தமிழ்நாடு அரசு
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் -
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையம் -
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் -
இணைந்து ஓசூரில் நடந்த
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில்
602 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்
வழங்கப்பட்டது.
ஓசூரில் மாபெரும் தனியார் துறை
வேலை வாய்ப்பு முகாம்
602 நபர்களுக்கு பணி நியமன ஆணை
மாவட்ட ஆட்சித்தலைவர்,
மேயர்,
வழங்கினார்கள்.
ஒசூர். ஜூலை. 19. -
மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஜுலை 19-ம் தேதி சனிக்கிழமை அன்று மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம்
மற்றும்
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையம்,
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்
இணைந்து நடத்திய இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை
மாவட்ட ஆட்சித்தலைவர்
தினேஷ் குமார்,IAS,
ஒசூர் மாநகராட்சி மேயர்
S.A.சத்யா,
ஆகியோர் துவக்கி வைத்து,
602 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள்.
மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் படித்த இளைஞர்கள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
அதேப்போல் தமிழ்நாடு அரசு கல்வித் துறைக்கே அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.
புதுமைப் பெண் திட்டம்
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும், கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ரூ.1000 மற்றும்
தமிழ்ப்புதல்வன் திட்டம்
கல்லூரி மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் ரூ.1000 மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.
வெளி நாடுகளுக்கு சென்று படிக்க விரும்பும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
மேலும், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தரவேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் 20.3.2022 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைத்தார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் முதல் தொழிற்கல்வி பயின்றோர் வரை
29,150 பெண் பதிவுதாரர்கள்
மற்றும்
30,224 ஆண் பதிவுதாரர்கள்
என மொத்தம்
59,374 வேலைநாடுநர்கள்
பதிவு செய்து கொண்டுள்ளனர்.
இப்பதிவுதாரர்கள் உள்ளிட்ட இளைஞர்களின் நலனுக்காக இந்த அரசு செயல்படுத்திவரும் பல சீரிய திட்டங்களில் ஒன்று வேலைவாய்ப்பு முகாம் ஆகும்.
அரசு வேலைக்காக காத்திராமல் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தனியார்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்களை பெற்றிடும் நோக்குடன் இலவசமாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. அரையாண்டிற்கு ஒருமுறை பெரிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்களும், மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் அலுவலக வளாகத்திலேயே, சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்களும் இலவசமாக நடத்தப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2021 ஆம் ஆண்டு முதல் நாளது தேதி வரை நடத்தப்பட்ட
69 சிறிய அளவிலான முகாம்கள் மற்றும் 10 பெரிய அளவிலான முகாம்கள் என மொத்தம் 79 வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம்
11,059 நபர்கள் பணிநியமனம் பெற்றுள்ளனர்.
இக்கல்லூரியில் 12.05.2022 அன்று
தமிழ்நாடு துணை முதலமைச்சர்
உதயநிதி ஸ்டாலின்
தலைமையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைப்பெற்றது.
இம்முகாமில் 16,166 மனுதாரர்கள் கலந்து கொண்டதில் 3,514 நபர்கள் பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும், கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு 14.10.2023 அன்று இதே கல்லூரியில் நடைப்பெற்ற மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில்
2,580 மனுதாரர்கள் கலந்து கொண்டதில்
756 நபர்கள் பல்வேறு பணியிடங்களுக்கு
தேர்வு செய்யப்பட்டனர்.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் வேலைவாய்ப்பு பிரிவினரால் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட
தமிழ்நாடு தனியார் துறை வேலை (www.tnprivatejobs.tn.gov.in) துறையில்
வேலையளிப்போருக்கான மனிதவள தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும்
தமிழ்நாட்டை சார்ந்த வேலைநாடுநர்களுக்கு, எதிர்ப்பார்ப்பிற்கு ஏற்ப தனியார் துறையில் வேலை பெற வழிவகை செய்யும் இணைப்பு பாலமாக திகழ்வதே ஆகும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இவ்விணையத்தில் சிறிய மற்றும் பெரிய அளவிலான 305 தனியார் துறை நிறுவனங்கள் பதிவு செய்து அவர்களின் தேவைக்கு ஏற்ப வேலைநாடுநர்களை தேர்வு செய்கின்றனர்.
