குந்தாரப்பள்ளியில்
மேற்கு மாவட்ட திமுக அவசர
செயற்குழு கூட்டம்
எம்.எல்.ஏ. பிரகாஷ்
சிறப்புரை
ஓசூர். நவ. 30. –
by Jothi Ravisugumar
துணை முதல் அமைச்சருக்கு
சிறப்பான வரவேற்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளியில் நடந்த
மேற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான ஒய். பிரகாஷ் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
செயற்குழு கூட்டம்
குந்தாரப்பள்ளி குமரன் மண்டபத்தில் மேற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் தலைமை வகித்தார்.
மேயர் எஸ்.ஏ.சத்யா
மாவட்ட துணைச்செயலாளரும்ஈ முன்னாள் எம்எல்ஏவுமான முருகன், மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்
மேற்கு மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான ஒய்.பிரகாஷ் பங்கேற்று பேசினார். அப்போது, மேற்கு மாவட்டத்துக்கு டிசம்பர் 5-ம் தேதி வருகை தரும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு மாவட்ட திமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இதில் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் சீனிவாசன், மாவட்ட துணை செயலாளர்கள் சின்னசாமி, புஷ்பாசர்வேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வீராரெட்டி, எல்லோராமணி, கிரிஷ்,
பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெயராமன், தனலட்சுமி, முனிராஜ், அப்துல்கலாம், தொமுச கிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் சீனிவாசலு ரெட்டி, திவாகர், ரகுநாத், நாகேஷ், பாக்கியராஜ், சின்னராஜ், தணிகாசலம், கருணாகரன், ஸ்ரீதர், பேரூர் செயலாளர் தஸ்தகீர், பகுதி செயலாளர்கள் ஆனந்தய்யா, வெங்கடேஷ், ராமு, திம்மராஜ், அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் சுமன், கண்ணன், சக்திவேல், முனிராஜ், விஜயஸ்ரீ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.