ஓசூர் மாநகராட்சி
ராமநாயக்கன் ஏரி பூங்கா அருகே
வரி வசூல், குறைதீர்த்தல் மேளா
மேயர் பங்கேற்பு
ஓசூர். நவ. 22. –
by Jothi Ravisugumar
ஓசூர் ராமநாயக்கன் ஏரி பூங்கா அருகில் உள்ள மாநகராட்சி கணினி மையத்தில் வரி வசூல் மற்றும் குறைதீர்த்தல் மேளாவை மேயர் எஸ்.ஏ.சத்யா தொடங்கி வைத்தார்.
ஓசூர் பழைய நகராட்சி கட்டிடம், ராமநாயக்கன் ஏரி பூங்கா அருகில் மற்றும் உழவர் சந்தை கணினி மையம் ஆகிய மூன்று இடங்களில் வரி வசூல் மற்றும் குறைதீர்த்தல் மேளா நவ.22-ம் தேதி நடைபெற்றது. இதில் ராமநாயக்கன் ஏரி பூங்கா அருகில் நடந்த மேளாவை மேயர் சத்யா துவக்கி வைத்து, மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்த மேளாவில் சொத்து வரி, தொழில் வரி, கடை வாடகை, காலிமனை வரி, பெயர் மாற்றம், குடிநீர் கட்டணம் வசூலிப்பது மற்றும் பொதுமக்களின் குறை தீர்க்க மனுக்கள் பெறுவது ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் ஸ்ரீகாந்த், துணை மேயர் ஆனந்தய்யா, மண்டல தலைவர் ரவி, வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா, மாமன்ற உறுப்பினர் வரலட்சுமி நரேஷ், வட்டகழக செயலாளர் ஜான், எல்லப்பா, மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.