வானியலாளர்
வில்லியம் கிரேஞ்சு பாண்டு”
(William Cranch Bond)
இவர் 1811 பெருவால்வெள்ளியைத் தனித்துக் கண்டுபிடித்தார்.
பல வான்பொருள்கள் இவரது பெயர் இடப்பட்டுள்ளன.
நிலாக் குழிப்பள்ளம் டபுள்யூ. பாண்டு இவரது பெயர் இடப்பட்டுள்ளது.
கைபெரானின் ஒரு பகுதி "பாண்டு-இலெசல் டோர்சம்" எனப்படுகிறது."
குறுங்கோள் (767) பாண்டியா இவரது பெயராலும்
இவர் மகனது பெயராலும் கூட்டாக அழைக்கப்படுகிறது.
காரிக்கோள் வளயங்களுக்கிடையில் உள்ள சந்து
"பாண்டு சந்து" என இவர் பெயராலும்
இவரின் மகன் பெயராலும் அழைக்கப்படுகிறது.
செப்டம்பர் -9 - 1789 –
வானியலாளரும்,
ஹார்வார்டு வான்காணகத்தின்
(Harvard Observatory) முதல் இயக்குநரும் ஆன
”வில்லியம் கிரேஞ்சு பாண்டு”
(William Cranch Bond)
236 – வது பிறந்த தினம்.
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். செப்டம்பர். 9. -
வில்லியம் கிரேஞ்சு பாண்டு போர்ட்லாந்துக்கு அருகே உள்ள மைனே, பால்மவுத்தில் 1789 செப்டம்பர் 9 இல் பிறந்தார்.
இவரது இளமையிலேயே இவரது தந்தையார் வில்லியம் பாண்டு ஒரு சிறு வணிகத் தோல்விக்குப் பிறகு, கடிகாரம் செய்வதில் கைதேர்ந்தவராக விளங்கியுள்ளார்.
முதல் கடிகாரம்
தந்தையாரின் பயிற்சியாலும் தன் பொறியியல் துறை ஆர்வத்தாலும் இவர் 15 ஆம் அகவையிலேயே முதல் கடிகாரத்தைச் செய்துள்ளார்.
இவர் தனது தந்தையாரின் வணிகத்தை மேற்கொண்டே சிறந்த கடிகார வல்லுநராகவும் திகழ்ந்தார்.
வில்லியம் பாண்டின் கடிகாரக் கடை போசுடன் பார்க் தெரு 9 இல் 1970 கள் வரை இருந்தது.
பயில்நிலை வானிலையாளர்
இவர் 1806 இல் தன் 17 ஆம் அகவையில் பாண்டு ஒரு சூரிய ஒளிமறைப்பைக் கண்ணுற்றுள்ளார். இதற்குப் பின்னர் இவர் ஆர்வமிக்க பயில்நிலை வானியலாளரானார்.
இவர் தன் முதல் வீட்டைக் கட்டியதும், இவர் அதன் பலகணியை வான்காணகமாகப் பயன்படுத்தினார். இந்த பலகணி கூரைத் துளையில் செருகிய தொலைநோக்கி வழியாக, வானகத்தை நோக்கிடலானார்.
ஐரோப்பா பயணம்
இவர் 1815 இல் ஆர்வார்டு பல்கலைக்கழகம் பணித்தபடி, ஐரோப்பாவுக்குச் சென்று அனைத்து வான்காணகங்களையும் பார்வையிட்டுத் தகவல்களைத் திரட்டியுள்ளார்.
இவர் இங்கிலாந்தில் உள்ள தெவோன்இன் கிங்சுபிரிட்ஜில் 1819 ஜூலை 18 இல் செலினா கிரேன்சை மணந்தர்.
செலினா கிரேன்ச் நான்கு ஆண் மக்களையும் இரண்டு பெண்மக்களையும் பெற்றுத் தந்தார்.
