இயற்பியலுக்கு ஒன்று,
வேதியியலுக்கு இன்னொன்று
என இரண்டு நோபல்
பரிசுகளைப் பெற்ற
உலகின் முதல் பெண்
சாதனையாளர்
மேரி கியூரி
ஏப்ரல் – 20 - 1902 –
பியேர், மேரி கியூரி ஆகியோர்
இரேடியம் குளோரைடைத் தூய்மைப்படுத்திய தினம்.
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். ஏப்ரல். 20. –
பியேர் கியூரி
பியேர் கியூரி
பிரெஞ்சு இயற்பியலாளர்.
அழுத்த மின் விளைவு,
காந்தவியல்,
படிகவியல் மற்றும்
கதிரியக்கக் கண்டுபிடிப்புகளின் முன்னோடிகளில் ஒருவர்.
1903 ஆம் ஆண்டில்
ஹென்றி பெக்கெரல்,
மேரி கியூரி
ஆகியோருடன் சேர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசினை பகிர்ந்து கொண்ட அறிவியலாளர்.
1903ஆம் ஆண்டு இவருக்கு ரேடியம்,பற்றிய இவர்களது ஆய்வு செய்தமைக்காக தாவி விருது வழங்கப்பட்டது.
கண்டுபிடிப்புகள்
அழுத்த மின்விளைவுத் தத்துவத்தைக் கண்டறிந்ததும் கியூரி சகோதரர்கள் பியூசோ மின் குவார்ட்சு மின்னோட்டமானியை உருவாக்கினர். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இக்கருவி மேரி கியூரியின் ஆரம்ப கால ஆய்வுகளுக்குப் பயன்பட்டது.
பிறகு
மைக்ரோபோன்,
குவார்ட்சு கடிகாரஙக்ள்,
மின்கருவிகள்
பலவற்றிலும்
இத்தத்துவம் பயன்பட்டது.
முனைவர் பட்டம் பெறுவதற்கு முன் காந்தக் குணங்களைக் கண்டுபிடிப்பதற்காக இவர்
'முறுக்குத் தராசு'
(Torsion Balance)
ஒன்றை உருவாக்கினார்.
காந்தத்தால்
தீவிரமாகப் பாதிக்கப்படும்,
ஓரளவு பாதிக்கப்படும்,
பாதிக்கப்படாத பொருள்கள்
பற்றிய ஆய்வுகள் இவருடைய
முனைவர் பட்டத்திற்கு இவரால் எடுத்துக்கொள்ளப்பட்டன.
'கியூரி விதி'
பாரா காந்தப் பொருள்கள் வெப்பத்தால் அடையும் மாற்றம் பற்றி இவரால் கண்டு பிடிக்கப்பட்ட விதிமுறை தான் இன்று 'கியூரி விதி' என்று அழைக்கப்படுகிறது.
கியூரி புள்ளி (Curie Point)
மாறுநிலை வெப்பநிலை அதிகமாகும்போது இரும்புக் காந்தப் பொருள்கள் தங்களுடைய காந்தத் தன்மையை இழந்துவிடும் என்பதையும் இவர் கண்டறிந்தார். இந்த வெப்ப நிலைதான் கியூரி புள்ளி (Curie Point) எனப்படுகிறது.
1895-ல் சில ஆய்வுகளுக்காக
மேரி கியூரி இவரைச் சந்தித்தபோது ஏற்பட்ட தொடர்பில்
அவரைத் திருமணம்
செய்துகொண்டார்.
துணைவியார் மேரி கியூரியுடன் இணைந்து
பொலோனியம்,
ரேடியம்
முதலிய தனிமங்களைத் தனிமைப் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
" கதிரியக்கம்"
(Radioactivity)
இருவரும் " கதிரியக்கம்" (Radioactivity) என்ற சொல்லை முதலில் பயன்படுத்தினர்.
அது தொடர்பான ஆய்விலும் சிறந்து விளங்கினர். மேரியின் முனைவர் பட்டத்திற்குரிய ஆய்வுகளுக்கு பியேர் கியூரியால் வடிவமைக்கப்பட்ட
'படிக மின் அழுத்தமானி'
மிகவும் பயன்பட்டது.
