கிருஷ்ணகிரி மாவட்டம்
சூளகிரி சின்னாறு அணை,
துரை ஏரி,
சின்னஎலசகிரி ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றும் பணிகள்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள்
நேரில் பார்வையிட்டு ஆய்வு
ஓசூர். அக். 24. –
கிருஷ்ணகிரி மாவட்டம்,
சூளகிரி சின்னாறு அணை,
சூளகிரி துரை ஏரி
ஒசூர் சின்னஎலசகிரி காமராஜர் நகர் ஏரி
ஆகிய பகுதிகளில், வடகிழக்கு பருவமழையையொட்டி, ஏரிகளில் உள்ள நீரின் அளவு மற்றும் உபரிநீர் வெளியேற்றும் பணிகளை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் அக்டோபர் 24-ம் தேதியன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வடகிழக்கு பருவ மழை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி,
கெலவரப்பள்ளி அணை,
கிருஷ்ணகிரி அணை,
சூளகிரி சின்னாறு அணை,
ஆகிய அணைகள் நிரம்பியுள்ளது.
இந்நிலையில் அணைகளின் பாதுகாப்பு கருதி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள்
ஒசூர் சின்னஎலசகிரி காமராஜர் நகர் ஏரியை
நேரில் பார்வையிட்டு
ஆய்வு மேற்கொண்டார்.
சூளகிரி துரை ஏரி
அதனைத்தொடர்ந்து, சூளகிரி துரை ஏரியை பார்வையிட்டு ஏரியின் முழு கொள்ளவு,
கெலவரப்பள்ளி அணையிலிருந்து துரை ஏரிக்கு
வரும் நீரின் அளவு மற்றும் ஏரி நிரம்பினால் உபரி நீர் வெளியேற்றும் பகுதியை பார்வையிட்டு,
நீர் வெளியேற்றும் பகுதியை தூர்வாரி நீர் எளிதாக வெளியேற்றுவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை, நீர்வளத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
சூளகிரி சின்னாறு அணை
தொடர்ந்து, சூளகிரி சின்னாறு அணையை பார்வையிட்டு அணையின் முழு கொள்ளளவான 32.80 அடி நீர் நிரம்பியுள்ளதையடுத்து,
அணைக்கு தற்போது வடக்கிழக்கு பருவமழையொட்டி, அணையை சுற்றியுள்ள பகுதிகளான
பேரிகை,
அத்திமுகம்,
காமன்தொட்டி
உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அணைக்கு
13 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிற நிலையில்
13 கனஅடி நீர் வெளியேற்றம்
செய்யப்படும் பணிகளை பார்வையிட்டு
ஆய்வு மேற்கொண்டார்.
மேலும்,
அணையிலிருந்து விவசாய பாசனத்திற்கு
வழங்கப்படும் நீரின் அளவு மற்றும்
அணையின் பாதுகாப்பு மற்றும்
மணல் மூட்டைகள் தயார்நிலையில் உள்ளது குறித்த முன்னேற்பாடுகளை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் நேரில் பார்வையிட்டு
ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வு பணியின் போது,
நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர்
திரு.மோகன்ராஜ்,
வட்டாட்சியர்கள்
திரு.குணசிவா,
திரு.ரமேஷ்,
வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
திருமதி.கலா,
திரு.கார்த்திக்
உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
------------------------------------------------------.