அன்புச்சோலை திட்டம் -
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சியில்
சமூக நலன் மற்றும்
மகளிர் உரிமைத்துறையின் கீழ்
மூத்த குடிமக்களின் நல்வாழ்வுக்காக
அன்புச் சோலை திட்டம் துவக்க விழா
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்கள்காணொளிக்காட்சி மூலம்
துவக்கி வைத்தார்.
ஓசூரில் அன்புச்சோலை மையம்
துவக்க விழா
ஓசூர். நவ. 10. –
சமூக நலன் மற்றும்
மகளிர் உரிமைத்துறை
ஓசூர் மாநகராட்சி, தர்கா அருகில் உள்ள
நகர்புற வாழ்வாதார இயக்க கட்டிடத்தில்
சமூக நலன் மற்றும்
மகளிர் உரிமைத்துறையின்
அன்புச்சோலை திட்டத்தின் கீழ்
அன்புச்சோலை மையம்
துவக்க விழா
நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்கள்,
நவம்பர் 10-ம் தேதியன்று
திருச்சி மாவட்டத்திலிருந்து,
காணொளிக் காட்சி மூலம்,
சமூக நலன் மற்றும்
மகளிர் உரிமைத்துறையின் கீழ்,
மூத்த குடிமக்களின் நல்வாழ்வை
உறுதி செய்யும் வகையில்,
அன்புச் சோலை திட்டத்தினை
துவக்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து,
ஓசூர் மாநகராட்சி, தர்கா அருகில் உள்ள
நகர்புற வாழ்வாதார இயக்க கட்டிடத்தில்,
ஆராதனா தொண்டு நிறுவனத்தின் மூலம்
நடத்தப்பட உள்ள
அன்புச்சோலை மையத்தினை,
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள்,
ஓசூர் சட்டமன்ற உறுப்பினர்
திரு.ஒய்.பிரகாஷ்,
ஓசூர் மாநகராட்சி மேயர்
திரு.எஸ்.ஏ.சத்யா
ஆகியோர் இன்று (10.11.2025) குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
முதியோர்களுக்கு சால்வை அணிவித்து, பரிசுப் பொருட்களை வழங்கினர்.
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள்
தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மூத்த குடிமக்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வை உறுதி செய்வதற்காக மாநகராட்சிகள், தொழில் மாவட்டங்கள் என மொத்தம் 25 இடங்களில் அன்புச்சோலை மையங்கள் துவங்கப்பட்டு,
பொழுதுப்போக்கு அம்சங்கள்,
யோகா,
நூலகம்
மற்றும்
இயன்முறை மருத்துவ சேவைகள்
வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
அதனடிப்படையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இன்று திருச்சி மாவட்டத்திலிருந்து, காணொளிக்காட்சி வாயிலாக, அன்புச்சோலை திட்டத்தை துவக்கி வைத்தார்.
அன்புச்சோலை மையம்
அதனைத்தொடர்ந்து,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி
தர்கா அருகில் உள்ள
நகர்புற வாழ்வாதார இயக்க கட்டிடத்தில்,
ஆராதனா தொண்டு நிறுவனத்தின்
மூலம், நடத்தப்பட உள்ள
அன்புச்சோலை மையம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
சமூக நலன் மற்றும்
மகளிர் உரிமைத்துறையின்
கீழ் செயல்படும் இந்த மையங்களில் ...
பகல்நேர பராமரிப்பு உதவி,
அத்தியாவசிய மருத்துவ பராமரிப்புகள்,
பொழுதுபோக்கு நடவடிக்கைகள்
உள்ளிட்ட பல்வேறு சேவைகள்,
தன்னார்வ தொண்டு நிறுவனங்களின்
மூலம் மேற்கொள்ளப்படும்.
அன்புச்சோலை திட்டத்தின் மூலம் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பயனடைவார்கள்.
ஒவ்வொரு அன்புச்சோலையிலிருந்தும் குறைந்தது 50 முதியவர்கள் பயனடைவார்கள்.
பகல் நேரத்தில் முதியவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் ஆதரவான சூழலை உறுதி செய்யப்படும்.
