
அனைத்து ஒன்றியங்களில்
முதல் இடம் பிடித்த வீரர்/வீராங்கனையினர்
மாவட்ட அளவில் நடைபெறும்
போட்டியில் பங்குபெறுவர்கள்.
இப்போட்டியில் பங்கேற்கும்
வீரர்/வீராங்கனைகளுக்கு
சீருடைகள் வழங்கப்படும்.
மாவட்ட அளவில் வெற்றி பெறும்
Street Cricket (ஆண்கள்),
கபாடி(பெண்கள்)
மாநில அளவிலான போட்டிகளில்
பங்கேற்பார்கள்.
இம்மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்/வீராங்கனைகளுக்கு
பயணப்படி,
உணவு,
ஆகியன தமிழ்நாடு விளையாட்டு
மேம்பாட்டு ஆணையத்தால்
ஏற்பாடு செய்யப்படும்.
மேலும்,
மாவட்ட அளவில்
தனிநபர் மற்றும் குழுப்போட்டிகளில்
முதல் இடம் பெறுபவருக்கு
தலா ரூ.6,000/- பரிசுத்தொகையும்,
இரண்டாம் இடம் பெறுபவருக்கு
தலா ரூ.4,000/- மற்றும்
மூன்றாம் இடம் பெறுபவருக்கு
தலா ரூ.2.000/-பரிசுத்தொகை
வழங்கப்பட உள்ளது.
முதலமைச்சர் இளைஞர்
விளையாட்டு திருவிழா -
'இது நம்ம ஆட்டம் 2026'
நேரடி மாவட்ட அளவிலான
ஓவியப்போட்டி.
கோலப்போட்டி,
மாற்றுதிறனாளி (100 மீட்டர்) பார்வை குறைபாடுடையோர் (குண்டு எறிதல்)
அறிவாற்றல் குறைபாடுடையோர் (100 மீட்டர்). செவித்திறன் குறைபாடுடையோர் (100 மீட்டர்)
போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும்
16 வயது முதல் 35 வயதுடைய
விளையாட்டு வீரர். வீராங்கனைகள்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்
இணையதளமான
www.sdat.tn.gov.in/
www.cmyouthfestival.sdat.in
வாயிலாக முன்பதிவு செய்து அல்லது
நேரடியாக போட்டி நடைபெறும் நாளன்று
பதிவு செய்து தனிநபர் மற்றும்
குழுப் போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.
கிருஷ்ணகிரி மாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டிகள்
'இது நம்ம ஆட்டம் 2026'
முதலமைச்சரின் இளைஞர்
விளையாட்டு விழா
மாவட்ட விளையாட்டு வளாகத்தில்
31.01.2026 அன்று
ஆண்களுக்கு நடைபெறும்
விளையாட்டு போட்டிகள்
ஸ்ட்ரீட் கிரிக்கெட்,
வாலிபால்,
தடகளம் (100 மீ & குண்டு எறிதல்),
மாற்றுதிறனாளி (100 மீட்டர்).
பார்வை குறைபாடுடையோர் (குண்டு எறிதல்),
அறிவாற்றல் குறைபாடுடையோர் (100 மீட்டர்).
செவித்திறன் குறைபாடுடையோர் (100 மீட்டர்).
பெண்களுக்கு நடைபெறும்
விளையாட்டு போட்டி
கோலப் போட்டி (3 பேர் கொண்ட குழு)
கருப்பொருள் :
செம்மொழியான தமிழ்மொழி,
01.02.2026 அன்று
ஆண்களுக்கு நடைபெறும்
விளையாட்டு போட்டிகள்
கயிறு இழுத்தல்,
கபடி,
கேரம்.
பெண்களுக்கு நடைபெறும்
விளையா போட்டி
த்ரோபால்
என இரண்டு நாட்கள் போட்டிகள் நடத்தப்படவுள்ளது. என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார். இ.ஆ.ப.
அவர்கள் தெரிவித்துள்ளார்.
-----------------------------------------------.