கிருஷ்ணகிரி மாவட்டம்
அலியாளம் அணைக்கட்டில்
ரூ. 47.36 கோடி மதிப்பில்
நடைபெற்று வரும் திட்டப்பணிகள்
மற்றும்
எண்ணேகொள் அணைக்கட்டில்
ரூ. 274 கோடி மதிப்பில்
நடைபெற்று வரும் திட்டப்பணிகளை
நீர் வளத்துறை
அரசு தலைமைச் செயலாளர்
திரு. ஜே. ஜெயகாந்தன் இ.ஆ.ப.
அவர்கள்
நேரில் பார்வையிட்டு ஆய்வு
கிருஷ்ணகிரி. ஜன. 29. –
நீர் வளத்துறை
அரசு தலைமைச் செயலாளர்
ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்டம்
அலியாளம் அணைக்கட்டில்
நடைபெற்று வரும்
ரூ. 47.36 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள்
மற்றும்
எண்ணேகொள் அணைக்கட்டில்
நடைபெற்று வரும்
ரூ. 274 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை
நீர் வளத்துறை
அரசு தலைமைச் செயலாளர்
திரு. ஜே. ஜெயகாந்தன் இ.ஆ.ப.
அவர்கள்
நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அலியாளம் அணைக்கட்டு
அலியாளம் அணைக்கட்டின்
வலதுபுறக் கால்வாயிலிருந்து தென்பெண்ணையாற்றில்
வரும் வெள்ள உரிநீரினை
கிருஷ்ணகிரி மற்றும்
தருமபுரி மாவட்டங்களில் உள்ள
ஏரிகளுக்கு நீர் வழங்க ஏதுவாக
ரூ. 47.36 கோடி மதிப்பில் நடைபெற்று வரும்
பணிகள் மற்றும் நில எடுப்பு பணிகளை
நீர் வளத்துறை அரசு தலைமைச் செயலாளர்
திரு. ஜே. ஜெயகாந்தன் இ.ஆ.ப.
அவர்கள்
28.01.2026 அன்று நேரில் பார்வையிட்டு
ஆய்வு மேற்கொண்டார்.
எண்ணேகொள் அணைக்கட்டு
கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் வட்டம்
எண்ணேகொள் அணைக்கட்டின்
இடது மற்றும் வலது புறத்திலிருந்து
பதிய வழங்கு கால்வாய்கள் வெட்டி தென்பெண்ணையாற்றின் உபரி நீரை
கருஷ்ணகிரி மற்றும் தருமபுரி
மாவட்டங்களில் உள்ள
வறட்சியான பகுதியில் உள்ள
ஏரிகளுக்கு நீர்வழங்க ஏதுவாக
ரூ. 274 கோடி மதிப்பில் நடைபெற்று
வரும் திட்டப்பணிகளை
நீர்வளத்துறை அரசு தலைமைச் செயலாளர்
திரு. ஜே.ஜெயகாந்தன் இ.ஆ.ப.
அவர்கள்
28.01.2026 அன்று நேரில் பார்வையிட்டு
ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வு பணிகளின் போது
மாவட்ட வருவாய் அலுவலர்
திரு. அ. சாதனைக்குறள்,
நீர் வளத்துறை செயற்பொறியாளர்
திரு. செந்தில்குமார்,
உதவி செயற்பொறியாளர்கள்
திரு. மோகன்ராஜ்
திரு. சபரிநாதன்,
உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
-----------------------------.