தொழிலாளர்களின் பாதுகாப்பை
முக்கிய நோக்கமாக கொண்ட
தேசிய பாதுகாப்பு தினம்
மார்ச் – 4 - தேசிய பாதுகாப்பு தினம்
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். மார்ச். 4. –
தேசிய பாதுகாப்பு கவுன்சில்
நமது நாட்டில் 1971-ஆம் ஆண்டு,
மார்ச் 4-ஆம் தேதி தேசியப் பாதுகாப்பு கவுன்சில் உருவாக்கப்பட்டது.
மும்பையைத் தலைநகராகக்
கொண்ட இந்த கவுன்சிலின் பிரிவு
அனைத்து மாநிலங்களிலும்
அரசு சாராத ஒரு தொண்டு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.
பலதுறைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவரும் விபத்துக்கள் நேராமல் பணிபுரியவும், பாதுகாப்புடனும், சுற்றுச்சூழல் கெடாமல் பணிபுரியவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு மார்ச் 4-ஆம் தேதியும் தேசிய தொழிலாளர் பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுகிறது.
தொழில்துறையின் வளர்ச்சிதான் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த முடியும்.
இந்த தேசிய பாதுகாப்பு கவுன்சில், பாதுகாப்பு நடைமுறைகளையும், தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு சேவைகளையும் சரியாக அளித்துவரும் தொழிற்சாலைகளுக்கு விருதுகள் அளித்து வருகிறது.
பாதுகாப்பு நடைமுறைகள் மூலம் தொழிலாளர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதே இந்த தினத்தை கொண்டாடுவதன் நோக்கமாகும்.
பாதுகாப்பு விழிப்புணர்வுள்ள தொழிலாளர்களால் உற்பத்தி அதிகரிக்கும்.
தொழிலாளர்களுக்கு
விபத்து,
நோய்கள்,
தேசிய பொருளாதாரத்தில் சரிவை ஏற்படுத்தும். இதனால் சமூக சூழலுக்கு அச்சுறுத்தல் உள்ளது.
1972ல் தேசிய பாதுகாப்பு தினம்,
1977ல் தேசிய பாதுகாப்பு வாரம்,
அறிமுகமானது.
தேசிய பாதுகாப்பு தினம்,
"பாதுகாப்பு மற்றும் சுகாதாரமான சூழலை உறுதிப்படுத்துதல்; அடிப்படை மனித உரிமை,'
கருத்தை முன் வைத்து கொண்டாடப்படும்.
இதையொட்டி தொழிற்சாலைகளில்
பாதுகாப்பு பயிற்சி,
கருத்தரங்கு,
வினாடி வினா,
மாதிரி ஒத்திகை,
கலை பயிற்சிகள்,
நடத்தப்படும். தொழிலாளர்கள்
பாதுகாப்பு உறுதிமொழி எடுக்கப்படும்.
8 மணி நேர வேலை
போராடிப் பெற்ற உலகளாவிய உரிமையான
8 மணி நேர வேலை என்பது இந்தியாவில் கேள்விக்குள்ளாகியிருக்கிறது.
உழைக்கும் இடத்தில் பாதுகாப்பு தொடங்கி, வேலை உத்தரவாதம் வரைக்கும் பாதுகாப்பற்ற நிலை நீடிக்கிறது. இந்நிலை தொடரலாகாது.
--------------------------------------------.