நேற்றைய வரலாறு - இன்றைய பாடம்
----------------------------------------------------------------
மனிதன் செய்த ஒரு பொருள் விண்ணில் உள்ள ஒரு பொருளில் விஞ்ஞானத்தால் இறங்கியது என்பது அறிவியலின் மகத்தான சாதனை.
பிப்ரவரி – 3 – 1966
சோவியத் விண்கலம் லூனா - 9 முதன்முதலில் சந்திரனில் தரையிறங்கிய தினம்.
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். பிப். 3. –
சந்திரனின் தரையில் இறங்கிய முதலாவது விண்கலம் லூனா 9
லூனா திட்டம் (Luna programme) என்பது சோவியத் ஒன்றியத்தினால் 1959-இலிருந்து 1976 வரை சந்திரனுக்கு அனுப்பப்பட்ட தானியங்கி விண்கலப் பயணங்களைக் குறிக்கும்.
லூனா என்பது ரஷ்ய மொழியில் சந்திரனைக் குறிக்கும்.
இப்பயணத் திட்டம் "லூனிக்" என்றும் சிலவேளைகளில் கூறப்படுவதுண்டு. பதினைந்து லூனாக்கள் வெற்றிகரமானவையாகும். இவை சந்திரனைச் சுற்றவோ அல்லது தரையிறங்கவோ அனுப்பப்பட்டவை ஆகும். சந்திரனின் தரையில் இறங்கிய முதலாவது விண்கலம் லூனா 9 ஆகும்.
இந்த லூனா விண்கலங்கள் சந்திரனில் வேதியியல் பகுப்பாய்வு, ஈர்ப்பு, வெப்பநிலை, மற்றும் கதிரியக்கம் போன்ற பல ஆய்வுகளை நிகழ்த்தி உள்ளன.
லூனா பயண வெற்றிகள்
லூனா 1: (ஜனவரி 2, 1959)
சந்திரனுடனான தாக்கத்தை இழந்ததில் சூரியனின் வட்டப்பாதையில் வீழ்ந்த முதலாவது விண்கலம் ஆனது.
லூனா 2: (செப்டம்பர் 12, 1959)
சந்திரனை வெற்றிகரமாக அடைந்த முதலாவது விண்கலம்.
லூனா 3: (அக்டோபர் 4, 1959)
சந்திரனைச் சுற்றி வந்து அதன் தொலைவுப் படத்தை பூமிக்கு அனுப்பியது.
லூனா 9: 1966-
ஜனவரி 31 -ஆம் தேதி
புவியிலிருந்து புறப்பட்டுச் சென்ற இவ் விண்கலமானது
பிப்ரவரி 3-ஆம் தேதி சந்திரனில் மெதுவாகத் தரையிறங்கியது.
மனிதன் செய்த ஒரு பொருள் விண்ணில் உள்ள ஒரு பொருளில் விஞ்ஞானத்தால் இறங்கியது என்பது அறிவியலின் மகத்தான சாதனை.
லூனா 10: (மார்ச் 31, 1966)
சந்திரனின் முதலாவது செயற்கை செய்மதி.
லூனா 17 (நவம்பர் 10, 1970) மற்றும்
லூனா 21 (ஜனவரி 8, 1973)
சந்திரனுக்கு தானியங்கி ஊர்திகளைக் கொண்டு சென்றது.
லூனா 16 (செப்டம்பர் 12, 1970),
லூனா 20 (பெப்ரவரி 14, 1972),
லூனா 24 (ஆகஸ்ட் 9, 1976),
ஆகியன மண் மாதிரிகளைச் சேகரித்து பூமிக்குக் கொண்டு வந்தன.
-------------------------------------------.