சமூகம்,
அரசியல்,
பொருளியல்,
போன்ற துறைகளில் பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தைக் கொண்டாடும்
சர்வதேச மகளிர் தினம்.
மார்ச் – 8 -
சர்வதேச பெண்கள் தினம்
International Women's Day (IWD) 2025
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். மார்ச். 8. –
"செயல்பாட்டை
துரிதப்படுத்துங்கள்."
இந்த பிரச்சாரக் கருப்பொருள் பாலின சமத்துவத்தை அடைவதற்கும், மெதுவான முன்னேற்றத்தை நிவர்த்தி செய்வதற்கும், உலகளவில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசரத் தேவையை வலியுறுத்துகிறது.
“Accelerate Action." This campaign theme the urgent need to take decisive steps toward achieving gender equality, addressing the slow pace of progress, and empowering women and girls worldwide.
அமெரிக்கத் தொழிற்சங்க இயக்கத்துக்கும், ரஷ்யப் புரட்சி இயக்கத்துக்கும் இதில் பங்கு உண்டு.
1975-ம் ஆண்டுதான் இந்த நாளை சர்வதேசப் பெண்கள் தினமாக ஐ.நா. அங்கீகரித்தது.
ஆனால், ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்தே இந்த நாள் பெண்களுக்கு முக்கிய நாளாக உலகின் பல பகுதிகளில் இருந்து வருகிறது.
எப்படித் தொடங்கியது?
வேலை நேரத்தை குறைக்கவும்,
கூலியை உயர்த்தவும் வலியுறுத்தி,
வாக்களிக்கும் உரிமை கோரி,
15,000 உழைக்கும் பெண்கள்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1908-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி ஒரு பேரணியை நடத்தினர்.
இந்த நாளை அடுத்த ஆண்டு தேசிய பெண்கள் தினமாக அறிவித்தது அமெரிக்க சோஷியலிஸ்ட் கட்சி.
கிளாரா ஜெட்கின்
இந்த நாளினை சர்வதேச தினமாக அனுசரிக்கவேண்டும் என்ற யோசனையை முன்வைத்தவர்
கிளாரா ஜெட்கின்.
கோபன்ஹேகனில் 1910-ம் ஆண்டு நடந்த உழைக்கும் பெண்களின் சர்வதேச மாநாட்டில் இந்த யோசனையை முன்வைத்தார் கிளாரா.
அந்த மாநாட்டில்
17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண்கள் கலந்துகொண்டனர்.
இதையடுத்து 1911-ம் ஆண்டு முதல்
ஆஸ்திரியா,
டென்மார்க்,
ஜெர்மனி,
ஸ்விட்சர்லாந்து,
ஆகிய நாடுகளில் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது.
இதை அடிப்டையாகக் கொண்டே 2011-ம் ஆண்டு நூறாவது சர்வதேசப் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. எனவே, அந்த வகையில் இது 111-வது பெண்கள் தினம்.
சர்வதேச மகளிர் தினம்
எனினும் 1975-ம் ஆண்டில்தான் ஐ.நா. மார்ச் 8-ஐ சர்வதேசப் பெண்கள் தினமாக முறைப்படி அறிவித்து கொண்டாடத் தொடங்கியது.
அத்துடன் ஒவ்வோர் ஆண்டின் பெண்கள் தினத்துக்கும் ஒரு முழக்கத்தையும் முன்வைத்துவருகிறது ஐ.நா.
இதன்படி ஐ.நா. அறிவிப்புக்குப் பின் வந்த முதல் பெண்கள் தினத்தின் முழக்கம்
"சமத்துவத்தை யோசி, அறிவுபூர்வமாக கட்டியெழுப்பு, மாற்றத்துக்காக புதுமையாக சிந்தி"
என்பதாகும்.
உழைக்கும் வயதில் உள்ள பெண்களில் சரிபாதி பேர்தான் உலக தொழிலாளர் தொகையில் இடம் பெற்றுள்ளார்கள் என்கின்றன ஐ.நா. புள்ளி விவரங்கள்.
சமூகம்,
அரசியல்,
பொருளியல்,
போன்ற துறைகளில் பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தை கொண்டாடுவதற்கான நாளாக இந்த நாள் உருவெடுத்துள்ளது.
ஆனால், பாலின பாகுபாட்டை எதிர்த்து உழைக்கும் பெண்கள் நடத்திய போராட்டங்கள், வேலை நிறுத்தங்களில்தான் இந்த நாளின் வரலாற்று வேர்கள் பதிந்துள்ளன.
வடிவம் பெற்றது எப்போது?
கிளாரா ஜெட்கின் ஒரு சர்வதேசப் பெண்கள் தினம் வேண்டும் என்ற யோசனையை முன்மொழிந்தபோது எந்த நாளில் அதைக் கொண்டாடவேண்டும் என்று குறிப்பிட்டு எந்த தேதியையும் கூறவில்லை.
முதல் உலகப் போர் நடந்துகொண்டிருந்தபோது, 1917-ம் ஆண்டு ரஷ்யாவில் போர் வேண்டாம்,
"அமைதியும் ரொட்டியும்"
தான் தேவை என்று வலியுறுத்தி மார்ச் 8-ம் தேதி (ஜூலியன் நாட்காட்டியின்படி பிப்ரவரி 23) பெண்கள் போராட்டத்தைத் தொடங்கினர்.
நான்கு நாட்கள் நடந்த இந்தப் போராட்டம், சர்வதேச மகளிர் தினம் என்ற கருத்துக்கு உறுதியான ஒரு வடிவத்தைக் கொடுத்தது.
நான்கு நாட்கள் நீடித்த
இந்தப் போராட்டம்
கடைசியில் ரஷ்ய முடி மன்னரான ஜார் அரியணையை விட்டிறங்குவதற்கான அழுத்தத்தை தந்தது.
வாக்குரிமை தந்த போராட்டம்
முடியாட்சியும் முடிவுக்கு வந்தது. முடியாட்சிக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட தற்காலிக அரசாங்கம் பெண்களுக்கு வாக்குரிமையும் அளித்தது.
இந்த மாற்றம்தான், 1917 அக்டோபரில்
நடந்த புகழ்பெற்ற
ரஷ்ய புரட்சிக்கும்,
அதன் விளைவாக உலகெங்கும் சோஷியலிஸ்ட் அரசுகள் தோன்றுவதற்கும் முன்னோட்டமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
ஆண்கள் தினம் உண்டா?
பெண்கள் தினம் போல ஆண்களுக்கும் தினம் உண்டா?
ஆம். உண்டு. நவம்பர் 19-ம் தேதி சர்வதேச ஆண்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.
ஆனால், 1990களில் இருந்துதான் இந்த வழக்கம் தொடங்கியது. ஆனால் இதனை ஐ.நா. அங்கீகரிக்கவில்லை. பிரிட்டன் உள்பட 60 நாடுகளில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. ஆண்கள், சிறுவர்கள் உடல் நலம், பாலின சமத்துவம் ஆகிய நோக்கங்களுக்காகவும், நேர்மறையான ஆண் முன்மாதிரிகளை முன்னிறுத்தவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
-----------------------------------------------------.