இவர் 1832 இல் அமெரிக்க கலை, அறிவியல் கல்விக்கழகத்தின் ஆய்வுறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஹார்வார்டு வான்காணகம்
(Harvard Observatory)
பாண்டு 1839 இல் தன் சொந்த வானியல் கருவிகளுடன் ஆர்வார்டுக்கு செல்ல இசைவு பெற்று,
அங்கு பல்கலைக்கழகத்தின் இலவச நோக்கீட்டாளராகப் பணிபுரிந்துள்ளார்.
பின்னர் 1843 இல் சூரியனை அணுகிய வால்வெள்ளி மக்களிடையே பேரார்வத்தை ஊட்டியது.
இதைப் பயன்படுத்தி ஆர்வார்டு மக்களிடம் இருந்து 25,730 டாலர் பனம் திரட்டியது.
இப்பணத்தைக் கொண்டு ஆர்வார்டு நிகழ்நிலை வளர்ச்சிகொண்ட வான்காணகத்தைக் கட்டிமுடித்தது.
இதன் கட்டிடத்தையும் நோக்கீட்டு நாற்காலியையும் பாண்டு வடிவமைத்தார்.
இது இன்றும் இயக்கத்தில் உள்ளது.
இதற்காக
ஆர்வார்டு 15 அங்குல செருமனி வடிவமைப்பு ஒளிவிலகல்வகை தொலைநோக்கியை வாங்கியது.
இது உலகில் உள்ள மிகப்பெரிய தொலைநோக்கிக்குச் சமமான அளவுடையதாகும்.
இந்த தொலைநோக்கி முதன்முதலாக
1847 ஜூன் 24 அன்று ஒரு நிலாவை நோக்கி
வானில் காட்டப்பட்டது.
கண்டுபிடிப்புகள்
இவர் 1811 பெருவால்வெள்ளியைத் தனித்துக் கண்டுபிடித்தார்.
பாண்டும் இவரது மகன் ஜார்ஜ் பிலிப்சு பாண்டும் காரிக்கோளின் நிலாவான கைபெரானைக் கண்டுபிடித்தனர்;
இது பிரித்தானியாவின் வில்லியம் இலெசலாலும் இதே நேரத்தில் தனியாக கண்டுபிடிக்கப்பட்டது.
இவரது மகனும் காரிக்கோளின் முதல் உள்வலயத்தை முதன்முதலாக 1850 இல் ஆர்வார்டு தொலைநோக்கியால் காரிக்கோளை ஆய்ந்தபோது நோக்கினர்.
இது சி வலயம் அல்லது கிரெப்பே வலயம் எனப்படுகிறது.
ஜான் ஆடம்சு விப்பிள் உடன் இணைந்து, பாண்டு இருவரும் 1850 இல் வேகா விண்மீனின் டேகுவரோ வகை வானொளிப் படங்களைப் பிடித்தனர். அமெரிக்காவில் இதுவரை இத்தகைய படங்கள் ஏதும் எடுக்கப்படவில்லை.
ஒட்டுமொத்தமாக, மூவருன் 200 முதல் 300 வான்பொருள்களை ஒளிப்படங்களை எடுத்துள்ளனர்.
பல வான்பொருள்கள் இவரது பெயர் இடப்பட்டுள்ளன. அவற்றில் சில கீழே தரப்படுகின்றன:
நிலாக் குழிப்பள்ளம் டபுள்யூ. பாண்டு
இவரது பெயர் இடப்பட்டுள்ளது.
கைபெரானின் ஒரு பகுதி
"பாண்டு-இலெசல் டோர்சம்"
எனப்படுகிறது."
குறுங்கோள் (767) பாண்டியா
இவரது பெயராலும் இவர் மகனது பெயராலும் கூட்டாக அழைக்கப்படுகிறது.
காரிக்கோள் வலயங்களுக்கிடையில் உள்ள சந்து
"பாண்டு சந்து"
என இவர் பெயராலும் இவரின் மகன் பெயராலும் அழைக்கப்படுகிறது
------------------------------------------------.