மூத்த குடிமக்கள் தங்கள் வயதினருடன்
ஒன்றிணைவதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது.
பகல் நேரத்தில் தனிமையில் அவதிப்படும் முதியவர்களுக்கு ஆறுதல் அளிக்கவும்,
மூத்த குடிமக்களிடையே சமூக தொடர்புக்கான சூழலை உருவாக்கவும்,
குடும்ப உறுப்பினர்கள் மற்றும் முதன்மை பராமரிப்பாளர்களுக்கு மன அமைதியை வழங்க,
அவர்களின் அன்புக்குரியவர்கள் நன்கு பராமரிக்கப்படுகிறார்கள்
என்பது உறுதி செய்யப்படும்.
மதிய உணவு சிற்றுண்டி
மேலும், குறிப்பிட்ட நாளில் மையத்திற்கு வருகை தரும் முதியவர்களுக்கு மதிய உணவு மற்றும் சிற்றுண்டிகளை இந்த மையம் வழங்கும்.
விரிவான பராமரிப்பை உறுதி செய்வதற்காக தகுதி வாய்ந்த பராமரிப்பாளர்கள், சமூக சேவையாளர்கள் மற்றும் உடல் சிகிச்சையாளர்கள் பணியமர்த்தப்படுவர்.
மருத்துவ சேவை
முதியோர்களுக்கான சுகாதார பரிசோதனைகளுக்கு அருகிலுள்ள நகர்புற ஆரம்ப சுகாதார மையங்களின் சேவைகள் பயன்படுத்தப்படும்.
யோகா - உடற்பயிற்சி
இந்த மையம் யோகா மற்றும் உடற்பயிற்சி திட்டங்களை நடத்தும்.
இது உடல் திறன்கள், ஒருங்கிணைப்பு, சமநிலை மற்றும் இயக்கங்கள் போன்றவற்றை மேம்படுத்தப்படும்.
கலை - கைவினைப்பொருட்கள்
இந்த மையம் கலை மற்றும் கைவினைப்பொருட்கள் மற்றும் குழு விவாதங்கள் போன்ற பல்வேறு பொழுதுபோக்கு நடவடிக்கைகளை வழங்கும்.
குழு நடவடிக்கைகளில் பங்கேற்பதன் மூலம்
சமூக தொடர்பை மேம்படுத்தும்.
நூலகம்
நாவல்கள்,
மத புத்தகங்கள்,
சிறுகதைகள்,
அறிவியல்
இயற்கை புத்தகங்கள்,
சுகாதாரம்
நல்வாழ்வு புத்தகங்கள்
போன்ற புத்தகங்களுடன் மையத்தில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து,
மாவட்ட ஆட்சித்தலைவர்,
ஓசூர் சட்டமன்ற உறுப்பினர்,
ஒசூர் மாநகராட்சி மேயர்
ஆகியோர், அன்புச்சோலை மையத்தில் உள்ள
தங்கும் அறைகள்,
சமையலறை
ஆகியவற்றையும்,
முதியோர்களுக்கு பொழுதுபோக்கு அம்சங்களாக வைக்கப்பட்டுள்ள
பல்லாங்குழி,
கேரம்,
செஸ்
நவீன பிசியோதெரபி உபகரணங்கள்
ஆகியவற்றை பார்வையிட்டு,
அன்புச்சோலை இல்லத்தில் உள்ளவர்களுக்கு உலர்பழங்கள் மற்றும் தினந்தோறும் பயன்படுத்தப்படும் குடிநீர் பாட்டில்களை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில்,
ஓசூர் சார் ஆட்சியர்
திருமதி.ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப.,
ஓசூர் மாநகராட்சி துணை மேயர்
திரு.ஆனந்தைய்யா,
மாவட்ட சமூக நல அலுவலர்
திருமதி.சக்தி சுபாசினி,
மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மண்டல குழு தலைவர்கள்
திரு.என்.எஸ். மாதேஷ்வரன்
திரு.ரவி,
வட்டாட்சியர்
திரு.குணசிவா,
ஆராதனா தொண்டு நிறுவன நிர்வாகி
திருமதி.ராதா
மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
-------------------------------------------.