கிருஷ்ணகிரி மாவட்டம்
சூளகிரியில்
சிறுதானிய திருவிழா
வேளாண் கண்காட்சி
மாவட்ட அளவிலான சிறுதானிய திருவிழா
மற்றும்
வேளாண் கண்காட்சி
14 விவசாயிகளுக்கு
ரூ.59 ஆயிரம் மதிப்பில்
வேளார் இடுபொருட்களை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் வழங்கினார்.
ஒசூர். பிப். 18. –
கிருஷ்ணகிரி மாவட்டம்,
சூளகிரி மணி மஹாலில்,
வேளாண்மைத்துறை சார்பாக, மாவட்ட அளவிலான சிறுதானிய திருவிழா மற்றும் வேளாண் கண்காட்சியை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் (18.02.2026) குத்து விளக்கு ஏற்றி
துவக்கி வைத்து, சிறுதானிய சாகுபடி
மற்றும் மதிப்புக்கூட்டுதல்
தொழில்நுட்பக் கையேடுகளை
வெளியிட்டார்.
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்ததாவது:
உணவு உற்பத்தியில்
நெல்லுக்கு அடுத்தபடியாக
ராகி,
சோளம்,
கம்பு,
சாமை,
குதிரைவாலி,
திணை
முதலிய சிறுதானியங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.
அரிசியை விட சிறுதானியங்களில் ஊட்டச்சத்து, விட்டமின்கள், இரும்புச்சத்து, கால்சியம் போன்ற சத்துக்களும் செரிக்கக்கூடிய நார்ச் சத்துக்களும் அதிகமாக இருப்பதால் இச்சிறுதானியங்கள் ஊட்டச்சத்து மிக்க தானியங்கள் என அழைக்கப்படுகின்றன.
ஊட்டச்சத்து மிக்க சிறுதானிய
உணவு வகைகளை நம் முன்னோர்கள் பயன்படுத்தியதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து தேக பலத்துடன் வாழ்ந்தனர்.
மேலும்,
மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தினால் ஏற்படும்
சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம்
போன்ற குறைபாடுகளை போக்கும்
அரிய குணங்களும் சத்துக்களும், சிறுதானியங்களில் நிறைந்து
காணப்படுகிறது.
இதனால், ஏழைகளின் உணவாக இருந்த சிறுதானியங்கள்
தற்போது நகர்வாழ் மக்களாலும்
விரும்பி தேடி வாங்கும் உணவு பொருளாக மாறியுள்ளது.
இதனால், சிறுதானியங்களின் விலையும் தேவையும் அதிகரித்துள்ளது.
தேசிய உணவு பாதுகாப்பு மற்றும்
ஊட்டச்சத்து இயக்கம்
எனவே, சிறுதானியங்களின் உற்பத்தியை பெறுக்குவதற்காக தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் என்ற திட்டத்தில்,
சிறுதானியங்களுக்காக
தனியாக திட்டம் வகுக்கப்பட்டு,
மத்திய அரசு 60 சதவீதம்
மாநில அரசு 40 சதவீதம்
நிதி உதவியில் திட்டம்
செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
2025-26-ம் ஆண்டில் இதுவரை
36,746 எக்டர் பரப்பில் ராகி,
3,293 எக்டர் பரப்பில் சோளம்,
780 எக்டர் பரப்பில் கம்பு,
162 எக்டர் பரப்பில் சாமை
ஆகிய சிறுதானியங்கள் சாகுபடி
செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டிலேயே கிருஷ்ணகிரி மாவட்டத்தில்தான் அதிகமாக ராகி விளைவிக்கப்படுகிறது.
