கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
காஷ்மீரில் உயிரிழந்தவர்களுக்கு
மெளன அஞ்சலி
ஒசூரில் குப்பை வரியை அமல்படுத்தியது
அதிமுகவா….
திமுகவா…
மாநகர கூட்டத்தில்...
கவுன்சிலர்களுக்கு
இடையே கடும் வாக்குவாதம்
திமுக உறுப்பினர் வெளிநடப்பு
விரைவில் குப்பை வரி
குறைக்கப்படும் – மேயர் உறுதி
ஓசூர், ஏப். 26. –
தூய்மை இந்தியா திட்டம்
ஒசூர் மாநகராட்சியில்
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் (ஸ்வட்ச் பாரத்) குப்பை வரியை அமல்படுத்தியது
அதிமுக ஆட்சியிலா....
அல்லது
திமுக ஆட்சியிலா...
என்று மாநகர கூட்டத்தில்
தொடங்கிய விவாதத்தில்
திமுக - அதிமுக
கவுன்சிலர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம்
நடைபெற்றது.
மேயர் எஸ்.ஏ.சத்யா
ஒசூர் மாநகராட்சி
பேரறிஞர் அண்ணா மாமன்ற கூட்டரங்கில் மாநகர மேயர் சத்யா தலைமைûயில் மாநகராட்சிக் கூட்டம் 2025-ஏப்ரல் 25-ம் தேதியன்று நடைபெற்றது.
மாநகராட்சி ஆணையாளர்
மாரிசெல்வி,
துணை மேயர்
ஆனந்தய்யா
ஆகியோர் முன்னிலையில்
வகித்தனர்.
இந்தக் கூட்டத்தில் திமுக மற்றும்
அதிமுக உறுப்பினர்கள் பங்கேற்று தங்களுடைய வார்டுகளில் உள்ள பிரச்சனைகள் குறித்து பேசினர்.
சென்னீரப்பா(திமுக) -
(நிதி மற்றும் வரிக் குழு தலைவர்)
ஒசூர் மாநகராட்சியில்,
2017 - ஆம் ஆண்டு
குப்பை வரியை விதித்து அப்போதைய அதிமுக ஆட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் எனக் கூறினார்.
வெளிநடப்பு
இதனால் அதிமுகவை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக கூறி அவையை விட்டு வெளிநடப்பு செய்தார்.
ஜெ.பி.(எ) ஜெயப்பிரகாஷ்
(அதிமுக) -
(மண்டலக்குழு தலைவர்)
ஒசூரில் அப்போதைய நகராட்சியில்
2017ல் தீர்மானம் நிறைவேற்றினாலும்,
அதனை நடைமுறைக்கு கொண்டு வந்து செயல்படுத்தியது தற்பொழுதுள்ள திமுக ஆட்சியில் தான்.
கடந்த ஆண்டு குப்பைவரியை
ஒவ்வொரு கடைக்காரருக்கும் வரியை விதித்து அவரவர் கணக்கில் சொத்துவரியுடன், குப்பைவரியை சேர்த்துவிட்டது திமுக ஆட்சியில். இதனால்தான் மக்கள் பாதிக்கப்பட்டு போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் என்றார்.
கடுமையான வாக்கு வாதம்
அப்பொழுது அதிமுக, திமுக கவுன்சிலர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. திமுக, அதிமுக கவுன்சிலர்கள் தங்கள் இருக்கையில் இருந்து எழுந்து கூச்சல் எழுப்பினர்.
உறுப்பினர்களை
மேயர் எஸ்.ஏ. சத்யா அமைதிப்படுத்தினார்.
தொடர்ந்து மேயர் பேசினார்.
எஸ்.ஏ.சத்யா( மேயர்). -
ஒசூர் மாநகராட்சியில்
2017 -ல் இந்தியா முழுவதும்
தூய்மை இந்தியா
திட்டத்தின் கீழ் (ஸ்வட்ச் பாரத்)
குப்பை வரியை விதித்தது
மத்திய பாஜக அரசு.
அதனை ஒசூர் மாநகராட்சி,
அதிமுக ஆட்சிக் காலத்தில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது.