காந்தப் புலங்களைப் பயன்படுத்தி இவ்வாறு வெளியேறிய துகள்களில்
சில நேர் மின்தன்மை
உடையன என்றும் ,
சில எதிர்மின்தன்மை
உடையன என்றும்,
சில நடுநிலை மின்தன்மை
உடையன
என்றும் கண்டறிந்தனர்,
இவையே
ஆல்பாக் கதிர்கள்,
பீட்டாக் கதிர்கள்,
காமாக் கதிர்கள்
(Alpha, beta and gamma rays)
எனப்பட்டன.
கதிரியக்கத்தை அளக்கப் பயன்படும் அலகு கியூரி என்பபடும். ஒரு கியூரி என்பது நொடிக்கு 3.7x1010 சிதைவுகளை ஏற்படுத்தும் என்பது கணக்கீடு. 1910-ல் 'கதிரியக்கத் துறை காங்கிரஸ் '(Radiology Congress) என்ற அமைப்பு பியர் கியூரியைப் பெருமைப் படுத்த, கதிரியக்கத்தை அளக்க இந்த அலகை அறிமுகப்படுத்தியது.
மேரி கியூரி
இரண்டு நோபல் பரிசு
நோபல் பரிசு பெற்ற உலகின் முதல் பெண் மேரி கியூரி. இயற்பியலுக்கு ஒன்று, வேதியியலுக்கு இன்னொன்று என இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்றவர் இன்றுவரை இவர் மட்டுமே.
’பொலோனியம்’
முதலில் கதிர்வீசும் தனிமம்
ஒன்றை கண்டுபிடித்தனர்.
அது யுரேனியத்தை விட
அதிகமாக கதிர் வீசியது. தாய்நாடுநினைவாக அந்தத் தனிமத்துக்கு ’பொலோனியம்’ என பெயர்சூட்டினார் மேரிகியூரி. இது குறித்த ஆய்வுக்கட்டுரையில்தான் முதன்முதலாகக் ‘கதிரியக்கம்’ (Radioactive) என்ற சொல்லை அறிமுகப்படுத்தினார்.
மேரியின் ஆய்வு
வெற்றியின் மகிழ்ச்சி நீண்டநாள் நீடிக்கவில்லை.
1905-ம் ஆண்டு,சாலை விபத்து ஒன்றில் பியரி இறந்துபோக, மேரி மனம் உடைந்துபோனார்.
1911-ம்ஆண்டு மீண்டும்
மேரி கியூரிக்கு வேதியியலுக்கான நோபல்பரிசு அறிவிக்கப்பட்டது.
இந்த முறை பொலோனியம், ரேடியம் என்ற இரு புதிய கதிரியக்கத் தனிமங்களைக் கண்டுபிடித்ததற்காக வழங்கப்பட்டது.
மேரி கியூரிக்கு
இது ஊக்கமளிப்பதாக இருந்தது.
ரேடியம் குளோரைடு
ரேடியம் குளோரைடு
(Radium chloride)
RaCl2 என்ற மூலக்கூறு
வாய்பாடுடன் கூடிய
ரேடியம் மற்றும் குளோரின்
கலந்த கனிமச் சேர்மமாகும். இச்சேர்மமே முதன் முதலில் தூயநிலையில்
தனிமைப்படுத்தப்பட்ட
ரேடியம் சேர்மமாகும்.
பேரியத்தில் இருந்து ரேடியத்தை பிரித்தெடுக்கும் அசல் முறையில்
மேரி கியூரி மற்றும்
ஆந்திரே – லூயிசு டெபைமே
ஆகியோர் ரேடியம் குளோரைடை உபயோகப்படுத்தினர்.
ரேடியம் குளோரைடு கரைசலில் பாதரசத்தை எதிர்மின்வாயாக செயல்படவைத்து மின்னாற்பகுப்பு முறையில் முதன்முதலில் ரேடியம் உலோகம் தயார் செய்யப்பட்டது.
ரேடான் வாயு தயாரிக்கவும் ரேடியம் குளோரைடு உபயோகமாகிறது. இவ்வாயு புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது.
------------------------------------------.