ஓசூர் மேக்னம் அரிமா சங்கம்
மற்றும்
பரிதாபாத் லேக் சிட்டி அரிமா சங்கம்
இணைந்து நடத்திய
மாபெரும் ரத்த தானம் முகாம்
50 யூனிட் ரத்தம் தானமாக வழங்கிய
தொழிலாளர்கள்
ஓசூர் சிப்காட் அரிமா சங்க
ரத்த வங்கி மருத்துவ குழு பங்கேற்பு
ஓசூர். டிச. 21. –
ரிக்கி பிளாஸ்டிக் நிறுவனம்
ஓசூர் மேக்னம் அரிமா சங்கம் சார்பில் நடந்த மாபெரும் ரத்த தானம் முகாமில் சிப்காட் – 2 தொழிற்பேட்டை, ரிக்கி பிளாஸ்டிக் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள், 50 யூனிட் ரத்தம் தானமாக வழங்கினர்.
ஓசூர் மேக்னம் அரிமா சங்கம்
தொடரும் நற்பணிகள்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில் மேக்னம் அரிமா சங்கம் இயங்கி வருகிறது.
இந்த சங்கத்தின் சார்பில், மலைவாழ்
மக்களின் இல்லங்களுக்கு சோலார் மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தருவது, சாலையோர சிறு வியாபாரிகளுக்கு நிழல் குடைகள் வழங்குவது,
உள்ளிட்ட பொருளாதார நலிவடைந்த
பிரிவினர்கள் மற்றும் அரசுப்பள்ளி,
அரசு மருத்துவமனைகளுக்கு
தேவையான உபகரணங்கள் வழங்குவது, ரத்த தானம் முகாம்கள் நடத்துவது
உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட
உதவிகள் செய்யும் பணியில் தொடர்ச்சியாக
ஈடுபட்டு வருகின்றனர்.
அரிமா மகேந்திரன்
அதன் தொடர்ச்சியாக ஓசூர் சிப்காட் – 2
தொழிற்பேட்டையில் உள்ள ரிக்கி பிளாஸ்டிக்
தனியார் நிறுவனத்தில் மாபெரும் ரத்த தானம் முகாம் நடைபெற்றது.
இந்த முகாமை ஓசூர் மேக்னம் அரிமா
சங்க தலைவர் மகேந்திரன் தொடங்கி
வைத்தார்.
அரிமா ரவிவர்மா
21-ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை
நடந்த இந்த முகாமை
மேக்னம் அரிமா சங்க முன்னாள்
மாவட்ட ஆளுநர் ரவிவர்மா நேரில்
வருகை தந்து பார்வையிட்டார்.
ஓசூர் சிப்காட்
அரிமா சங்க ரத்த வங்கி
இந்த ரத்த தானம் முகாமில் ஓசூர் சிப்காட்அரிமா சங்க ரத்த வங்கி மருத்துவர் தலைமையிலான குழுவினர் பங்கேற்று,
ரத்த தானம் பெறும் பணியில் ஈடுபட்டனர்.
ரத்த தானம் வழங்கும் தொழிலாளிகளின்
உடலின் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதிக்கப்பட்டது.
50 யூனிட் ரத்தம் தானம்
இதில் ரிக்கி பிளாஸ்டிக் நிறுவனத்தில் பணியாற்றும் ஆண், பெண் ஊழியர்கள் 50 பேர் பங்கேற்று ஆர்வத்துடன் ரத்த தானம் வழங்கினர்.
இந்த முகாமில் மொத்தம் 50 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது.
ரத்த தானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
மேலும் ஆப்பிள், வாழைப்பழம், பிஸ்கெட், பழரசம்
ஆகியவை வழங்கப்பட்டது.
இந்த மாபெரும் ரத்த தானம் முகாமில்
ரிக்கி பிளாஸ்டிக் நிறுவன
நிர்வாக இயக்குநர் அரிமா ஆர்.கே.ஜாக்கி,
நிர்வாக இயக்குநர் அரிமா ரஷிட் ஜாக்கி
ரிக்கி பிளாஸ்டிக் நிறுவன
பொது மேலாளர்(ஆபரேஷன்) வி.கார்த்திகேயன்,
ரிக்கி பிளாஸ்டிக் நிறுவன
நிர்வாக அதிகாரி சதீஷ் சப்லோக்
ஆகியோர் பங்கேற்றனர்.
ஓசூர் மேக்னம் அரிமா சங்க
செயலாளர்(நிர்வாகம்)
அரிமா என்.கண்ணன்.
செயலாளர்(திட்டம்)
அரிமா ஆர். ரவிசங்கர்.
பொருளாளர்
அரிமா பி. மாதேஷ்குமார்
ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு மற்றும்
ஒருங்கிணைப்பு பணிகளை செய்திருந்தனர்.