இலவச பயிற்சி வகுப்புகள்
மேலும், இம்மையத்தின் மூலம் கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இப்பிரிவின் வாயிலாக டி என் பி எஸ் சி ,டி என் யு எஸ் ஆர் பி உள்ளிட்ட அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. தற்போது டி என் பி எஸ் சி குரூப் 2, 2 ஏ முதல்நிலை போட்டித்தேர்விற்கான இலவச பயிற்சி 21.07.2025 முதல் நடத்தப்பட உள்ளது.
தேர்வாளர்கள் வசதிக்காக
5000-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் கொண்ட
நூலக வசதி உள்ளது.
இவ்வலுவலகத்தின் வாயிலாக 189 நபர்கள் போட்டித்தேர்வில் வெற்றி பெற்று பல்வேறு அரசு துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
பொதுப்பிரிவினர்
மற்றும்
மாற்றுத்திறனாளிகள்
என அனைவருக்கும் கல்வித்தகுதிக்கு ஏற்ப உதவித்தொகை வழங்கப்படுகிறது.
2024-2025 ஆம் நிதியாண்டில் 615 பொதுப்பிரிவு பயனாளிகளுக்கு ரூ.25,08,000/- தொகையும்,
64 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ. 5,87,800/- தொகையும் ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
2025-2026 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 399 பொதுப்பிரிவு பயனாளிகளுக்கு ரூ.5,43,300/- தொகையும்,
67 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.1,69,450/-தொகையும் ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
அசோக் லேலண்ட் ,
டிவிஎஸ் கம்பெனி,
டாட்டா எலக்ட்ரானிக்ஸ்,
டைட்டான் கம்பெனி,
இண்டிய நிப்பன் எலக்ட்ரானிக்ஸ்
போன்ற முன்னணி நிறுவனங்களுடன் 114 தனியார் நிறுவனங்கள் பங்கு பெற்றனர். இம்முகாமில் 2512 நபர்கள் பதிவு செய்தனர்.
602 பேருக்கு பணி நியமன ஆணைகள்
அவற்றில் 602 நபர்களுக்கு தனியார் நிறுவனங்கள் சார்பில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. வேலைவாய்ப்பு ஆணை பெற்றவர்கள், பணியில் தங்களது திறமைகளை வளர்த்துக்கொண்டு மேலும் புதியதாக தொழில் நிறுவனங்களை துவங்கி புதிய தொழில் முனைவோர்களாக உருவாக வேண்டும் என அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து,
மாவட்ட ஆட்சித்தலைவர்,
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் வேலைவாய்ப்பு பிரிவினரால் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட தமிழ்நாடு தனியார் துறை வேலை (www.tnprivatejobs.tn.gov.in) இணையத்தில் வேலைநாடுநர்கள் பதிவு செய்யும் பணிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் வேலைநாடுநர்கள் நேர்காணல் முகாமை பார்வையிட்டார்.
முன்னதாக,
ஓசூர் எம்எல்ஏ பிரகாஷ்,
வேலைவாய்ப்பு முகாமை பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில்,
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார
மாவட்ட திட்ட அலுவலர்
பெரியசாமி,
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்
கௌரிசங்கர்,
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்
முருகேசன்,
இந்தியன் வங்கி முன்னோடி வங்கி மேலாளர்
சரவணன்,
மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர்
ராமமூர்த்தி,
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
முதல்வர் முனைவர்.
பாக்கியமணி,
வேலைவாய்ப்பு அலுவலர் (கல்லூரிகள்)
ஜெயஸ்ரீ,
ஓசூர் மாமன்ற உறுப்பினர்
சென்னீரப்பா,
வட்டாட்சியர்
குணசிவா,
நாட்டு நலப்பணி அலுவலர்
மோகனப் பிரியா,
மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரநிதிகள், வேலைநாடுநர்கள் கலந்துக்கொண்டனர்.
-----------------------------------------.