மக்கள் தொகை மற்றும்
வீடுகள் கணக்கெடுப்பு - 2027
கிருஷ்ணகிரி மாவட்டம்
அஞ்செட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில்
மக்கள் தொகை கணக்கெடுப்பு - 2027
வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பிற்கான
முன் சோதனை பயிற்சி வகுப்பு
(நவ. 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை)
சென்னை மக்கள் தொகை கணக்கெடுப்பு
இயக்குனரக இணை இயக்குனர்
பங்கேற்பு
ஓசூர். நவ. 4. –
மக்கள் தொகை கணக்கெடுப்பு – 2027,
வீட்டுபட்டியல் ,
வீடுகள் கணக்கெடுப்பு
முன்சோதனை பயிற்சி வகுப்பு
அஞ்செட்டியில் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு – 2027, வீட்டுபட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பிற்கான 3 நாள்
முன் சோதனை பயிற்சி வகுப்புகளில்
ஆசிரியர்கள் மற்றும் பல்துறை அலுவலர்கள்
கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
இந்த பயிற்சி வகுப்புகள் நவ.3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.
அஞ்செட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில்
நவம்பர் 3-ம் தேதி தொடங்கிய
இந்த பயிற்சி வகுப்பில்
சென்னை மக்கள் தொகை
கணக்கெடுப்பு இயக்குனரக
இணை இயக்குனர்
திரு. சின்னதுரை
அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றிய போது கூறியதாவது,
2027-ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு முன் சோதனை திட்டத்திற்கு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அஞ்செட்டி வட்டம்,
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாங்காடு நகராட்சி,
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆர்கே பேட்டை,
ஆகிய மூன்று இடங்கள்
தேர்வு செய்யப்பட்டுள்ளது.
முதல் டிஜிட்டல் சென்செஸ்
தமிழ்நாடு அரசும் மத்திய அரசும் கலந்து
ஆலோசித்து முடிவு செய்யப்பட்ட இந்த
மக்கள் தொகை 2027 -ம் ஆண்டு
கணக்கெடுப்பு பணி
நம் நாட்டிலேயே நடக்கக்கூடிய முதல் டிஜிட்டல்
சென்செஸ் ஆகும்.
அஞ்செட்டியில் இந்த பயிற்சி வகுப்பு நவ. 3-ம் தேதி தொடங்கி 5-ம் தேதி முடிவடைகிறது.
இந்த பயிற்சி வகுப்பில் ஆசிரியர்கள் மற்றும்
பல்துறை அலுவலர்கள் பயிற்சி பெற்று ,
கணக்கெடுப்பாளர்களாக பணி செய்வார்கள்.
இந்த கணக்கெடுப்பு பணி
நவம்பர் மாதம் 10-ம் தேதி தொடங்கி
30-ம் தேதி முடிவடையும்.
டிஜிட்டல் மேப்
நவ. 10-ம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை
கணக்கெடுப்பாளர்கள்
தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில்
டிஜிட்டல் மேப் செய்வார்கள்.
மக்கள் தொகை மற்றும்
வீடுகள் கணக்கெடுப்பு
நவ.15-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை
வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்துவார்கள்.
கணக்கெடுப்பாளர்கள் ஒவ்வொரு வீட்டிலும்
வீடு கட்டப்பட்ட விதம்,
கூரை,
சுவர்,
மற்றும் வசதி வாய்ப்புகள்,
கழிவறை,
வீட்டில் உள்ள வசதிகள்,
பயன்படுத்தப்படும் உணவு,
உட்பட பல்வேறு தகவல்களை சேகரிப்பார்கள்.
இவை அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த திட்டத்தினை 100% வெற்றிகரமாக
நடத்திக் கொடுக்க வேண்டுமென
கணக்கெடுப்பாளர்களை
இணை இயக்குனர்
திரு.சின்னதுரை
கேட்டுக் கொண்டார்.
இந்த பயிற்சி வகுப்பில்
துணை இயக்குனர்
திருமதி. சுபா
மற்றும் ஆசிரியர்கள், வருவாய்த்துறை,
பல்வேறு துறை அலுவலர்கள்
கலந்து கொண்டனர்.
--------------------------------.