மேலும்,
தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தில்,
ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்களுக்காக
ரூ.4.28 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு
திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில்
ராகி,
சோளம்,
சாமை
ஆகிய பயிர்களில் மானிய விலையில்
தொகுப்பு செயல் விளக்கங்கள் அமைத்தல்,
உயர்ரக சிறுதானிய விதைகளை 50% மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகித்தல்
சான்று விதை உற்பத்திக்காக ஊக்கத்தொகை வழங்குதல்,
நூண்ணூட்ட உரங்கள்,
உயிர் உரங்கள் 50% மானிய விலையில்
வழங்குதல்,
ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு சிறுதானிய இயக்க
திட்டத்தின் கீழ் புதிய ரகங்களுக்கான சிறுதானியங்கள் 100% மானியத்திலும்
சிறுதானியம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு
பின்னேற்பு மானியமாக
1 ஹெக்டருக்கு ரூ.4,000 வீதம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக துறை மூலம்
மதிப்பு கூட்டு மையம் பர்கூர் வட்டாரத்தில்
ரூ.18.75 லட்சம் மானியத்தில்
அமைக்கப்பட்டுள்ளது.
ராகி கொள்முதல் மையங்கள்
மேலும்,
ராகி சாகுபடி செய்யும் விவசாயிகள் உற்பத்தி செய்த ராகி தானியத்திற்கு நியாயமான விலை கிடைப்பதற்காக
தமிழ்நாடு அரசால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த வருடம்
6 இடங்களிலும்,
இந்த வருடம்
8 இடங்களிலும் நேரடி ராகி கொள்முதல்
மையங்கள் திறக்கப்பட்டு,
விவசாயிகளிடமிருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
ஒரு டன் ராகிக்கு ரூ.48,860 வீதம் கொள்முதல் செய்யப்படுகிறது.
சென்ற வருடம் 2600 டன் ராகியும்,
இந்த வருடம் (டிசம்பர் 2025 வரை)
960 டன் ராகி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
கூடுதலாக ராகி கொள்முதல் நிலையங்கள்
திறக்க விவசாயிகள் கோரிக்கை வைக்கும்பட்சத்தில் ராகி கொள்முதல் நிலையங்கள் திறக்க மாவட்ட நிர்வாகம்
தயாராக உள்ளது.
விவசாயிகள் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் மானிய திட்டங்களை பயன்படுத்தி,
உற்பத்தி செய்த ராகி தானியங்களை
நேரடி கொள்முதல் நிலையங்களில்
விற்பனை செய்து பயனடையலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து,
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள்,
14 விவசாயிகளுக்கு ரூ.59,000 மானியத்தில்
தார்ப்பாலின்,
மண்புழு உரம்,
பரம்பரகத் க்ரிஷி விகாஸ்
யோஜனா பெட்டகம்,
அசோலா பெட்,
கால்நடைகளுக்கான
குடற்புழு மாத்திரைகள்,
பட்டுப்புழு வளர்ப்பு கருவிகள்,
மரம் அறுக்கும் கருவி
உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களை வழங்கினார்.
முன்னதாக,
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள்,
சிறுதானிய விதைகள்,
வேளாண் இடுபொருட்கள்,
வேளாண் கருவிகள்,
பாரம்பரிய சிறுதானிய உணவு கண்காட்சி
ஆகியவற்றை பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில்,
வேளாண்மைத்துறை இணை இயக்குநர்
திரு.காளிமுத்து,
துணை இயக்குநர்கள்
திருமதி.தா.கலா
(வேளாண்மை),
திரு.சு.மோகன்
(வேளாண் வணிகம்),
வேளாண்மை துணை இயக்குநர் /
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை)
திருமதி.பா.ஏஞ்சலின்
பொன்ராணி,
வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர்
திரு.ரவி,
பையூர் மண்டல ஆராய்ச்சி நிலைய
பேராசிரியர் / தலைவர்
முனைவர்.கே.கீதா,
வேளாண்மை அறிவியல் நிலைய
தொழில்நுட்ப வல்லுநர் (உழவியல்)
திரு.எஸ்.உதயன்,
வட்டாட்சியர்
திரு.ரமேஷ்,
வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
திருமதி.விஜயா,
திருமதி.கலா,
சூளகிரி ஒன்றிய அட்மா தலைவர்
திரு.வெங்கடேஷ்.
மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள்,
விவசாயிகள், விஞ்ஞானிகள்
கலந்துகொண்டனர்.
------------------------------------------.