மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்களின் ஆணைக்கிணங்க,
"நலம் காக்கும் ஸ்டாலின்"
திட்ட மருத்துவ முகாம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்
அஞ்செட்டி வட்டம்
அரசுப்பள்ளியில்
நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்
தளி சட்ட மன்ற உறுப்பினர்
திரு. டி. ராமச்சந்திரன்
அவர்கள் பங்கேற்பு
ஓசூர். டிச. 21. –
அஞ்செட்டி வட்டம் அரசு மேல் நிலைப் பள்ளியில் டிசம்பர் 20-ம் தேதியன்று
நலம் காக்கும் ஸ்டாலின்
திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த முகாமுக்கு
மாவட்ட சுகாதார அலுவலர்
திரு. ஜி. மகேஷ் குமார்
தலைமையில்,
தளி வட்டார மருத்துவ அலுவலர்
முன்னிலையில்
சிறப்பு விருந்தினராக
தளி சட்டமன்ற உறுப்பினர்
திரு. டி ராமச்சந்திரன்
அவர்கள் கலந்து கொண்டு
முகாமை தொடங்கி வைத்தார்.
தளி சட்டமன்ற உறுப்பினர்
பேசும் போது..
தமிழக முதலமைச்சர் அவர்கள் மக்கள் மருத்துவ வசதி பெறும் வகையில்
நலம் காக்கும் ஸ்டாலின்
திட்டத்தை கொண்டு வந்து
மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில்
செயல்படுத்தி கொண்டு வருகிறார்
நமது முதலமைச்சர் என்று கூறினார்.
இந்த முகாமில்
கெலமங்கலம்
வட்டார சுகாதார அலுவலர்
டாக்டர். ராஜேஷ் குமார்
அவர்கள் தலைமையில்
மருத்துவர்கள் செவிலியர்கள் பங்கேற்று
மருத்துவ பரிசோதனை செய்து
சிகிச்சையளித்தனர்.
முகாமில் மலைப்பகுதியைச் சேர்ந்த
கிராமங்களில் உள்ள தாய்மார்கள்,
பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள்
ஆகியோர் கலந்து கொண்டு
உடல் பரிசோதித்து மருத்துவர்களின்
ஆலோசனை பெற்றார்கள்
இம்மருத்துவ முகாமில்
பொதுமக்களுக்கு தேவையான இரத்த பரிசோதனை,
கர்ப்பிணி தாய்மார்களுக்கு
ஸ்கேன் பரிசோதனை,
X-Ray, ECG, ECHO, Ultra Sound,
கண் பரிசோதனை மற்றும்
மகப்பேறு மருத்துவம்
போன்ற 17 வகையான
சிறப்பு நிபுணர்களைக் கொண்டு
பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இம்முகாமில்
தொற்றா நோய்,
உயர் இரத்த அழுத்தம்,
கண் பார்வை பரிசோதனை,
சிறுநீரக பரிசோதனை,
இதய பரிசோதனை மற்றும்
நரம்பியல் மருத்துவம்,
சித்த மருத்துவம்,
பெண்களுக்கான மார்பக புற்றுநோய் பரிசோதனை
பல் சிகிச்சை
உட்பட 17 வகையான சிறப்பு மருத்துவர்கள்
மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அனைத்து பொதுமக்களுக்கும்
இலவசமாக உடல் பரிசோதனைகள் மற்றும்
இருதய பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும்,
பொதுமக்களுக்கு
முதலமைச்சர் காப்பீட்டு திட்ட அட்டை
மற்றும்
மாற்றுத்திறனாளிகளுக்கும்
மற்றும்
தொழிலாளர்களுக்கும்
இலவசமாக அடையாள அட்டைகள்
வழங்கப்பட்டது.
இந்த முகாமில்
முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள்
ஒன்றிய முன்னாள் கவுன்சிலர்கள்
முன்னாள் ஊராட்சி தலைவர்கள்
அனைத்துக் கட்சி பிரமுகர்கள்
கலந்து கொண்டார்கள்.
------------------------------------.