மத்திய அரசு கொண்டு வந்த
திட்டத்தை அனைத்து மாநிலங்களும் செயல்ப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கடந்த ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் 2017 -ம் ஆண்டு முதல் விதிக்கப்பட்ட வரியை குறைத்து
2024 -ஆம் ஆண்டு முதல் நடைமுறைபடுத்தக் கோரி
ஒசூர் வந்த மாநகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவிடம்
மனு அளித்துள்ளோம்.
அவரும் முதலமைச்சரிடம் தெரிவித்து தமிழக நிதித் துறையினரின் ஒப்புதல் பெற்று தருவதாக தெரிவித்தார்.
நான்(எஸ்.ஏ.சத்யா) கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக சென்னைக்கு சென்று அமைச்சர் கே.என்.நேருவையும், நிதித்துறை செயலாளரையும் நேரில் சென்று வலியுறுத்தியுள்ளேன். அந்த கோரிக்கை அடங்கிய கோப்பு நிதித்துறை செயலாளரிடம் உள்ளது.
அவர்கள் அதனை குறைக்க
நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
எனவே இன்னும் ஒரிரு மாதங்களில்
2017 முதல் விதிக்கப்பட்ட வரியை குறைத்து 2024-ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.
இந்த வரியை ஏற்கனவே செலுத்தி இருந்தால் அதனை மக்களுக்கு திருப்பி வழங்கப்படும்.
ஏனெனில் தமிழகத்தில் துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் அவர்கள், ஒசூரில் 10 ஆயிரம் வீடுகளுக்கு அதிகமாக விதிக்கப்பட்ட வீட்டு வரியை பாதியாக குறைத்தவர்.
எனவே விரைவில் நல்ல செய்தி வரும் எனவே அனைவரும் அமைதியாக இருக்கையில் அமரும்படி கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அவை நடவடிக்கை அமைதியாக தொடர்ந்தது.
மாதேஸ்வரன்(திமுக) -
(பொது சுகாதாரக்குழு தலைவர்)
ஒசூர் மாநகராட்சியில் நெகிழி பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாரிசெல்வி(ஆணையர்) -
கடந்த ஆண்டு நெகிழி பயன்படுத்தியவரிடம் இருந்து
ரூ.29 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மாதேஸ்வரன்(திமுக):
(பொது சுகாதாரக்குழு தலைவர்)
ஒசூர் மாநகராட்சி பேரறிஞர் அண்ணா மாமன்ற கூடத்தில் பழைய பொருட்கள் குடோன்களால், மாநகராட்சி மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் மாநகராட்சி எல்லைக்குள் இருந்து பழைய பொருட்கள் குடோன்களை அப்புறப்படுத்த வேண்டும்.
வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் உலக அளவில், 13 வது இடத்தில் ஓசூர் இருப்பதாக நாம் பெருமை கொள்கிறோம்.
அப்படிப்பட்ட நகருக்கு நாம் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
அதிகாரிகள் அலட்சியம்
எந்த பிரச்னையாக இருந்தாலும், கவுன்சிலர்களாகிய எங்களிடம் தான் மக்கள் கேள்வி கேட்கிறார்கள். சாவு வீட்டிற்கு சென்றால் கூட கேள்வி கேட்கின்றனர். ஆனால் பணிகள் செய்து கொடுக்க வேண்டிய அதிகாரிகள் பணி செய்வதில்லை.
நமக்கு நல்ல முதல்வர் கிடைத்துள்ளார். பல்வேறு திட்டங்களை செய்து கொடுக்கிறார். அதிகாரிகளால் தான் எங்களுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது.
ஓசூர் அரசு மருத்துவமனையில்
உள்ள விடுதி அறையை, கிராமப்புறங்களில் இருந்து வரும் நோயாளிகளின் உறவினர்கள் தங்குவதற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும்.
பிளாஸ்டிக் கவர்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஆய்வு செய்வதை அதிகாரிகள் குறைத்து விட்டனர்.
கடந்த, 4 மாதங்களில், 300 கிலோ மட்டுமே பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது மிகவும் குறைவு.
குடோன்களில் பல ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் கவர்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் ஏன்
ஆய்வு செய்து சீல் வைப்பதில்லை.
