வைணு பாப்பு வானாய்வகம்
(Vainu Bappu Observatory)
தமிழ்நாட்டின் காவலூரில் அமைந்துள்ளது.
இது, இந்திய வானியற்பியல் நிலையத்தின் முதன்மை வானாய்வகம் ஆகும்.
இந்தியாவின் பெரிய வானியல் தொலைநோக்கிகளில் ஒன்று இங்கு இந்திய வான் இயற்பியல் ஆய்வகத்தால் (Indian Institute of Astrophysics) நிறுவப்பட்டுள்ளது.
இது அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியால் திறந்துவைக்கபட்டது.
இந்திய இயற்பியலாளர், இந்திய வானியல் முன்னோடியான வைணு பாப்பு அவர்களின் வானியல் பங்களிப்புக்காக இப்பெயர் சூட்டப்பட்டது.
ஆகஸ்ட் 10, 1927 –
தமிழ்நாட்டின் காவலூரில் அமைக்கப்பட்டுள்ள வைணு பாப்பு வானாய்வகத்தை நிருவுவதற்கு
முக்கிய காரணமான
இந்திய வானியியல் விஞ்ஞானி
”மணாலி கல்லாட் வைணு பாப்பு”
(Manali Kallat Vainu Bappu)
98 – வது பிறந்ததினம்.
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். ஆகஸ்ட். 10. -
ஆசியாவிலேயே மிகப்பெரிய
வானாய்வு தொலைநோக்கி
அதிநவீன தொலைநோக்கிகளை நிறுவியவர்.
விண்வெளியை நவீன தொலைநோக்கிகளால் ஆராயும் வசதிகளும் அதில் நிபுணத்துவம் பெற்றவர்களும் இந்தியாவில் இல்லை என்ற குறை ஒரு காலத்தில் இருந்தது.
அந்த குறையை போக்கும் விதமாக ஆசியாவிலேயே மிகப்பெரிய வானாய்வு தொலைநோக்கியை தமிழகத்தில் நிறுவியவர் ஒரு விஞ்ஞானி
அவர்தான் வைனு பாப்பு.
கேரளத்தின் தலச்சேரியை பூர்வீகமாகக் கொண்ட சுனன்னா பாப்பு ஆந்திர மாநிலத்தின் நிஜாமையா வான ஆய்வகத்தில் ஆய்வாளராக பணியாற்றினார். அவரது மகனாக சென்னையில் 1927 ஆகஸ்ட் 10 பிறந்தார் மணாலி கல்லட் வைனு பாப்பு.
சென்னை பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முதுநிலை பட்டம் பெற்ற பாப்பு
கல்வி உதவித்தொகை பெற்று
இங்கிலாந்து சென்று ஹார்டுவேர்டு பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படித்தார்.
“பாப்பு, போக், நியூகிரிக் வால் நட்சத்திரம்”
அப்போது தனது சக ஆராய்ச்சியாளர்களான
பார்ட் போக், கார்டன், நியூகிரர்க்
ஆகியோருடன் இணைந்து ஒரு புதிய வால் நட்சத்திரத்தை கண்டுபிடித்தார்.
அதற்கு ”பாப்பு, போக், நியூகிரிக் வால் நட்சத்திரம்” என்று பெயரிடப்பட்டது.
1952ல் பிஹெச்டி பட்டம் பெற்றவுடன்,
கார்னெகி மதிப்பூதியம் பெற்று, அமெரிக்காவின் பாலோமர் வானாய்வகத்தில் விஞ்ஞானியாக சேர்ந்தார்.
அங்கு பணியாற்றியபோது, அமெரிக்க விஞ்ஞானி
ஓலின் சாடோக் வில்சன்
உடன் இணைந்து, விண்மீன்களுக்கு இடையேயான தொலைவை கண்டறியும் தேற்றத்தை உருவாக்கினார்.
”வில்சன் பாப்பு விளைவு”
விண்மீன்களுக்கு இடையிலான தொலைவுகளை அளவிட அவற்றின் ஒளிக்கதிர் மாறுபாடு உதவும் என்பதை அவர்கள் நிரூபித்தனர்.
“அது வில்சன் பாப்பு விளைவு”என்று அழைக்கப்பட்டது.
