ஓசூர் மாநகராட்சி சார்பில்
அனைத்து தூய்மை பணியாளர்களின்
உடல் நலன் காக்க
சிறப்பு
இலவச மருத்துவ முகாம்
எம்எல்ஏ, மேயர்
பங்கேற்பு
ஓசூர். டிச. 14. –
எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்
ஓசூர் மாநகராட்சி சார்பில் நடந்த
அனைத்து தூய்மை பணியாளர்களுக்கான இலவச மருத்துவ முகாமில் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் பங்கேற்று தொடங்கி வைத்தனர்.
மேயர் எஸ்.ஏ.சத்யா
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில் பணியாற்றும் அனைத்து தூய்மை பணியாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம் காமராஜ் காலனி, கே.ஏ.பி. மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த முகாமில் மேயர் எஸ்.ஏ.சத்யா தலைமை வகித்தார். துணைமேயர் ஆனந்தய்யா, மாநகர சுகாதார குழு தலைவர் என்.எஸ்.மாதேஸ்வரன், ஆணையாளர் ஸ்ரீகாந்த்,
மாநகர நல அலுவலர் அஜிதா
ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், பங்கேற்று குத்துவிளக்கேற்றி இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள்
ஓசூர் மாநகராட்சியில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளான மீரா மருத்துவமனை, செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவமனை,
குணம் மருத்துவமனை, வரம் மருத்துவமனை, வாசன் கண் மருத்துவமனை, வரம் மருத்துவமனை உட்பட பல மருத்துவமனைகளில் பணியாற்றும் 100-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள்,
இதர மருத்துவ பணியாளர்கள் பங்கேற்று சிகிச்சை அளித்தனர்.
1000 பேருக்கு அதிகமானோர் பங்கேற்பு
இதில் ஓசூர் மாநகராட்சியில் பணியாற்றும் நிரந்தர தூய்மைப்பணியாளர்கள் 119 பேர்கள், ஒப்பந்த தூய்மைப்பணியாளர்கள் 679 பேர்கள் மற்றும் மாநகராட்சியின் இதர பணியாளர்கள் 200 பேர்கள், உறவினர்கள் 200 பேர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று சிகிச்சை பெற்றனர்.
ஓசூர் மாநகராட்சி
4 மண்டலங்கள்
இந்த முகாம் ஓசூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்கள் நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, முதலில் சிகிச்சைக்கு வந்தவர்களின் பெயர் பதிவு செய்யப்பட்டது. பின்பு ஓ.பி.சீட்டு வழங்கப்பட்டு, அவர்களின் உயரம், எடை
மற்றும் உடலின் சர்க்கரை அளவு,
ரத்த அழுத்தம் ஆகியவை பரிசோதனை செய்து, பதிவு செய்யப்பட்ட பின்பு இதர பிரிவுகளில் சிகிச்சை பெற
அனுமதிக்கப்பட்டனர்.
20-க்கும் அதிகமான பிரிவுகள்
இதில் ஆண்கள் பிரிவு, பெண்கள் பிரிவு,
குழந்தைகள் பிரிவு, தாய்மார்கள் பிரிவு,
பல் சிகிச்சை பிரிவு, காது மூக்கு
தொண்டை பிரிவு, கண் சிகிச்சை பிரிவு, காசநோய் மற்றும் தொழுநோய் பிரிவு, பிஸியோதெரபி பிரிவு,
சித்தா பிரிவு, ஈசிஜி, எக்கோ ஆண்கள் பிரிவு, ஈசிஜி, எக்கோ பெண்கள் பிரிவு, சோதனைக் கூடம் மற்றும் மருந்து மாத்திரைகள் வழங்கும் பிரிவு என மொத்தம் 20-க்கும் மேற்பட்ட
பிரிவுகள் அமைக்கப்பட்டு,
உடல் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
சித்தா மருத்துவ பிரிவு
சித்தா பிரிவில் மருத்துவர் ஜோஸ்பின் ரெக்ஸி தலைமையிலான குழுவினர் தூய்மைப்பணியாளர்களுக்கு சிகிச்சை அளித்து சித்த மருந்துகளை வழங்கினர்.
பிசியோதெரபி
மருத்துவர் தீபன், மருத்துவர் சுஜாதா பிரியதர்ஷினி, செவிலியர்கள் யுகேஸ்வரி
ஆகியோர் அடங்கிய குழுவினர் பிசியோதெரபி
சிகிச்சை அளித்தனர்.
மீரா மல்டி ஸ்பெஷலிட்டி மருத்துவமனை
தலைமை மருத்துவ இயக்குநர்
டாக்டர் டி.டி.எஸ்.பாரி,
நிர்வாக இயக்குநர் டாக்டர் அம்பிகா பாரி தலைமையிலான 12 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் பங்கேற்று சிகிச்சை அளித்தனர்.
ஒருங்கிணைப்பாளர்
சீனியர் மேனேஜர் கோபாலகிருஷ்ணன் மற்றும் மார்க்கெட்டிங் துறை ஜெரிம் ஆகியோர் பங்கேற்றனர்.
மாநகராட்சி நல அலுவலர் அஜிதா
இதுகுறித்து மாநகராட்சி நல அலுவலர் அஜிதா
கூறியதாவது, இந்த முகாமில் மாநகராட்சியில் பணியாற்றும் நிரந்தர மற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள், அவர்களின் உறவினர்கள் மற்றும் இதர பணியாளர்கள், என மொத்தம் 1000-க்கும் அதிகமானவர்களின் நலனுக்காக இந்த இலவச மருத்துவ
முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருந்து 100-க்கும் அதிகமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பங்கேற்று சிகிச்சை
அளித்தனர்.
இந்த இலவச மருத்துவ முகாமில்
பொது மருத்துவம், காது, மூக்கு, தொண்டை பிரிவு, பெண்கள் நலம், குழந்தைகள் நலம்,
தோல் நோய் பிரிவு, கண்நோய் பிரிவு, எலும்பு சிகிச்சை பிரிவு, பல் நோய் பிரிவு, மனநலம் பிரிவு, சித்த மருத்துவ பிரிவு, தொற்று மற்றும் தொற்றா நோய் பிரிவுக்கான மருத்துவ சிகிச்சைகள், அல்ட்ராசவுண்டு, காசநோய்க்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்கப்பட்டது.
இங்கு சிகிச்சை பெற்றவர்களுக்கு தேவைப்படும் உயர் சிகிச்சையும் இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த இலவச மருத்துவ முகாமில்
மாமன்ற உறுப்பினர்கள், சுகாதார அலுவலர்,
சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பலர் கலந்து
கொண்டனர்.