பகலில் தெருவிளக்குகள்
எரிகின்றன.
பாலூட்டும் அறைகள் குறைவு
பொது இடங்களில் தாய்மார்கள் பாலுாட்டும் அறைகள் அமைக்கப்படவில்லை.
இருப்பதும் பராமரிக்கப்படவில்லை. பொது இடங்களுக்கு வரும் தாய்மார்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
தியேட்டர்களில் கழிவறைகள் மிகவும் மோசமாக உள்ளன.
மாநகராட்சி பில்கலெக்டராக இருந்த விஜயா என்பவர்
துப்புரவு பணியாளராக
செல்கிறேன் என கூறுகிறார்.
அந்த அளவிற்கு வசூல் செய்து தர வேண்டும் என உயர் அதிகாரிகள் தொல்லை கொடுக்கின்றனர்.
ஓசூர் பஸ் ஸ்டாண்ட் தகுதிச் சான்று புதுப்பிக்கப்பட்டு பஸ்களுக்கு நுழைவு கட்டணம் வசூல் செய்வதை ஒப்பந்ததாரருக்கும் வழங்கவில்லை.
மாநகராட்சி நிர்வாகமும் வசூல் செய்யாததால், 48 லட்சம் ரூபாய் அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது ஆடிட்டர் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதற்கு உதவி கமிஷனர், சிறப்பு வருவாய் ஆய்வாளர் போன்றவர்கள் தான் காரணம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவுன்சிலர்களுக்கு பயிற்சி அளித்தது போல், பொறுப்பாக இருக்க அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
ஒரு அதிகாரி மட்டும்
மாநகராட்சி அல்ல.
மேயர் கவுன்சிலர்கள் கூறுவதை,
70 சதவீதம் கேட்க வேண்டும்.
நாங்கள் தான் மக்களுடன் இருக்கிறோம். மீதமுள்ள, 30 சதவீதத்தை அதிகாரிகள் கூறுவதை கேட்கட்டும்.
குறைகளை சுட்டி காட்டினால் என்னை பழிவாங்க நினைக்கின்றனர். நான் பலபேரை பார்த்து விட்டேன். சுயேச்சையாக நின்று கவுன்சிலராக வெற்றி பெற்றவன். அதிகாரிகள் முறைகேடு தொடர்பாக நீதிமன்றம், முதல்வரிடம்முறையிடுவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
சிவராம்(அதிமுக)-
தரமற்ற குடிநீர்
ஒசூர் மாநகராட்சி வார்டு 17,18,19 மூக்கண்டப்பள்ளியில் ஆழ்துளை கிணறுகளில் இருந்து வரும் குடிநீர், தரமற்ற குடிநீர் வருகிறது. காரணம் இங்குள்ள தொழிற்சாலைகளில் ரசாயனம் கலந்த தண்ணீரை பொது வெளியில் திறந்து விடுகின்றனர்.
இது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் பல முறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.
ஆனந்தய்யா(துணை மேயர் திமுக) -
ஒசூர் மாநகராட்சியில் அதிகாரிகள், பணியாளர்கள் முறையாக வேலை செய்வதில்லை, மக்கள் கேட்கும் கேளவிக்கு முறையான பதிலை தெரிவிக்க வேண்டும்.
மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து கொடுக்க வேண்டும்.
ஜெ.பி(எ) ஜெயப்பிரகாஷ்(அதிமுக) -
ஒசூர் இடுகாட்டில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. குடிநீர், சாலை வசதி, பூங்கா வசதி உள்ளிட்டவை சீரமைக்க வேண்டும்.
மாதம் ஒருமுறை மாமன்ற கூட்டம் நடத்த வேண்டும்.
பாதாள சாக்கடை திட்டம் முறையாக செயல்படுத்தவில்லை என்றார்.
இக்கூட்டத்தில் 150 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
37 மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மவுன அஞ்சலி
ஒசூர் மாமன்றக் கூட்டத்தில்
அனைத்து கவுன்சிலர்களும்
எழுந்து நின்று
காஷ்மீரில் உயிரிழந்தவர்களுக்கு இரண்டு நிமிடம்
மெளன அஞ்சலி செலுத்தினர்.
---------------------------------.