நைனிடால் வானாய்வகம்
1953ல் வைனு பாப்பு நாடு திரும்பினார். உத்தரப்பிரதேச அரசின் நைனிடால் வானாய்வகத்தை மேம்படுத்தும் பணி பாப்புவிடம் ஒப்படைக்கப்பட்டது.
அந்த வான் ஆய்வகத்தின் இயக்குனராக விளங்கிய பாப்பு அதனை அபிவிருத்தி செய்தார்.
1960 இல் தமிழகத்தின் கொடைக்கானலில் இருந்த வானாய்வகத்தின் இயக்குனராக பாப்பு நியமிக்கப்பட்டார்.
அங்கு சூரிய ஒளியில் இயங்கும் சாதாரண தொலைநோக்கி மட்டுமே இருந்தது.
அதை நவீனப்படுத்தினார் பாப்பு.
ஜவ்வாது மலை காவலூர்
அப்போது, இரவிலும் வானைத் துல்லியமாக ஆராய புவியியல் ரீதியாக மிகப் பொருத்தமான இடத்தை அவர் பல்லாண்டு காலமாக தேடினார்.
அது உயரமான இடமாக இருப்பதுடன்,
மேகமூட்டம் இல்லாத இடமாகவும்,
சூழல் பாதிக்கப்படாத - ஒளி மாசு அற்ற பகுதியாகவும் இருந்தால் மட்டுமே,
வானில் உள்ள பொருட்களை மிகத் துல்லியமாக உற்று நோக்கி கண்காணிக்க முடியும்.
தனது தீவிர தேடுதலின் விளைவாக ஜவ்வாது மலையில் உள்ள காவலூர் என்ற இடத்தை கண்டறிந்தார் பாப்பு.
வைணு பாப்பு வானாய்வகம்
(Vainu Bappu Observatory)
தமிழ்நாட்டின் காவலூரில் அமைந்துள்ளது.
இது, இந்திய வானியற்பியல் நிலையத்தின் முதன்மை வானாய்வகம் ஆகும்.
இந்தியாவின் பெரிய
வானியல் தொலைநோக்கி
இந்தியாவின் பெரிய வானியல் தொலைநோக்கிகளில் ஒன்று இங்கு
இந்திய வான் இயற்பியல் ஆய்வகத்தால்
(Indian Institute of Astrophysics)
நிறுவப்பட்டுள்ளது.
இது அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியால் திறந்துவைக்கபட்டது.
இந்திய இயற்பியலாளர், இந்திய வானியல் முன்னோடியான வைணு பாப்பு அவர்களின் வானியல் பங்களிப்புக்காக இப்பெயர் சூட்டப்பட்டது.
இங்குள்ள 2.34 மீட்டர் விட்டமுடைய தொலைநோக்கி 1986-ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு விடப்பட்டது.
1968ஆம் ஆண்டு 38 செ.மீ. விட்டமுடைய ஒரு தொலைநோக்கியுடன்
காவலூர் தொலைநோக்கியகம் துவக்கப்பட்டது.
1971 ஆம் ஆண்டு வியாழன் கோளின் பரப்பில் ஏற்படும் மாறுபாடுகளைப் பற்றி ஆராய 61செ.மீ. விட்டமுள்ள எதிரொளிக்கும் தொலைநோக்கி நிறுவப்பட்டது.
இவ்விரு தொலைநோக்கிகளும் வானியல் கழகத்தின் பணிமனையில்
வடிவமைக்கப்பட்டவை ஆகும்.
1972ஆம் ஆண்டு மிகப்பெரிய 100 செ.மீ. விட்டமுடைய தொலைநோக்கி நிறுவப்பட்டது.
இது மிகவும் நுட்பமான ஒளியியல்,
மின்னணுவியல் சாதனங்களைக் கொண்ட தொலைநோக்கியாகும்.
இத்தொலைநோக்கியில் மிக கூடுதல் அளவு நிறம்பிரிக்கச் செய்யும் மேக நிறமானியும்,
ஒற்றை ஒளி பிரிப்புச் சாதனமும் அமைக்கப்பட்டிருந்தது.
இது பொருட்கள் வெளியிடும் நிறமாலையை ஆய்வு செய்ய உதவும்.
1985 ஆம் ஆண்டு 234 செ.மீ. விட்டமுள்ள தொலைநோக்கி நிறுவப்பட்டது.
இதன் மூலம் உலகின் பெரிய தொலை நோக்கிகள் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பிடித்தது.
-----------------------------------------------------.