மத்திகிரி நூற்றாண்டுகள் பழமையான
தூய ஆரோக்கிய அன்னையின்
பாரம்பரிய ஆலயத்தில்
ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு
பிரார்த்தனை
ஓசூர். ஜனவரி. 01. -
பாரம்பரிய தேவாலயம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி
மத்திகிரி குதிரைப்பாளையத்தில் அமைந்துள்ள
நூற்றாண்டுகள் பழமையான தூய ஆரோக்கிய
அன்னையின் பாரம்பரிய ஆலயத்தில்
ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை
நடைபெற்றது.
பழமை மாறாமல் சீரமைப்பு
1924-ம் ஆண்டு கட்டப்பட்டுள்ள இந்த பாரம்பரிய
தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் கடந்த 100 ஆண்டுகளாக ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தற்போது இந்த வரலாற்று சிறப்புமிக்க
பாரம்பரிய ஆலயம்
அதன் பழமை மாறாமல் சீரமைக்கப்பட்டு,
நூற்றாண்டு விழா
2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் நூற்றாண்டு விழா சிறப்பாக
கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புத்தாண்டு 2025
2025-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி ஆங்கிலப்
புத்தாண்டு பிறப்பு விழாவை முன்னிட்டு
மத்திகிரி குதிரைப்பாளையத்தில் அமைந்துள்ள
100 ஆண்டுகள் பழமையான தூய ஆரோக்கிய அன்னையின் பாரம்பரிய தேவாலயத்தில்
டிசம்பர் 31-ம் தேதி இரவு 10 மணிக்கு
சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
இந்த சிறப்பு பிரார்த்தனையில் மத்திகிரி
தூய ஆரோக்கிய அன்னை ஆலய
பங்கு தந்தை கிறிஸ்டோபர் பங்கேற்று
புத்தாண்டு சிறப்பு திருப்பலி, நற்கருணை ஆராதணை மற்றும் சிறப்பு மறையுரை
வழங்கி புத்தாண்டு வாழ்த்து கூறி
சிறப்பு பிரார்த்தனை நிறைவேற்றினார்.
நலம் நல்கும் லூர்து அன்னை
இந்த புத்தாண்டு சிறப்பு பூஜையின் தொடக்கம்
மற்றும் இறுதியில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
அனைவருக்கும் கேக் மற்றும் தேநீர்
வழங்கப்பட்டது.
அதேபோல மத்திகிரி நேதாஜி நகரில்
அமைந்துள்ள புதிய தூய ஆரோக்கிய அன்னை
ஆலயத்தில் ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை, நள்ளிரவு 11.30 மணிக்கு
நடைபெற்றது.
இந்த இரண்டு புத்தாண்டு பிரார்த்தனைகளின்
சிறப்பு ஏற்பாடுகளை
அருட்சகோதரிகள்,
பங்கு குழுவினர்,
பாடல் குழுவினர்
பக்த சபையினர்
இறை மக்கள்
சிறப்பாக செய்திருந்தனர்.
அனைவரும் ஒருவருக்கொருவர்
புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்
கொண்டனர்.
அதைத் தொடர்ந்து இரண்டு ஆலயங்களிலும்
2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதி
காலை 9 மணிக்கு புத்தாண்டு
சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
புத்தாண்டை முன்னிட்டு பாரம்பரிய தேவாலயம்
மற்றும் புதிய தேவாலயம் வண்ண
விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
அதேபோல ஓசூர் – தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள
தூய இருதய ஆண்டவர் தேவாலயம்,
சிஎஸ்ஐ கிறிஸ்துநாதர் தேவாலயம்
நேதாஜி சாலை தூய பவுல் தேவாலயம்
உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு
புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.